search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேரன்"

    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுவதாக சேரன் வேதனை தெரிவித்துள்ளார். #Cheran
    பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.


    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள். தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள் தானே.”

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Cheran #KamalHaasan #Seeman #MakkalNeethiMaiam #NaamThamizharKatchi

    இம்மாதம் வெளியான சேரனின் திருமணம் திரைப்படம், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியாக இருக்கிறது. #Thirumanam
    மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது.
     கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைகளமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.



    பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
    சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapathi
    பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்'.

    இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், இசை - சித்தார்த் விபின், படத்தொகுப்பு - பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் - சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் - சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு - கவிதா சச்சி, தயாரிப்பு - பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சேரன்.



    சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,

    திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.

    படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh #Sukanya #ThirumanamFrom1stMarch

    திருமணம் டிரைலர்:

    இயக்குநர் சேரன் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், அவர் நடித்துள்ள புதிய படமொன்றில் 3 நாயகிகள் சேரனுக்கு செக் வைக்கின்றனர். #RajavukkuCheck #Cheran
    இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகுக்கு திரும்பியிருக்கிறார். ஒருபக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் ஏற்கனவே ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கியவர். ‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகை சேர்ந்த சராயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.



    சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். #RajavukkuCheck #Cheran

    “நாகரிகம் அழிந்ததைப்போல் காலப்போக்கில் திருமணமே இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh
    ‘பொற்காலம்,’ ‘தவமாய் தவமிருந்து’ உள்பட பல தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர், சேரன். சில வருட இடைவெளிக்குப்பின் அவர் இயக்கியிருக்கும் படம், ‘திருமணம்.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

    விழா முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். விழா அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

    விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    “இயக்குனர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுகிறவர் அல்ல, செதுக்குகிறவர். சேரனுக்கு நான் எழுதிய பாட்டுக்கே ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளிவட்ட சாலையில் நானும், என் நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஒரு பெரியவர், “நீங்கள்தானே வைரமுத்து” என்று கேட்டார். ‘ஆம் என்றேன்’. நீங்கள் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன்.



    “நான் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழன். என் பூர்வீகம் எனக்கு தெரியாது. இந்த பாட்டுக்குள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் மண்ணெடுத்திருக்கிறீர்கள். பாட்டை கேட்கிறபோதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் பூர்வீகமாய் இருக்குமோ என்று அடிக்கடி விரும்பி கேட்கிறேன்” என்றார். அப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல. சிங்கப்பூரின் அன்றைய ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் தான். அவர் மறைந்தபோது, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

    அப்போது, சிங்கப்பூரின் சீன அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார். “இப்போது, மறைந்த ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒலிபரப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” என்றார். உடனே அந்த மேடையில், “தஞ்சாவூரு மண்ணெடுத்து” பாடல் ஒலிபரப்பானது. இப்படி ஒரு வரலாற்று சிறப்பு சேரன் உருவாக்கிய ‘பொற்காலம்’ படத்தில், தேவா இசையில் நான் எழுதிய பாடலுக்கு கிடைத்தது. இந்த ஒரு தடம் போதும். சேரன் இயக்குனராக வந்து சாதித்ததற்கு...

    ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.



    “திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா? அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

    இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

    டைரக்டர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.  #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh

    பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன் அடுத்ததாக திருமண பந்தத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #Cheran #Thirumanam #Umapathi
    பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கி‌ஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சேரன். சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் சேரன் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

    கடைசியாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது ‘திருமணம்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். 

    தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.



    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

    விழாவில் சேரன் பேசியதாவது:–

    ‘‘திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. விஜய் சேதுபதி எனது படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். அவர் எப்போது வருகிறாரோ அப்போது அவரை வைத்து படம் இயக்குவேன்.’’

    இவவாறு சேரன் கூறினார். #Cheran #Thirumanam #Umapathi

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் சேரன் ஆட்டோகிராப் படத்தை 96 படத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். #96TheMovie
    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 90-களில் பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படக்குழுவை பாராட்டி உள்ளார்.

    முன்னதாக 96 படத்தையும், சேரனின் ஆட்ரோகிராப் படத்தையும் ஒப்பிட்டு சிலர் பேசினர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

    விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும். #96TheMovie #Cheran

    திரைப்பட தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று விஜய் சேதுபதி 'உலகாயுதா' நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
    திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகாயுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.

    இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.



    அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



    பின்னர் பேசிய விஜய் சேதுபதி, "எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்" என்றார்.



    கடைசியில், "எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவருககும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி. 
    ×