search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்
    • ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

     கோவை,

    கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை இன்று நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் 2 வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகு ரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

    மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்கப்பட்டது. இதேபோல வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூ. 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு பேசுகையில் கோவையை சுத்தம் செய்ய நிறைய வாகனங்கள் வந்துள்ளது. கோவையில் குடிநீர் பிரச்சினை நாடு அறிந்தது. சிறுவாணி தண்ணீர் தேக்கம் குறைவாக உள்ளதால் தண்ணீர் தர முடியவில்லை. பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் விரைவில் முடிந்து விடும்.

    ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    கரூரை விட கோவைக்கு தான் அதிகம் செய்ய வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் கேட்கிறார். 15 மாதத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு தந்துள்ளார். ஆகவே அவர் கேட்கும் பணியை கோவையில் நாங்கள் செய்வோம் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறுகையில் சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தக் கோரி முதல் -அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வழித்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறார் என கூறினார்.

    விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் சாலைகள் 2 ஆண்டுகளில் பழுதடைந்தது போல வீடியோ வெளியிடப்படுகிறது. கடந்த காலங்களில் போடப்படாத சாலைகளை போட வேண்டும் என்பது கோரிக்கை. தற்போது 2 ஆண்டுகளில் மக்கள் பணிகளை செய்து முடித்தவர் முதல்- அமைச்சர். விடுபட்ட பணிகள் ரூ. 860 கோடி நிதி கொடுத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜன் உள்பட கலந்து கொண்டனர்

    • தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • மேட்டுப்பாளையத்திலும் இதே போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள கரையாம்பா ளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.77,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இரவு வீட்டிற்கு திரும்பிய சரவணகுமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம் கொண்டையூர் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது அலி (43). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துகொண்டு திருப்பூருக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 1 பவுன் கம்மல், ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
    • விபசார தொழில் செய்த புரோக்கர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு அழகியை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. போலீசார் அழகியை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் சூலூர் அருகே உள்ள தோட்டத்து சாலையை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 30 வயது அழகியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • மேற்கு மலைத் தொடர்ச்சி வனப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும்.
    • வனப்பகுதியில் உள்ள பெரிய பாறையின் மீது யானை நின்றதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    வடவள்ளி,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதியில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோவில் முருக கடவுளின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும்.

    கோவை மாவட்டத்தின் மிக முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இக்கோவில் உள்ளது. மேற்கு மலைத் தொடர்ச்சி வனப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். இதனால் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக மாலை 7 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.

    இந்த நிலையில் கடந்த சித்ரா பவுர்ணமி அன்று மாலை 4 மணி அளவில் மருதமலை கோவிலுக்கு செல்லும் வாகன வழிப்பாதையின் அருகே வனப்பகுதியில் உள்ள பெரிய பாறையின் மீது யானை நின்றது.

    கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து சென்ற போது யானை பொதுமக்கள் கண்ணில் பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் பலர் வாகனத்தை நிறுத்தி பார்த்தனர். அதனால் மருதமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர். யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பாறையின் முகடில் ஒய்யாரமாக யானை நின்றது. சுமார் 1 மணிநேரத்திற்கு பின் யானை வனத்திற்குள் சென்று மறைந்தது. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் யானை வந்ததால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

    • கோவில் திருவிழாவின் போது நடந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடும் போது மோதல் ஏற்பட்டது.
    • மெக்கானிக்கை வெட்டிய சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கமலேஷ் (வயது 23). மெக்கானிக். கடந்த 3-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது நடந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடினர். அப்போது உப்பிலிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்ற வாலிபர் கமலேஷ் மீது விழுந்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கமலேஷ் பெங்களூருக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது தனது நண்பர்கள் 3 பேருடன் சந்ேதாஷ்குமார் அங்கு வந்தார்.

    அவர்கள் 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கமலேஷை வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் ேதாள்பட்டையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

    நிலைதடுமாறிய கமலேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    பின்னர் 3 பேர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கமலேஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக்கை வெட்டிய சந்தோஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அருண்குமார், வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    • சுரேஷ்ராஜன் அதிக வருமானம் பெறலாம் என நம்பி முதலீடு செய்து ஏமாந்தார்
    • கோவை சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்

    கோவை,

    கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்ராஜன் (30), அவர் பகுதி நேர வேலை தொடர்பாக தனக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் கொடுத்த வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

    அப்போது அந்த நபர் செயலியில் அனுப்பிய இணைப்புக்குள் சென்று சிறிய பணிகளைச் செய்து கொடுத்து அதன் மூலம் சிறு தொகைகளைப் பெற்றுள்ளார்.

    இதனால், அதிக வருமானம் பெறலாம் என நம்பி மேலும் 13 பணப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 41 கூடுதலாக முதலீடு செய்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவரது வங்கிக் கணக்குக்கு எந்தத் தொகையும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்ராஜன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து இதில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1.16 கோடியே 15 லட்சத்து 93,033-ஐ முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டு ள்ள செய்தி க்குறி ப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    மேலும், ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் அறிமுகம் இல்லாத நபர்கள் கூறும் அறிவுரைகளை நம்ப வேண்டாம் என்றும், இணையதளம் மூலமாக பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழியில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது
    • விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மலுக்குபாறையை சேர்ந்தவர் பால்துரை (வயது 42). இவரது மனைவி ஆஷா (40). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி இருவரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பால்துரை பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆஷாவை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது
    • மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்

    கோவை,

    கோவையில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    விழிப்புணர்வு இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்ற ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர்.குடிநீர் தொட்டி

    மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    • தீவிரவாதம் எந்தவிதத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்
    • தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது.

    கோவை,

    தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது

    சாதி, மதம் பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனக்கு ஒரே ஒரு சிறிய கேள்விதான். நான் தமிழ்நாட்டில் ஒரு இந்துவாக பிறந்தவள். எப்படி எதை வைத்து பிரித்துப் பார்ப்பதனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். பிரதமர் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார். என்னைப் போன்ற கவர்னர்களும் எல்லாம் மத விழாக்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறோம் எதையும் பிரித்து பார்ப்பது கிடையாது. அதனால் எப்படி பிரித்துப் பார்ப்பதால் நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கூறினால் நன்றாக இருக்கும்.

    ஒரு ஆட்சியில் அறிவிப்புகள் நிறைய வரலாம். ஆனால் அறிவிப்புகளை திரும்ப பெரும் ஆட்சியாக இது இருந்து வருகிறது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது. அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் இந்த படத்தை எதிரானதாக கருதலாம். தீவிரவாதத்திற்கு எதிரானது என்றால் அனைவரும் ஆதரிக்கலாம். பிரதமர் மோடி அதைப்பற்றி தான் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதம் எந்த விதத்தில் வந்தாலும் அதிலும் குறிப்பாக பெண்கள் இளைஞர்களை குறி வைத்து வந்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு ஆதரவான கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம், அப்படி இல்லை என்றால் கருத்து சுதந்திரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்

    • பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • இரவு நேர ரெயில் முன்பதிவு வசதியுடன் இயக்க வேண்டும்.

    பொள்ளாச்சி,

    கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் பழனி, திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

    தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக சில நேரங்களில் பொள்ளாச்சியில் இருந்தே நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிணத்துக்கடவு, போத்தனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி போத்தனூர் ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்க மதுரை, பாலக்காடு, சேலம் கோட்டங்களின் அனுமதியை பெற வேண்டி உள்ளது.

    தற்போது பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் ரெயில் பொள்ளாச்சிக்கு வந்ததும் நிரம்பி விடுகிறது. இரவு நேரங்களில் ரெயில் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் கொடுத்து பஸ் மற்றும் பிற தனியார் வாகனங்களில் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.

    திருச்செந்தூர் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் உள்ளது. தென் மாவட்ட மக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, வழியாக திருச்செந்தூருக்கு தினசரி இரவு நேர ரெயில் முன்பதிவு வசதியுடன் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த நேர்முகத் தேர்வில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    கோவை

    108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். இதில் பணியாற்ற இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது.

    அதன்படி இன்று நேர்முகத் தேர்வு கோவை ெரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு, நடத்தப்பட்டன.

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    • கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கணவரிடம் செல்போன் மூலம்தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கோவை,

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி திவ்யபாரதி (வயது 31).

    இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் திவ்யபாரதி தனது முதல் கணவரை பிரிந்து ரகுபதி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக ரகுபதியுடன் வசித்து வந்தார். ரகுபதிக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக ரகுபதி தனது முதல் மனைவியுடன் மீண்டும் பேசி வந்தார். இது திவ்யபாரதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கேட்ட போது கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ரகுபதி வேலை சம்பந்தமாக மங்களூருக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த திவ்யபாரதி தனது கணவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனது கணவரிடம் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்போ வதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரகுபதி இது குறித்து தனது வீட்டில் வேலை செய்யும் பிரியா என்பவரை தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது திவ்யபாரதி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் ரத்தினபுரி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொ லை செய்து கொண்ட திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×