search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்ரோசாஃப்ட்"

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Microsoft



    சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக சொந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

    சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சொந்தமாக இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் பட்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    புதிய இயர்பட்ஸ்களை மைக்ரோசாஃப்ட் மொரிசன் என்ற பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் வானியல் சார்ந்த பெயர்களை சூட்டுவதை மைக்ரோசாஃப்ட் வாடிக்கையாக கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

    இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருகிறது. இந்த இயர்பட்ஸ்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் கார்டணா வசதி நிச்சயம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதியை கொண்டு மொபைலில் தகவல்களை மிக எளிமையாக வாசிக்க முடியும்.

    சிரி, அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் இயர்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மைக்ரோசாஃப்ட் சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை எந்தளவு வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புகைப்படம் நன்றி: thurrott
    இணையதளத்தில் போலி செய்திகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டறிந்து தெரிவிக்கும் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. #Microsoft



    ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர நிறுவனங்களுக்கு போலி செய்திகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் போலி செய்திகளை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    அந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போலி செய்திகளை கண்டறிந்து அவற்றை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது. இதற்கென மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நியூஸ்கார்டு (NewsGuard)  எனும் அம்சத்தினை தனது எட்ஜ் மொபைல் பிரவுசரில் வழங்கியிருக்கிறது.



    புகைப்படம் நன்றி: RACHEL KRAUS

    மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருக்கும் புதிய அம்சம் போலி செய்திகளை கண்டறிந்து தெரிவிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெக்-கிரன்ச் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கான எட்ஜ் பிரவுசரில் நியூஸ்கார்டு எனும் அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சம் தானாக செயல்படுத்தப்படவில்லை. எனினும், மைக்ரோசாஃப்ட் தனது வாடிக்கையாளர்களை செட்டிங் மெனு சென்று இதனை ஆக்டிவேட் செய்யக் கோருகிறது. செயலியினுள் நியூஸ் ரேட்டிங் எனும் அம்சத்தை பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தினை எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: RACHEL KRAUS

    தற்சமயம் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்படலாம். போலி செய்திகளை கண்டறிவதோடு மட்டுமின்றி, இந்த சேவையை கொண்டு வலைதளத்தின் நற்மதிப்பை பறைசாற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் பயன்படுத்தும் வலைதளங்களின் தரவுகளை மதிப்பீடு செய்து தெரிவிக்கும்.

    "பாதுகாப்பான பிரவுசிங் என்பது வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல்களை வழங்குவது தான். அந்த வகையில் நியூஸ்கார்டு சேவையின் மூலம் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் செயலிகளில் சரியான தகவல்களை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது" என மைக்ரோசாஃப்ட் நிறுவன மேலாளர் மார்க் வாடியர் தெரிவித்தார்.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Microsoft #laptop



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய சர்ஃபேஸ் கோ துவக்க விலை ரூ.38,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ லேப்டாப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த லேப்டாப் ஆகும். இன்டெல் பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.



    இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ சாதனம் இந்தியாவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. #SurfaceGo #Microsoft



    ஆப்பிள் ஐபேட் ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனங்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சர்பேஸ் கோ சாதனத்திற்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் சர்பேஸ் கோ விலை ரூ.38,599 முதல் துவங்குகிறது.

    8.3 எம்.எம். அளவில் 0.52 கிலோ எடை கொண்டிருக்கும் சர்பேஸ் கோ சாதனத்தில் 10-இன்ச் டிஸ்ப்ளே மாடல் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. சர்பேஸ் கோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.38,599 என்றும் 8 ஜி.பி. ரேம்ஸ 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சர்பேஸ் கோ டைப் கவர் (பிளாக்) விலை ரூ.8,699 என்றும் சிக்னேச்சர் டைப் கவர் விலை ரூ.11,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2-இன்-1 சாதனம் சர்பேஸ் பென் உடன் வழங்கப்படுகிறது.



    புதிய சர்பேஸ் பென் 4,096 லெவல் பிரெஷர் சென்சிடிவிட்டி மற்றும் 3:2 ரெசல்யூஷன் கொண்ட பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 7த் ஜெனரேஷன் இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4415Y கொண்டு இயங்கும் சர்பேஸ் கோ டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

    புதிய சர்பேஸ் கோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் 9 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சர்பேஸ் கனெக்ட் வசதி சாதனத்தை சார்ஜ் மற்றும் டாக் செய்ய வழங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. டைப்-சி 3.1, ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    வீடியோ கால் மேற்கொள்வோருக்கு சர்பேஸ் கோ 5 எம்.பி. ஹெச்.டி. கேமராவும், ஆட்டோ-ஃபோகஸ் வசதி கொண்ட 8 எம்.பி. ஹெச்.டி. கேமரா மற்றும் டூயல் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது. 
    அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. #Microsoft



    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் மிதப்பு மிக்க நிறுவனங்களில் முதன்மை இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ம் ஆண்டில் இருந்து முதன்மையிடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன மதிப்பு 75330 கோடி டாலர்களாக இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆகஸ்டு மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக உருவெடுத்த நிலையில், தற்சமயம் ஆப்பிள் நிறுவன மதிப்பு 74680 கோடி டாலர்களாக சரிந்துள்ளது. புதிய ஐபோன் மாடல்கள் எதி்ர்பார்த்த அளவு விற்பனையாகாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் 73660 கோடி டாலர்கள் மதிப்பு பெற்று மூன்றாவது இடத்திலும் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனம் 72550 கோடி டாலர்கள் மதிப்பு பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடம் பெற்று இருக்கும் நிலையில், சிலிகான் வேலியின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் ஆல்ஃபாபெட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக இருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தகவல் திருட்டு விவகாரங்களில் சிக்கித்தவிக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் கிளவுட் சேவைகள் மற்றும் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். 

    கிளவுட், கேமிங் மற்றும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களின் விற்பனை மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மொத்தம் 2910 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது, இதில் 2019 முதல் காலாண்டு வருமானம் மட்டும் 880 கோடி ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம் மட்டும் 34 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் நிலையில், வருமானம் 19 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ப்ரோ 6, சர்ஃபேஸ் லேப்டாப் 2, சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 மற்றும் புதிய சர்ஃபேஸ் ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Microsoft



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் ப்ரோ 6, சர்ஃபேஸ் லேப்டாப் 2, சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 மற்றும் புதிய சர்ஃபேஸ் ஹெட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    சர்ஃபேஸ் ப்ரோ 6 மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் குவாட் கோர் பிராசஸர்களுடன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள் சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    சர்ஃபேஸ் லேப்டாப் 2 மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் குவாட் கோர் பிராசஸர்களுடன் பிளாட்டினம், பர்கன்டி மற்றும் கோபால்ட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் 14.5 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் வேகமான மற்றும் சத்தமில்லா டைப்பிங் அனுபவம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 6 (2018) சிறப்பம்சங்கள்

    - 12.3 இன்ச் 2736x1824 பிக்சல் 3:2 பிக்சல் சென்ஸ் 10 பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - 8th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், UHD கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. அல்லது 16 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. (எஸ்.எஸ்.டி)
    - 8.0 எம்.பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி
    - 5.0 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி
    - வைபை, ப்ளூடூத், ஃபுல்-சைஸ் யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர், மினி டிஸ்ப்ளே போர்ட்
    - 1.6W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ பிரீமியம், ஸ்டீரியோ மைக்ரோபோன்
    - அதிகபட்சம் 13.5 மணி நேர வீடியோ பிளேபேக்



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 2 சிறப்பம்சங்கள்

    - 13.5 இன்ச் 2256x1504 பிக்சல், பிக்சல் சென்ஸ் 10 பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 8th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், UHD கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. அல்லது 16 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. (எஸ்.எஸ்.டி)
    - விண்டோஸ் 10
    - 720 பிக்சல் ஹெச்.டி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ மைக்ரோபோன், ஆம்னிசோனிக் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம்
    - வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர், மினி டிஸ்ப்ளே போர்ட், சர்ஃபேஸ் கனெக்ட்
    - அதிகபட்சம் 14.5 மணி நேர வீடியோ பிளேபேக்

    சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 ஆல்-இன்-ஒன் பி.சி. 50% அதிக கிராஃபிக்ஸ் செயல்திறன், 28" பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி.-சி சப்போர்ட், எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் பில்ட்-இன் கேமிங்-கிளாஸ் செயல்திறன் கொண்டுள்ளது. இந்த கம்ப்யூட்டருடன் சமீபத்திய சர்ஃபேஸ் பென் சாதனத்துடன் வருகிறது. புதிய சர்ஃபேஸ் பென் டில்ட் ஸ்டேபிலிட்டி மற்றும் 4096 பிரெஷர் கொண்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 சிறப்பம்சங்கள்

    - 28 இன்ச் 4500x3000 பிக்சல், பிக்சல்சென்ஸ் மல்டி-டச் 3:2 டிஸ்ப்ளே
    - இன்டெல் கோர் 7th Gen i7-7820HQ பிராசஸர்
    - NVIDIA GeForce GTX 1060 6 ஜி.பி. GDDR5 கிராஃபிக்ஸ் / GTX 1070 8 ஜி.பி. GDDR5 கிராஃபிக்ஸ்
    - 16 ஜி.பி. அல்லது 32 ஜி.பி. ரேம்
    - 1000 ஜி.பி. அல்லது 2000 ஜி.பி. சாலிட்-ஸ்டேட் டிரைவ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - சர்ஃபேஸ் பென், ஜீரோ கிராவிட்டி ஹின்ஜ்,, TPM 2.0 சிப்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ 2.1 ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், டூயல் மைக்ரோபோன்கள்
    - 4 x யு.எஸ்.பி. 3.0, ஃபுல்-சைஸ் எஸ்.டி. கார்டு ரீடர், 1 x யு.எஸ்.பி.-சி, 1 ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட்
    - வைபை, ப்ளூடூத், எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் பில்ட்-இன்



    புதிய சர்ஃபேஸ் ஹெட்போன்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மற்றும் ஸ்மார்ட் ஹெட்போன்களாக இருக்கின்றன. இதில் தரமான ஆடியோ மற்றும் 40 எம்.எம். ஃப்ரீ எட்ஜ் டிரைவர், ஹேன்ட்ஸ்-ஃப்ரீ காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நாய்ஸ் கான்செலேஷன், ஆட்டோமேடிக் பாஸ் மற்றும் பிளே அம்சம் கொண்டுள்ளது.

    இத்துடன் பில்ட்-இன் கார்டனா டிஜிட்டல் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் யு.எஸ்.பி.-சி கனெக்டர் மூலம் சார்ஜிங் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ கனெக்டர் உள்ளிட்டவை கொண்டுள்ளது. இதன் பேட்டரி 15 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாதனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதிய சர்ஃபேஸ் சாதனம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Microsoft
     


    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தற்போதைய சர்ஃபேஸ் நோட்புக் மாடல்களுக்கு புதிய சர்ஃபேஸ் ப்ரோ மற்ரும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பாக்கெட் சர்ஃபேஸ் சாதனம் ஆன்ட்ரோமெடா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    முன்னதாக மலிவு விலை சர்ஃபேஸ் கோ டேப்லெட் மாடலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஹார்டுவேர் சார்ந்த அப்கிரேடுகளை எதிர்பார்க்கலாம். 

    அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ மாடலில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய பிராசஸர்கள், பெரிய பேட்டரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான சர்ஃபேஸ் லேப்டாப் மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டூயல்-டிஸ்ப்ளே சர்ஃபேஸ் சாதனத்தை தனது புதிய நோட்புக் மாடல்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இரண்டு திரைகளுடன் இந்த சாதனம் மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
    நோயாளிகளுக்கு இதய நோய் வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அப்பல்லோ மருத்துவமனை பயன்படுத்துகிறது. #microsoftai #ApolloHospitals


    உலக தொழில்நுட்ப சந்தையில் வெளிவரும் ஒவ்வொரு சிறுசிறு அறிவிப்பும் என்றோ ஒருநாள் மிகப்பெரும் மாற்றத்தையும், நம்மை வியக்கவைக்கும் வகையிலும் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சிறு அறிவிப்புகள் இன்று பல்வேறு முக்கிய திருப்பங்களுக்கான செய்திகளாகி வருகின்றன. 

    செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி போன்ற சொற்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை நமக்கு புதிதாய் இருந்த நிலையில், இன்று நமது ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க இரு தொழில்நுட்பங்களும் அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க துவங்கியிருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சமீபத்திய திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் முக்கிய அங்கமாகியுள்ளன.
     


    இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து உடல்நலம் சார்ந்த ஏ.ஐ. நெட்வொர்க் எனும் திட்டத்தின் கீழ் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய மென்பொருள் இதயம் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியும். மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயங்குகிறது. மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது. #microsoftai #ApolloHospitals
    இந்தியாவில் X மற்றும் XII வகுப்பு கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்திருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. #cbse #MicrosoftEdu


    இந்திய பள்ளிகளில் நடத்தப்படும் X மற்றும் XII வகுப்பு தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் சி.பி.எஸ்.இ. இணைந்திருக்கிறது. இதன் மூலம் கேள்வித்தாள்கள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த திட்டம் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு 847 மையங்களில் மொத்தம் 4000 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஆஃபீஸ் 365 மென்பொருள் மூலம் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முழு நடவடிக்கைகளையும் டிராக் செய்ய முடியும்.

    முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதோடு அனைத்து வழிமுறைகளும் தானாக நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் கேள்வித்தாள்களை டவுன்லோடு செய்ய முடியும் என்பதோடு இவை இரண்டடுக்கு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 



    கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் மற்றும் வாட்டர்மார்க் செய்து ஆஃபீஸ் 365 அம்சங்களை பயன்படுத்துகிறது. வாட்டர்மார்க்-இல் ஒவ்வொரு தேர்வு மையத்தின் குறியீடு இடம்பெற்றிருக்கும் என்பதால் எளிமையாக டிராக் செய்ய முடியும். ஒருவேளை அனைத்தையும் கடந்து கேள்வித்தாள் லீக் ஆகும் பட்சதித்ல் அதனை எளிதில் டிராக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. தேர்வு கண்காணிப்பாளர் கேள்வித்தாள் விநியோகத்தை துவக்குவார். இவ்வாறு செய்ததும், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு ஒன்டிரைவ் லின்க்-க்கு கேள்வித்தாள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும், இதனை குறிப்பிட்ட தேர்வு மையங்கள் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தனியார் மற்றும் பொது கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கல்வி முறையை நவீனத்துவமாக்கி, மாணவர்களுக்கு குறைந்த கட்டத்தில் பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய பணியாற்றி வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த 2-இன்-1 நோட்புக் சர்ஃபேஸ் கோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சர்ஃபேஸ் கோ ஆப்பிளின் 6-ம் தலைமுறை ஐபேட் மாடலுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.

    6-ம் தலைமுறை ஐபேட் போன்று சர்ஃபேஸ் கோ மாடலில் உண்மையான சர்ஃபேஸ் புக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புதிய சாதனத்தின் விலையை குறைக்க முடிந்தது.

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய சாதனம் பார்க்க வழக்கமான சர்ஃபேஸ் புக் போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஸ்கிரீன் அளவு லேப்டாப் அல்லது நோட்புக் சாதனங்களை கடந்து டேப்லெட் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. முழுமையான மெட்டல் யூனிபாடி மற்றும் முன்பக்கம் டெம்ப்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.



    இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.

    கூடுதலாக பயனர்களுக்கு வயர்லெஸ் ப்ளூடூத் மவுஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எனினும் இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ நோட்புக் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.27,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ப்ரிட்டன், அயர்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே, சுவீடன், போலாந்து, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    இதேபோன்று ஜப்பான், சிங்கப்பூர், கொரியா, தாய்வான், மலேசியா, தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் சீனாவில் விரைவில் முன்பதிவு துவங்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய சர்ஃபேஸ் கோ இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மர்மமான சர்ஃபேஸ் சாதனம் குறித்த விவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கசிந்து வருகிறது. ஆன்ட்ரோமெடா என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்ள் இதுவரை காப்புரிமைகள், அறிக்கைகள் மற்றும் இயங்குதள விவரங்களில் கசிந்து வந்தது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் டூயல் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன அறிக்கைகளில் இந்த சாதனம் பாக்கெட் சர்ஃபேஸ் சாதனமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஆன்ட்ரோமெடா திட்டம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினுள் ரகசியமாக உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு சந்தையில் புதிதாகவும், சீர்குலைக்கும் சாதனமாக ஒட்டுமொத்த சர்ஃபேஸ் சாதனங்களுக்கு உதாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரிடையே இருக்கும் பிரிவை குறைக்கும் என கூறப்படுகிறது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆன்ட்ரோமெடா இதுவரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் ராப்-அரவுன்ட் டிஸ்ப்ளே சாதனம் முழுமையாக திறக்கப்படும் போது ஹின்ஜ் மற்றும் டிஸ்ப்ளே பகுதியை மறைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் வழங்குவதற்கான ஸ்டைலஸ்-ஐ மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

    இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் ஸ்டைலஸ்கள் மற்றும் நோட்பேட் போன்ற செயலிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்த சாதனத்தில் ஏ.ஆர்.எம். பிராசஸர்கள் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் இன்டெல் அல்லது குவால்காம் சிப்செட்களில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகின் சில முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
    வாஷிங்டன்:

    தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் மோட்டோரோலா வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கவரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மைக்ரோசாஃப்ட் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் அந்நிறுவனம் ஹின்ஜ் பகுதியில் சிறிய டிஸ்ப்ளே உள்பட மூன்று ஸ்கிரீன்களை பயன்படுத்தும் சாதனத்திற்கான காப்புரிமையை கோரியிருப்பது தெரியவந்துள்ளது. 

    டட்சு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்வதேச காப்புரிமை மையம் மோட்டோரோலாவிற்கு மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் அகலமான செவ்வக டிஸ்ப்ளே மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும், மடிக்கப்படாத நிலையில் டேப்லெட் போன்றும் வேலை செய்யும் என தெரியவந்துள்ளது.


    புகைப்படம்: நன்றி FreePatentsOnline

    மேலும் இதன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் ஹின்ஜ் அருகில் சுருட்டி வைக்கக்கூடியதாகவும்ஸ இதன் டிஸ்ப்ளேவை பாதுகாக்கவும், போனின் ஸ்டேன்ட் போன்று வேலை செய்யவும் கவர் ஒன்றும் வழங்கப்படுவது காப்புரிமையில் தெரியவந்துள்ளது. இந்த கவர் புதிய சாதனத்தின் வயர்லெஸ் சார்ஜர் போன்றும் வேலை செய்யலாம் என கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் ட்விட்டரில் வெளியானது. இதில் ஸ்மார்ட்போனினை இரண்டு பக்கமும் மடிக்க முடியும் என்றும் இதில் இரண்டு பிரைமரி டிஸப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவை ஸ்மார்ட்போன் திறந்தால் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் மூன்றாவது டிஸ்ப்ளே ஹின்ஜ் பகுதியில் வழங்கப்படுகிறது. 

    நவம்பர் 9, 2016-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதற்கான காப்புரிமையை பதிவு செய்திருக்கிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் உண்மையில் உருவாக்கப்படுகிறதா அல்லது கான்செப்ட் வடிவில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் அறிவிப்பின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    ×