search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுதேர்தல்"

    ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
    அமராவதி:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.



    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் 9 மணி வரை மாற்று இயந்திரம் இல்லாமல் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

    இதனையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த ஏராளமான வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள்.

    எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்களின் வாக்குகள் பதிவான இரு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. #ECPvoidpolls #femalevoterslowturnout
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமைகள் நிலநாட்டப்பட வேண்டும் என்னும் அந்நாட்டு தேர்தல் விதிமுறைகளின்படி,  பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்கள் வாக்களிக்கும் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத்துக்கும் 4 மாகாணங்களுக்கான சட்டசபைக்கும் நடைபெற்ற தேர்தலில் ஷங்லா மற்றும் வடக்கு வசிரிஸ்தான் பாராளுமன்ற தொகுதிகளில் மிக குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். 

    ஆனால், வாக்குப்பதிவு நிலவரப்படி  வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள மொத்தம் 77 ஆயிரத்து 537 பெண்களில் வெறும் 6 ஆயிரத்து 364 பேர் (8.91 சதவீதம்) மட்டுமே வாக்களித்திருந்தனர்.

    இதேபோல், ஷங்லா தொகுதியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்களில் 12 ஆயிரத்து 663 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்த எண்ணிக்கையும் மொத்த பெண் வாக்காளர்களில் பத்து சதவீதத்துக்கும் குறைவு என்பதால்  இந்த இரு  தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

    இதைதொடர்ந்து, அங்கு மறுதேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் வேட்புமனு தாக்கலும், வாக்குப்பதிவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இரு தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஷங்லா தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வேட்பாளர் இபாதுல்லா கான்,  வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மோஹ்சென் ஜாவெத் வெற்றி பெற்றதாக முன்னர் முடிவுகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். #ECPvoidpolls #femalevoterslowturnout 
    உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 73 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #kairanabypoll
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதி எம்.பி ஹுகும் சிங் சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து, கைரானா உள்ளிட்ட காலியாக இருந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று மேற்கண்ட அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கைரானா மற்றும் நூர்ப்பூர் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து கைரானா தொகுதியில் 73 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்தால் நாளை 73 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #kairanabypoll
    ×