search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுத்திரகனி"

    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள். 

    ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

    நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #NithyaMenen

    பற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, இப்படத்தில் நடிக்க அவர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். #Para #ParaAudioLaunch
    ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. 

    வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இப்படம் குறித்து இயக்குநர் கீரா பேசும்போது, ‘இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.



    நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ‘இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு." என்றார்.
    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், டேய்சி ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் டேய்சி ஜோன்ஸ் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.


    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குஜராத் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியும் என்று நம்புவதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.



    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. #RRR #Rajamouli
    பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை. பாகுபலிக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

    ராஜமவுலியின் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.



    இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.


    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் ‘மக தீரா’ படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமதொங்கா’ ஆகிய படங்களிலும் ராஜமவுலி பணிபுரிந்துள்ளார். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, இயக்குநராக ராஜமவுலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
    சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார். 

    அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.



    அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
    'பூமராங்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. #Atharvaa #RKannan
    அதர்வா நடிப்பில் 'பூமராங்' வருகிற மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை இயக்குவதுடன், தனது 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் மூலமாக ஆர்.கண்ணன் தயாரிக்கவும் செய்கிறார். சமுத்திரகனி, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.



    ரதன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. ஆக்‌‌ஷன் கதையில் உருவாகும் 
    இந்த படத்திற்கு தற்காலிகமாக `தயாரிப்பு எண் : 3' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. #Atharvaa #RKannan

    சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். #Samuthirakani #AduthaSaattai
    சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான புரிதலை இப்படத்தில் சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கூறியிருந்தார்கள்.

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கு ‘அடுத்த சாட்டை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.



    சமுத்திரகனி நடிப்பில் தற்போது ‘நாடோடிகள் 2’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், அப்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    பூவரசம் பீபீ படத்தை அடுத்து ஹலீதா ஷமீம் இயக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக சமுத்திரகனியுடன் சுனைனா இணைந்திருக்கிறார். #Sillukaruppati
    திரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீபீ’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் 'சில்லு கருப்பட்டி' திரைப்படம் இந்த வகையை சேர்ந்தது. சமுத்திரகனி - சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் புரடோக்‌ஷன் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார்.

    தனது முதல் படமான 'பூவரசம்பூ பீபீ' முலம் திரை உலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குனர் ஹலீதா ஷமீம், சில்லு கருப்பட்டி பற்றி கூறும்போது, ‘இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில் தான் சமுத்திரக்கனி - சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர். 

    நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்புதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் ஓகே கண்மணி படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழேணியின் உச்சத்தில் இருக்கும் சாரா அர்ஜுன் ஒரு கதையில் நடிக்கிறார். 

    நிவேதிதா சதிஷ் -மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். இவர்களுடன் க்ராவ் மகா ஸ்ரீராம், ராகுல், ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யஙனமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித்திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட வெளிப்படுத்தி உள்ளனர். பிரதீப் குமார் இசை அமைக்கிறார்’ என்றார். 
    ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் விமர்சனம். #60VayaduMaaniram #60VayaduMaaniramReview
    சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

    வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கும் பிரகாஷ் ராஜ்க்கு, ஞாபக மறதி ஏற்படுகிறது. மேலும் தனது மகனை சிறு பையனாக நினைத்து வருகிறார். இதனால், பிரகாஷ் ராஜ்க்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்கிறார் விக்ரம்பிரபு.

    இதே நேரத்தில் விக்ரம் பிரபுவுக்கு மும்பையில் வேலை கிடைக்கிறது. இதற்காக பிரகாஷ் ராஜை சிகிச்சை அளிக்க கூடிய ஒரு ஆசிரமத்தில் விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜை அங்கு டாக்டராக பணிபுரியும் இந்துஜா கவனித்து வருகிறார்.

    விக்ரம் பிரபுவு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக தந்தை பிரகாஷ் ராஜ்க்கு துணிகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு செல்ல முடிவு செய்கிறார்.



    அப்போது கடையில் பிரகாஷ் ராஜால் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜை அப்படியே விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜ் ஆசிரமத்திற்கு செல்லாமல் கொலைகாரன் சமுத்திரகனி பிடியில் சிக்குகிறார்.

    இறுதியில், சமுத்திரகனி பிடியில் இருந்து பிரகாஷ் ராஜ் தப்பித்தாரா? காணாமல் போன தந்தையை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தந்தை பிரகாஷ் ராஜ் மீது அக்கறை இல்லாமல் இருப்பது. பின்னர் அவரைப் பற்றி தெரிந்த பிறகு பாசம் காட்டுவது, தேடுவது என நடிப்பில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் ஒரு அனுபவ நடிகன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். பல காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். படம் பார்க்கும் நமக்கே அவர் மீது ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

    அதுபோல் தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமுத்திரகனி. டாக்டராக வரும் இந்துஜா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    தந்தை மகனுக்கும் இடையேயான பாசத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குழந்தைகளை சிறுவயதில் இருந்து நல்லது, கெட்டது எது என்று பார்த்து பார்த்து வளர்த்தால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறார்கள். பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் ராதாமோகன். 

    இளையராஜாவின் இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரது பின்னணி இசை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறது. விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘60 வயது மாநிறம்’ தந்தை மகன் பாசப்பிணைப்பு.

    60 வயது மாநிறம் வீடியோ விமர்சனம் பார்க்க:


    கலைப்புலி தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் முன்னோட்டம். #60VayaduMaaniram
    இயக்குனர் ராதா மோகன் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘60 வயது மாநிறம்’ வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 

    படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். 

    படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja
    நடிகர், இயக்குநர் என பிசியாகி இருக்கும் சமுத்திரக்கனி தானும் ஒரு எளிய மனிதன் தான், எனது கருத்துக்களை அறிவுரையாக சொல்லவில்லை, அக்கறையாக தான் சொல்கிறேன் என்றார். #Samuthirakani
    நாடோடிகள் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஆண் தேவதை, வெள்ளை யானை 2 படங்களும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    அவரிடம் சமுத்திரகனி என்றாலே அறிவுரை சொல்பவர் என்ற பிம்பம் விழுந்திருக்கிறதே? என்று கேட்டதற்கு “மத்தவங்க மாதிரி நானும் ஒரு எளிய மனிதன்தான். என்னைப் பொறுத்தவரை அதை அறிவுரையா பார்க்கலை; ஒரு அக்கறையாக தான் பார்க்கிறேன்.

    ஆனால், சமுத்திரக்கனின்னா அறிவுரைனு ஒரு பேரை இவங்களா வெச்சுட்டாங்க. இதை நான் கடமையாகத்தான் நினைக்கிறேன். மாற்றம் நாளைக்கே வந்திடாது; அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம்னு இதைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.



    கத்துனா காதுல போய் விழும்னுதான் கத்திக்கிட்டிருக்கேன். அப்படிக் கத்தியும் யாரும் திரும்பலை. அவங்க திரும்புற வரை கத்துறதுதான் என் நோக்கம் என்று கூறினார். #Samuthirakani

    ஜோக்கர் படம் மூலம் புகழ் பெற்ற ரம்யா பாண்டியன், எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார். #Aandhevadhai
    அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.

    "ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்.

    சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்.

    சமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.



    இயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.. ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என் ஏதாவது ஒரு விஷயமாவது நம்ம கவரவேண்டும் இல்லையா..? அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ஆண் தேவதை எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான். 

    இந்தப்படம் வெளியான பின்னாடி நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்னவிதமான படம், கேரக்டர் பண்ணப்போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை. ஆனா கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியா இருக்கிறேன்" என்கிறார் ரம்யா பாண்டியன்.
    ×