search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரிஸ்"

    பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. #FranceFire #NotreDameCathedral
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில்,  உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த  தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது.



    தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.

    ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த இந்த தேவாலயத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.
     
    கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை. #FranceFire #NotreDameCathedral
    பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர். #ParisBuildingFire
    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எர்லாங்கர் வீதியில் பழமை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் மேல் தளத்துக்கும் பரவியது.

    2 தளங்களிலும் உள்ள வீடுகளில் தீ பற்றி எரிந்தது. வீடுகளில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ பற்றி எரிவதை அவர்களால் உணரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் வீடு முழுவதையும் தீ சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

    நாலாபுறமும் பற்றி எரியும் தீயின் மத்தியில் தாங்கள் இருப்பதை உணர்ந்து அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பின் கீழ் தளங்களில் இருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    தங்களது குடியிருப்பின் மேல் தளங்களில் தீ எரிந்துகொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் கட்டுக்குள் அடங்காத வகையில் இருந்ததால் தீயை அணைப்பது சவாலாக இருந்தது. இதற்கிடையில் மேல் தளங்களில் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தவர்களை மீட்கும் முயற்சியும் ஒரு புறம் நடந்தது.

    எனினும் ஒரு குழந்தை உள்பட 10 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்கள் தீயில் கருகி கரிக்கட்டைகளாகி இருந்தனர். அதே சமயம் பலர் தீயில் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு ஏறி தஞ்சம் அடைந்தனர்.

    அவர்களை ராட்சத ஏணிகள் மூலம் மீட்டனர். இப்படி 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த தீக்காயமும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதே போல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 வீரர்களும் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி விடியவிடிய நடந்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியான தகவல் வெளியானது. அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதும், வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ParisBuildingFire
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். சிலர், அருகில் உள்ள கட்டிடத்தின் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    தீயை அணைத்த பின்னர் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது, 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParisBuildingFire
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது.

    இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர்.

    ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ்.

    அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார்.
    இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.

    இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப். இந்த போட்டி சுமார் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

    முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலப்புக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரபேல் நடால் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் சுற்றை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.

    இதையடுத்து, ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

    ரபேல் நடால் இதுவரை 16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர். இவர் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் மற்றும் மரின் சிலிச் ஆகியோர் பங்கேற்ற காலிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
    தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் அர்ஜெண்டினாவின் டிகோ ஷ்வர்ட்ஸ்மான் மோதினர்.



    இதில், முதல் செட்டில் அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய நடால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் மற்றும் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர். முதல் சுற்றில் 6-6 என்ற கணக்கில் சமநிலை வகித்தபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்த ஆட்டங்கள் மறுநாள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் செச்சினடோ முன்னாள் சாம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலியின் மார்கோ செச்சினடோவும் மோதினர்.



    இதில், இத்தாலி வீரர் செச்சினடோ முதல் இரண்டு சுற்றுகளை 6-3, 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, மூன்றாம் சுற்றை 1-6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற நான்காவது சுற்றில் செச்சினடோ அபாரமாக விளையாடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், இத்தாலி வீரர் மார்கோ செச்சினடோ 6-3 7-6(4) 1-6 7-6(11) என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Knifeattack
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.



    இந்நிலையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவன் செசன்யா நாட்டை சேர்ந்தவன் என்பதும், கம்சாத் (29) என்ற வாலிபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக கம்சாத்தின் நண்பரை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர். #Knifeattack
    பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Knifeattack #emmanuelmacron
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கோரத் தாண்டவத்தில் ஈடுபட்ட அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.



    இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரத்தத்துக்கான விலையை பிரான்ஸ் மீண்டும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் வலைத்தளத்தில், பாரிஸ் தாக்குதலுக்கு எங்கள் அமைப்பு தான் மூளையாக செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Knifeattack #emmanuelmacron
    பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆசாமி உள்பட 2 பேர் பலியாகினர். #Paris #Knifeattack
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ். இந்த கட்டிடத்தின் அருகே இன்று ஒரு மர்ம நபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான்.

    இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Paris #Knifeattack
    ×