search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிங்கம்"

    இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வில்லீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
    கோவை இடிகரையில் பழமை வாய்ந்த வில்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர் கோடுகள் உள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் இதனை நேரில் பார்ப்பவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இந்த வருடம் பங்குனி மாதத்தில் வில்லீஸ்வரர் மீது கடந்த 5 நாட்களாக சூரியஒளி விழுந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல கடந்த வாரம் துடியலூர் அருகில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலிலும் சூரிய கதிர்கள் இறைவனின் மீது விழுந்தது. வடமதுரை விருந்தீஸ்வரர், இடிகரை வில்லீஸ்வரர் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ஆந்திர மாநிலம் முன்னொரு காலத்தில் ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.
    ஆந்திர மாநிலம் தற்போது தெலுங்கு தேசம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் அது ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.

    அதாவது ஆந்திரத்தில் தெற்கு பகுதியில் ஸ்ரீகாளகஸ்தி என்ற புகழ்பெற்ற திருத்தலமும், மேற்குப் பகுதியில் ஸ்ரீசைலம் என்ற சிறப்புமிக்க ஆலயமும், வடக்கு பகுதியில் ஸ்ரீத்ராட்சராமம் என்ற மகத்துவம் வாய்ந்த திருத்தலமும் அமைந்திருந்தன.

    இதனால் ஆந்திரம் ‘திரிலிங்க தேசம்’ என்று பெயர் பெற்று விளங்கியது. அதோடு இன்னும் சிலர் அந்தப் பகுதியை ‘மகாலிங்க சேத்திரம்’ என்றும் அழைத்தனர்.
    தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
    தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். அவரும் பற்பல சாந்தியங்களுடன் கூடிய சிவலிங்கங்களை அவர்களுக்கு செய்து கொடுத்தார். அதைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தேவர்கள் அனைவரும் பயனடைந்தனர். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    இந்திரன் - பதுமராக லிங்கம்

    அசுவினி தேவர்கள் - மண்ணால் ஆன லிங்கம்

    எமதர்மன் - கோமேதக லிங்கம்

    சந்திரன் - முத்து லிங்கம்

    பிரம்மன் - சொர்ண லிங்கம்

    வருணன் - நீல லிங்கம்

    வாயுதேவன் - பித்தளை லிங்கம்

    விஷ்ணு - இந்திர லிங்கம்

    நாகர்கள் - பவள லிங்கம்

    ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்

    குபேரன் - சொர்ண லிங்கம்

    மகாலட்சுமி - நெய்யால் ஆன லிங்கம் 
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம்.
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன்.

    பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

    தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.

    அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

    ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

    பாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது, ஒரு பாணலிங்கம் என்கிறார்கள்.
    சிவலிங்க வழிபாட்டின் மகிமை, சிவபூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி, முனிவர் ஒருவர் தனது சீடர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பாணாசுரன் என்ற அசுரன் அதைக் கேட்க நேரிட்டது. அதனைக் கேட்ட அசுரனுக்குத் தானும் சிவபூஜை செய்து, நல்ல பலன்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    அதனால் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்கத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவன் முன்பாகத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். உடனே பாணாசுரன், “ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்கள் வேண்டும்” என்று கேட்டான்.

    சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அளித்தார்.

    அதன் பிறகு சிவபெருமான், தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணாசுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அனைத்தும் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன.

    பாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, ‘பாணம்’ எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

    கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது, ஒரு பாணலிங்கம் என்கிறார்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் கிடைக்கின்றன.
    ×