search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீக்கம்"

    ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
    ராஞ்சி:

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது ஜார்கண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த அமைப்பின் முழு செயல்பாடுகளையும் முடக்கும் விதமாக இருந்த இந்த தடையை எதிர்த்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய முறையான வழிமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என தெரிவித்ததுடன், அந்த அமைப்பின் மீதான தடையையும் விலக்கி உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
    அண்ணா தொழிற்சங்க நிதி கையாடல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். #ADMK #Chinnasamy
    சென்னை:

    அண்ணா தொழிற்சங்க பேரவை நிதியில் கையாடல் செய்தது தொடர்பான வழக்கில் தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளர் சின்னசாமி (வயது 70) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதே அவரது தொழிற்சங்க பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். தற்போது அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார்.

    இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


    கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிங்காநல்லூர் தொகுதி) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. . #ADMK #Chinnasamy 
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 18 குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்மந்திரி, மாவட்ட மாஜிஸ்திரேட்டை நீக்கி உத்தரவிட்டுள்ளார். #DeoriaShelterHomeIncident #Uttarpradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா என்ற பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் இருந்து 10 வயது சிறுமி தப்பிச் சென்று அப்பகுதியின் பெண்கள் காவல்நிலையத்தை அடைந்து, தங்களது காப்பகத்தில் நடந்துவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

    தினமும் மாலை நேரத்தில் விலை உயர்ந்த கார்களில் வருபவர்களுடன், சிறுமிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் நள்ளிரவில் மீண்டும் காப்பகத்திற்கு அழைத்துவரப்படுவதாகவும் அந்த சிறுமி தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து, அந்த காப்பகத்துக்கு விரைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 18 சிறுமிகள் மாயமானது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காப்பகத்தை நடத்தி வந்த கிரிஜா திரிபாதி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மாநில அரசு பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், டியோரியா மாவட்ட மாஜிஸ்திரேட் உள்பட சில அதிகாரிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் காப்பகம் குறித்து 12 மணி நேரத்துக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாஜிஸ்திரேட்டுகளுக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக பெண்கள் நலத்துறை செயலாளர் ரேனுகா குமார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 2007-ம் ஆண்டு இந்த காப்பகத்தின் மீது வந்த புகாரின் அடிப்படையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கிரிஜா மற்றும் அவரது கணவர் தொடர்ந்து இந்த காப்பகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பீகார் மாநிலத்திலும் காப்பகத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூறத்தக்கது. #DeoriaShelterHomeIncident #Uttarpradesh #YogiAdityanath
    கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக திண்டிவனம் அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார். #AnnaUniversity #RevalutaionScam
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

    மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மற்றும் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AnnaUniversity  #RevalutaionScam
    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். #AssamNRC #NRCReleased #MamataonNRC
    கொல்கத்தா:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

    காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, இன்று டெல்லி செல்லும்பொது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப் போவதாகவும் கூறினார்.

    அசாம் மாநில குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடியேற வந்தால் அனுமதிப்பீர்களா? என்னும் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர்கள் அசாம் மாநில பூர்வவாசிகள். 

    அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.  மேற்கு வங்காளத்தில் குடியேற அவர்கள் கோரிக்கை வைக்கும்போது இதுதொடர்பாக  மேற்கு வங்காளம் மாநில அரசு பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். #AssamNRC #NRCReleased #MamataonNRC
    காஞ்சீபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சி.ஹரிபிரபாகரன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஊடகத்தினரை பற்றி தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆஸ்பத்திரிக்குள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கட்டுகளுக்காக குரைக்கும் தெரு நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக நுழைவு வாயிலிலேயே நிறுத்திவைக்கப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முந்தைய உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஹீரோவான கோட்சேவுக்கு தற்போதைய ஜெர்மனி அணியில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.#MarioGotze
    பெர்லின்:

    32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று வெளியிட்டார்.

    ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலக கோப்பைக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.

    அதே சமயம் செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பிய கோல் கீப்பரும், கேப்டனுமான மானுல் நியர் உத்தேச அணியில் 4 கோல் கீப்பர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். ஆனால் பயிற்சி முகாமில் அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார். தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இதற்கிடையே ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் 2020-ம் ஆண்டில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுக்கு (2022-ம் ஆண்டு வரை) நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

    போர்ச்சுகலின் முதற்கட்ட அணியில் பேபியோ கோயன்ட்ராவ், ரெனட்டோ சாஞ்சஸ் ஆகியோருக்கு இடம் இல்லை. அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நானி, பெப்பெ, வில்லியம் கர்வல்ஹோ, ஜோவ் மவ்டினோ உள்ளிட்டோர் அணியில் தொடருகிறார்கள்.

    இதே போல் அர்ஜென்டினாவின் உத்தேச அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா போன்ற முன்னணி வீரர்கள் இடத்தை தக்கவைத்து இருக்கிறார்கள்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நம்பிக்கை வீரர் 26 வயதான நெய்மார் அந்த அணிக்கு திரும்பியுள்ளார். கால்முட்டி காயத்தால் விலகிய மூத்த வீரர் டேனி ஆல்வ்சுக்கு பதிலாக டேனிலோ சேர்க்கப்பட்டு இருக்கிறார்.#MarioGotze
    ×