search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்ஆத்மி"

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #AAP #kejriwal
    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “ ஆம் ஆத்மிகட்சியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைப்பதற்கு பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை. எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

    டெல்லியை பொறுத்த வரையில் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ##RahulGandhi #AAP  #kejriwal 
    பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal #PMModi
    புதுடெல்லி :

    முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. டெல்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால், ஆம் ஆத்மியோ அரியானா மாநிலத்திலும் கூட்டணி அமைக்க விரும்புகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, டெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.

    நேற்றைய கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துகொண்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “காங்கிரசின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். டெல்லியில் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டோம். ஆனால், கூட்டணியை பிற மாநிலங்களுடன் இணைப்பது சரியல்ல” என்று கூறினார். #ArvindKejriwal #PMModi
    டெல்லியில் மொத்தம் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயக்கம் காட்டுவதால் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். #congress #aap #parliamentelection

    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு மே மாதம் 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார். ஆனால் முதலில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதோடு வேட்பாளர்கள் பெயரையும் வெளியிட்டார்.

    இந்த நிலையில் தனித்து போட்டியிட்டால் நிச்சயமாக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற இயலாது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் உணர்ந்தார். எனவே தனித்து போட்டியிட அவருக்கு தயக்கம் ஏற்பட்டது.


    மீண்டும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாமா? என்று ஆலோசித்து வருகிறார். இதற்காக அவர் சக்தி செயலி மூலம் டெல்லியில் உள்ள சுமார் 52 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது நல்லது என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டும் விட்டுக் கொடுக்க ஆம் ஆத்மி தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதனால் ஆம்ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.

    இதற்கிடையே காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடவும் ஒரு தொகுதியை பொது வேட்பாளருக்கு கொடுக்கலாம் என்றும் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த மாத இறுதி வரை டெல்லியில் வேட்பாளர்களை அறிவிக்க அவகாசம் உள்ளது. எனவே இரு கட்சி தலைவர்களும் நிதானமாக முயற்சித்து வருகிறார்கள். #congress #aap #parliamentelection

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான  மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று கூறியும் மேற்படி பேரம் தொடர்பாக தொடரப்பட்ட 4 வழக்குகளை கடந்த 14-12-2018 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    அவரது சார்பில் வழக்கறிஞர்கள் தீரஜ் குமார் சிங், மிருனாள் குமார் ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview 
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DelhiAssembly #BharatRatna #RajivGandhi
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.

    இந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #DelhiAssembly #BharatRatna #RajivGandhi
    டெல்லியில் புனரமைக்கப்பட்ட சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் டெல்லி பா.ஜ.க. தலைவரை போலீசார் அனுமதிக்க மறுத்ததாக ஆம் ஆத்மி - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. #Signaturebridge #Signaturebridgeinaugural #DelhiBJP #ManojTiwari
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சிக்னேச்சர் (Signature) பிரிட்ஜ் எனப்படும் மேம்பாலம் சுமார் 1500 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

    இன்று மாலை திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில் டெல்லி பா.ஜ.க. தலைவரான மனோஜ் திவாரி விழா நடைபெறும் பகுதிக்கு வந்தார். அவருடன் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் சிலரும் வந்தனர்.

    அவரிடம் அழைப்பிதழ் இல்லாததால் மேடைக்கு செல்லவிடாதவாறு போலீசார் மனோஜ் திவாரியை தடுத்து விட்டதாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இந்த மேம்பாலம் அமைந்துள்ள வடக்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மனோஜ் திவாரி, ஒரு கிரிமினலை நடத்துவதைப்போல்  போலீசார் என்னை அவமதித்து விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இந்த பாலத்தை புதுப்பிக்க நான்தான் பெருமுயற்சி எடுத்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், டெல்லி கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார், தேவையில்லாமல் அங்கே பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #Signaturebridge #Signaturebridgeinaugural #DelhiBJP #ManojTiwari
    டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள்தான் முக்கிய காரணம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. குளிர்காலத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எஞ்சி நிற்கும் தாளடிகளை எரிப்பதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இன்று காற்றின் தரம் 348 என்ற நிலையில் இருந்தது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், காற்று மாசுக்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள் மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.


    “டெல்லியில் ஆண்டு முழுவதும் மாசு கட்டுக்குள் உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் (குளிர்காலம்) மத்திய அரசு மற்றும் பாஜக தலைமையிலான அரியானா, காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசுகளால் மோசமான மாசு சூழ்நிலையை டெல்லி எதிர்கொள்ள வேண்டி உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாலும், அவர்கள் எதையும் செய்ய தயாராக இல்லை. இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்” என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பஞ்சாப் மாநில விவசாயிகளை பிரதமர் மோடி நேற்று வெகுவாகப் பாராட்டியதுடன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள தாளடிகளை எரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
    பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #PetrolPumpsStrike #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் பங்குகள் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விநியோக மையங்கள் மூடப்பட்டுள்ளன.

    இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் மிரட்டல் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதுபற்றி டுவிட்டரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-


    ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை பாஜகவினர் மிரட்டியுள்ளனர். ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எண்ணெய் நிறுவனங்களும் மிரட்டி உள்ளன.

    நான்கு பெருநகரங்களில் டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு. அதிகபட்ச விலை இருந்தும்கூட மும்பையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘பாஜக இந்த ஸ்டிரைக்கை நடத்துவதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்’ என கெஜ்ரிவால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.  #PetrolPumpsStrike #Kejriwal
    வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசின் முடிவை எதிர்த்து நாளை பெட்ரோல் பங்குகள் 24 மணிநேர வேலைநிறுத்தம் செய்வதால் கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Petrolpumpsshut #Delhi #Petrolpumpsshut
    புதுடெல்லி:

    நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் அடையும் பாதிப்பை சரிகட்டும் வகையில் அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு (வாட்) வரியை ஓரளவுக்கு குறைத்துள்ளன. 

    இதேபோல், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும் என இங்குள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கைக்கு டெல்லி அரசு செவி சாய்க்கவில்லை.

    வெளி இடங்களில் இருந்து டெல்லி வழியாக செல்லும் பல கார், லாரி, பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வாட் வரி குறைவாக உள்ள அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரப்பிரதேசம் பகுதியில் பெட்ரோல் நிரப்பினால் ஓரளவுக்கு பணத்தை மிச்சப்படும் என கருதி டெல்லிக்கு உட்பட்ட பங்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்புவதை தவிர்த்து விடுகின்றனர்.

    இதனால், கடந்த 3 மாதங்களாக டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனை 60 சதவீதம் அளவிலும், பெட்ரோல் விற்பனை 25  சதவீதம் அளவிலும் குறைந்துப் போனதாக பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    எனவே, வாட் வரியை டெல்லி அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் பங்குகள் 24 மணிநேர கதவடைப்பு போராட்டத்தில் குதித்துள்ளன.

    இதன் விளைவாக நாளை காலை 6 மணிமுதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்பதால் தலைநகர் டெல்லியில் நாளை கால் டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Petrolpumpsshut #Delhi #Petrolpumpsshut 
    ×