என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 113075
நீங்கள் தேடியது "மெசஞ்சர்"
ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Messenger
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது. எனினும், இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
இந்த அம்சத்தை இயக்க மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
முன்னதாக டார்க் மோட் வசதி நிலா எமோஜியை அனுப்பினால் செயல்படும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டது. ஜனவரி மாத வாக்கில் இந்த அம்சம் சில நாடுகளில் வழங்கப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் சேவை முடங்கியதற்கான காரணம் அது கிடையாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்று்ம மெசஞ்சர் சேவை நேற்றிரவு சில மணி நேரங்களுக்கு முடங்கியது. இந்நிலையில், சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் குறுந்தகவல் அனுப்புவதில் பயனர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதே போன்று ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவைக்கும் தடங்கல் ஏற்பட்டது. பயனர்கள் சேவை முடக்கம் பற்றி வலைதளங்களில் தெரிவிக்க துவங்கினர்.
இதற்கு ஃபேஸ்புக் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் சிலவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த பிரச்சனையை மிக விரைவில் சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சேவை முடங்கியதிற்கு டிஸ்ட்ரிபியூட்டெட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பிரச்சனையை விரைவில் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என எண்ணியவர்களுக்காக ஃபேஸ்புக் தகவல் வழங்கியிருக்கிறது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகள் சீராக வேலை செய்தாலும், போஸ்ட்களை அப்லோடு செய்வதில் சில பயனர்கள் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். பிரபல சமூக வலைதளங்களின் சேவை முடங்கியதை தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர்.
மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #Facebook #WhatsApp
ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தொடர்ந்து தனித்தனியே இயங்கினாலும், இதன் உள்கட்டமைப்பு கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மூன்று செயலிகளுக்கிடையே நடைபெறும் சாட்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஒப்புதலை ஃபேஸ்புக் இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவைகளை அதிகளவு பயன்படுத்த வைக்கலாம் என ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
குறுந்தகவல் அனுபவத்தை பொருத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது குறுந்தகவல் செயலிகளை முழுமையாக என்க்ரிப்ட் செய்து அவற்றை ஒவ்வொரு நெட்வொர்க் மூலம் மிக எளிமையாக தகவல் பரிமாற்றம் செய்ய வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்லபடுத்தும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் மற்ற இரு செயலிகளை நிச்சயம் பயன்படுத்துவர் என கருதமுடியாது. சில பயனர்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டு மெசஞ்சரை இன்ஸ்டால் செய்யாமல் இருக்கலாம்.
மூன்று சேவைகளையும் இணைக்கும் போது வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற செயலிகளான மெசஞ்சர் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும். இதுதவிர ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்க முடியும்.
இதன் மூலம் ஃபேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஃபேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான ஆப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை பலப்படுத்த முடியும்.
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். #Facebook #messenger
ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பூமராங் வீடியோ, புதிய செல்ஃபி மோட் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. #Facebook #messenger
ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மெசஞ்சர் செயலியில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக மெசஞ்சர் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.
அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. எனினும், இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook
ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வீடியோ வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும்.
நேரலை வீடியோக்களை பார்க்கும் பயனர்கள், அவர்களுக்கு விரும்பிய பொருட்களை அவர்களது சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின், அதை வாங்கலாம். பயனர்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்கிரீஷாட் படத்தை மெசஞ்சர் வழியே விற்பனையாளருக்கு அனுப்பி, சாட் செய்து பின் பண பரிமாற்றம் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம்.
புது ஷாப்பிங் அம்சம் தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்ட சில ஃபேஸ்புக் பேஜ்களில் மட்டும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. தாய்லாந்து ஃபேஸ்புக் பயனர்கள் நேரலை வீடியோ மூலம் விற்பனை செய்வது பயன் தரும் வகையில் இருந்தது என தெரிவித்து இருக்கிறன்றனர்.
வீடியோ மூலம் பொருட்களை விளக்கும் போது அவற்றின் பயன்பாடு பற்றி, வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக் தாய்லாந்து மார்கெட் பிளேஸ் அம்சத்தில் ஹோம் ரென்டல்ஸ் போன்ற அனுபவத்தை வழங்க திட்டமிட்டு வருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் தளத்தின் மார்கெட் பிளேஸ் அம்சம் உலகின் மற்ற பகுதிகளை விட தாய்லாந்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது என ஃபேஸ்புக் அம்சங்களுக்கான மேளாலர் மயான்க் யாதவ் தெரிவித்திருக்கிறார். லைவ் ஷாப்பிங் அம்சத்திற்கான சோதனை தற்சமயம் நடைபெற்று வருகிறது. லைவ் ஷாப்பிங் விவரத்தை ஃபேஸ்புக் பேஜஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும்.
இதன் மூலம் ஃபேஸ்புக் பேஜ்களில் இருப்பவர்கள் நேரலை வீடியோவை உடனுக்குடன் பார்த்து, குறிப்பிட்ட பொருட்களை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். தங்களுக்கு நேரலையில் வரும் பொருள் பிடித்திருக்கும் பட்சத்தில் மெசஞ்சரில் சாட் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். #Facebook
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Messenger
வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.
ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். #Messenger #Facebook
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X