என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆக்கி"
இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றது. இதில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான ஷாட்டுகளை அடித்ததோடு, பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது’ என்றார். #India #Malaysia #Hockey
இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நடக்கிறது.
16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 17-வது இடத்தில் உள்ள இத்தாலியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. லால்ரெம்சியாமி இந்த கோலை அடித்தார். 45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நேகா கோயல் 2-வது கோலை திணித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மற்றொரு இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா கோலாக மாற்றி அசத்தினார். பதில் கோல் திருப்ப இத்தாலி அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். நடப்பு தொடரில் இந்திய அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்துடன் மல்லுகட்டுகிறது. நல்ல பார்மில் இருக்கும் அயர்லாந்து அணி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #WomenHockeyWorldCup #India #Ireland
16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.
இன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது. #WomenWorldCupHockey #Japan #NewZealand
கராச்சி:
பாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது. 1986 ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் விளையாடிய அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதயத்தில் உள்ள பேஸ்மேக்கரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிடம் சமீபத்தில் உதவி கேட்டு இருந்தார்.
மன்சூர் அகமதுவுக்கு உதவ சென்னை ஹாக்கி சங்கம் முன்வந்தது. இதே போல அவருக்கு இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய தயார் என்று இந்தியாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் கராச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அகமது மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.
முன்னதாக அவருக்கு பாகிஸ்தான் அரசு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய முன்வந்தது. ஆனால் மன்சூர் அதை ஏற்க மறுத்து இந்தியாவில்தான் அறுவை மாற்று சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் அதற்குள் இறந்து விட்டார்.
1992-ம் ஆண்டு ஓலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற போதும், 1994-ல் உலக கோப்பையை வென்ற போதும் பாகிஸ்தான் அணியில் மன்சூர் அகமது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #hockeyplayerMansoordead #hockeyplayer
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்