search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    • பக்தர்கள் பறவை அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இக்கோவிலில் 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமாக கொண்டாடினர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கோவில் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    நேற்று கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கிரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும் பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிலர் காந்தாரா போன்ற காவல் தெய்வங்களின் அலங்காரத்துடன் ஊர்வலம் மேற்கொண்டனர். தொடர்ந்து வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். நாளை மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

    • இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வினோபா நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்றிருப்பதை அறிந்து அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த அகிலன்(25), திருப்பூரை சேர்ந்த விஜய்(54) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கேரளா நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ஒத்தகால் மண்டபம் அருகே உள்ள அசோக் ரெசிடென்சியை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் மலுமிச்சம்பட்டியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையில் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (50) என்பவர் வேலை பார்த்தார்.

    நேற்று நள்ளிரவு இவர்கள் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பழக்கடை உரிமையாளர் ரவி ஓட்டிச் சென்றார். ராமன் பின்னால் அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் தனியார் கம்பெனி அருகே சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த ரவி, ராமன் ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ரோகித், பரத். தங்க நகை வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி 600 கிராம் தங்க நகைகளை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியிடம் விற்றனர்.

    இரவாகி விட்டதால் கோவையிலேயே தங்கி விட்டு மறுநாள் அதிகாலை நேரத்தில் தங்களது மோட்டார் சைக்கிளில் ரூ. 4 லட்சம் பணத்துடன் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிள் க.க.சாவடி- வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம குப்பல் 2 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (28), ரஞ்சித்(22) அபினேஸ்(27), ரஞ்சித்குமார் (32) ஆகிய 4 பேரை கடந்த 30-ந் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தனிப்படை போலீசார கேரளாவில் முகாமிட்டு தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (34), சுனில் (46) ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை முடிந்தம் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சரவணகுமார் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை அருகே உள்ள ராக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 30). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது கலைச் செல்விக்கு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் இளம்பெண்ணிடம் தான் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார்.

    மேலும் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

    இதனை உண்மை என நம்பிய கலைச்செல்வி ரூ.23 லட்சம் பணத்தை தயார் செய்து சரவணகுமாரிடம கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இவர் போலியான ஆவணங்களை தயார் செய்து பணி நியமன ஆணையை கலைச்செல்வியிடம் கொடுத்தார். அதனை இந்து அறநிலை யத்துறை அலுவலகத்துக்கு சென்று சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த சரவண குமார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.

    • மதுக்கரை ரெயில்வே பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
    • 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று பார்வையிட்டடார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுக்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ துரிதமாக செயல்பட்டு அணைக்கப்பட்டது. வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் யானைகள் இறப்பது இயற்கை. இருந்தாலும் இறப்பு குறித்தும், யானைகள் மரணத்தை தடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

    வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. தேவையான வசதிகள் மேற்கொள்ளவும், துறை சார்ந்த அதிகாரிகளுடன் கோவை,வால்பாறை, ஆனைமலை உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றோம்.

    சாடிவயல் உள்பட முகாம்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

    தமிழக யானை பாகன்களை பயிற்சிக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக தாய்லாந்து அழைத்து சென்றோம். பாகன்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது.

    யானைகள் மின்கம்பங்களில் உரசுவதை தவிர்க்க முள்வேலி கட்டி வைத்து இருக்கின்றோம்.செயற்கை நுண்ணறிவு முறையில் மதுக்கரை பகுதியில் ரெயில்வே பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனத்துக்குள் சாலை அமைத்து இருப்பது தவறானது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சேவா சிங், வன பாதுகாவலர் மற்றும் கலை இயக்குனர் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டாக்டர்கள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.
    • தலைமறைவாக உள்ள சுசீந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார்.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அந்த பகுதியில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார்.

    அப்போது சிறுமிக்கு ஏ.பி.எஸ். காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுசீந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது சுசீந்திரன் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.

    பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அப்போது மாணவியை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.

    அவர்கள் இது குறித்து மாணவியின் தாயிடம் தெரிவித்தனர். அவர் தனது மகளிடம் விசாரித்தார்.

    அப்போது சுசீந்திரன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

    இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சுசீந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஐ.ஓ. காலனி பஸ் நிறுத்தத்தில் 50 வயது மதிப்புத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி ஐ.ஓ. காலனியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சம்பவத்தன்று 50 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் அடையாளம் தெரியாத ஆணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் சில மாதங்களாக மருதமலை அடிவார பகுதியில் யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்வீரம்பாளையத்தில் சம்பவத்தன்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவரது மகன் சபரீஸ்வரன் (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று மணிகண்டனின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்ற பெற்றோர் தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அவர்கள் தூக்கு கயிற்றில் இருந்த இறக்கி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவர் முதலீடு செய்து நீண்ட நாட்களாக ஆகியும், அவருக்கு முதலீட்டு தொகையும், லாபமும் கிடைக்கவில்லை.
    • கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள கஸ்தூரி பாய் வீதியை சேர்ந்தவர் சத்ய நாகிரா (வயது 28). ஐ.டி ஊழியர். கடந்த மாதம் 7-ந் தேதி இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

    அதில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதனை பார்த்து ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பிய சத்ய நாகிரா அதில் உள்ள லிங்கில் அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார்.

    பின்னர் சத்ய நாகிராவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் எவ்வாறு பணத்தை முதலீடு செய்வது, லாப பணத்தை எப்படி பெறுவது என விளக்கி கூறினார். இதனை உண்மை என நம்பிய சத்ய நாகிரா அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் வெவ்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்து 920 பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அவர் முதலீடு செய்து நீண்ட நாட்களாக ஆகியும், அவருக்கு முதலீட்டு தொகையும், லாபமும் கிடைக்கவில்லை.

    இதனால், அதிர்ச்சியடைந்த சத்ய நாகிரா இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி ஐ.டி. ஊழியரிடம் மோசடி செய்த மர்மநபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
    • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சி தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கிய விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடை பெற்றது.

    தொடர்ந்து நேற்று குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை தொடங்கியது.

    இதில் அம்மனுக்கு வெண்ணை சாற்றிஉருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள் என ஒவ்வொருவராக பூக்குண்டத்தில் இறங்கினர்.

    தொடர்ந்து பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பூக் குண்டத்தில் இறங்கினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பிரியங்கா வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 23). நர்சிங் மாணவி. சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து பிரியங்காவின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.

    சாய்பாபா காலனி அருகே உள்ள கருணாநிதி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (18). இவர் பி.பி. வீதியில் உள்ள கவரிங்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் காயத்ரி (26). இவரது தாய் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் காயத்ரி தங்கி இருந்தார். சம்பவத்தன்று திடீரென அவர் மாயமாகி விட்டார். அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×