search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து"

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். #Thailand #ShoppingMall #FireAccident
    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.

    அப்போது வணிக வளாகத்தின் 8-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது.

    இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒருவர் வணிக வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.



    இதற்கிடையில் தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் தீயில் கருகி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  #Thailand #ShoppingMall #FireAccident 
    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. #Thailand #Tourist #Selfie #DeathPenalty
    தைபே:

    தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.

    இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.



    இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக ‘செல்பி’ படங்களை எடுக்கின்றனர்.

    இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுக்க மாகாண அரசு தடைவிதித்தது.

    எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த முடிவு சுற்றுலாவை வெகுவாக பாதித்து, கடற்கரையை மூட வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  #Thailand #Tourist #Selfie #DeathPenalty
    தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. #Thailand #WirapolSukphol
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

    அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

    இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Thailand #WirapolSukphol #tamilnews
    ×