search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114462"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், பசுவை நாட்டின் தாயாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Uttarakhand #RashtraMata
    டேராடூன்:

    இந்தியாவில் மாடுகளை பாதுகாக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பசுக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பசு பாதுகாவலகள் என்ற பெயரில் சிலர் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் பசுக்களை பாதுக்காக்க பல்வேறு மையங்கள் மற்றும் அமைப்புகள் நிருவப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஒருபடி மேலே சென்று, பசுவை நாட்டின் தாய் என அறிவித்து புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில கால்நடை பராமரிப்பு மந்திரி ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். #Uttarakhand #RashtraMata
    உத்தரகாண்ட் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை பள்ளி நிர்வாகமே மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி மாணவர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதே இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதற்காக இதனை மூடி மறைத்துள்ளனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மாணவி தனது சகோதரியிடம் நடந்த அனைத்தையும் கூறவே, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1 மாதத்துக்கு முன்பு நடந்த இந்த கொடூரம் இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதையடுத்து, 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 4 மாணவர்களையும், இந்த சம்பவத்தை மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Uttarakhand
    உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்திரிகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand #PrakashPant
    டேராடூன்:

    பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைக்கவும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand  #PrakashPant
    உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 16-ம் தேதி முதல் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation
    லக்னோ:

    இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஊடுருவல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அவ்வகையில் 14-வது கூட்டு ராணுவ பயிற்சி வரும் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    யூத் அப்யாஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் சாவ்பாட்டியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தில் நடைபெற உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அமெரிக்காவில் இருந்து 350 ராணுவ வீரர்களும், இந்தியா தரப்பில் அதே அளவிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.


    இருநாட்டு ராணுவத்திலும் உள்ள நிர்வாக கட்டமைப்பு, ஆயுதங்கள், உபகரணங்கள், நம்பிக்கையூட்டும் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation 
    உத்தரகாண்ட் மாநிலத்தில் மோகன்ரி என்ற மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #Uttarakhand
    அல்மோரா:

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

    இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை கவனித்து வருகின்றனர்.



    பத்ரோக்ஜன் - பிகியாசன் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Uttarakhand

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand #Accident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கின் மேல் இன்று மதியம் சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சுமார் 700 அடி பள்ளத்தாக்கில் அந்த வேன் கவிழ நேரிட்டது.

    இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மீனாட்சி மற்றும் ராதா ஆகிய இரு சிறுமிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விபத்து ஏற்பட்ட கார்ஜ் பள்ளத்தாக்கில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளில் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Uttarakhand #Accident
    உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Uttarakhand
    டேராடூன்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கூடுமான வரையில் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஜார்காண்ட் மாநிலத்தின் பக்தா என்ற கிராமத்தில் வீடு புகுந்து சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்ற 4 பேர், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    அதோடு நின்றுவிடாத அந்த கொடியவர்கள், அந்த 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Uttarakhand
    உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #UttarakhandBusAccident
    டேராடூன்:  

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலியானதாக முதக் கட்ட தகவல்கள் வெளியாகின.

    திஹ்ரி மாவட்டம் மற்றும் சம்பா மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் பலியானவர்களுக்கு மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, மாநில அரசு சார்பில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UttarakhandBusAccident
    உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #UttarakhandBusAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு திஹ்ரி மாவட்ட பேரிடர் மீட்புக்குழு மற்றும் சம்பா மாவட்ட மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்தில் பலியானவர்களுக்கு மாநில அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது. #UttarakhandBusAccident
    உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #NDTiwari
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி, மூளை செயல் இழப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    92 வயதான என்.டி.திவாரிக்கு நேற்று  முதல் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இதுகுறித்து அவரது மகனான ரோகித் சேகர் திவாரி கூறுகையில், ‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

    அவர் உடல் நலம் பெற உத்தரகாண்ட் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார். #NDTiwari  #Tamilnews
    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 40 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Uttarakhand
    சர்வதேச யோகா தினத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டேராடூன் வந்தடைந்தார். #Dehradun #InternationalYogaDay #PMModi
    டேராடூன்:

    சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகாவின் தாயகமான இந்தியாவில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 55,000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.  

    இந்நிலையில், பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று இரவு டேராடூன் வந்தடைந்தார். அவரை உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை சென்ற பிரத்மர் மோடி இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Dehradun #InternationalYogaDay #PMModi
    ×