search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெனோவோ"

    லெனோவோ நிறுவனத்தின் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
     



    லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் லெனோவோ நிறுவனத்தின் HX03 கார்டியோ மற்றும் HX03F ஸ்பெக்ட்ரா பேன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் OLED மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம், தேதி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதில் இதய துடிப்பு சென்சார் வழங்கப்படாத நிலையில், 60 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய HX06, பில்ட்-இன் ஸ்டான்டர்டு யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. 

    இதை கொண்டு நேரடியாக கம்ப்யூட்டர் அல்லது யூஎஸ்பி சார்ஜர் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்ய முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கேபிள்களும் தேவைப்படாது.



    லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சிறப்பம்சங்கள்:

    - 0.87 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
    - ஸ்டெப்கள், தூரம், எரிக்கப்பட்ட கலோரிக்கள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
    - அழைப்பு ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள்
    - இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம்
    - கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67)
    - எடை: 20 கிராம்
    - ப்ளூடூத் 4.2 LE
    - ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
    - ஐஓஎஸ் 8.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
    - 60 எம்ஏஹெச் பேட்டரி

    லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் கருப்பு நிறம் கொண்டிருப்பதோடு, மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு குறித்த டீசர் பதிவிடப்பட்டு இருக்கிறது.




    மோட்டோ இ5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே நிகழ்வில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர் நிர்ணயித்திருக்கும் விலை என்பதால் இது அதிகாரப்பூர்வ விலை கிடையாது

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது, எனினும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல்கள் ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - டர்போ பவர் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.13,495) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டு ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லெனோவோவின் மோட்டோரோலா தனது ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.  

    மோட்டோரோலா ஒன் பவர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெயின் நாட்டு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3780 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி, f/1.8 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி சென்சார், f/2.0 அப்ரேச்ர் முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் X போன்ற நாட்ச், கீழே சிறிய சின், பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா மாட்யூல் அதன் கீழ் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டது.

    இதுதவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
    கேம்ப்ர்டிஜ் அனாலிடிகாவை தொடர்ந்து சீன நிறுவனங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் புதிய பதில் அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    "அமெரிக்காவில் இயங்கி வரும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை போன்றே ஃபேஸ்புக் நிறுவனமும் சீன நிறுவனங்களுடன் இணைந்து தங்களது சேவைகளை சீன நிறுவன சாதனங்களில் இயங்க வைக்க ஒன்றிணைந்து பணியாற்றியது," என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்தங்கள் பிரிவு தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஃபேஸ்புக் சார்பில் ஹூவாய் மட்டுமின்றி லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    பிளாக்பெரி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை போன்ற உரிமையை மட்டுமே சீன நிறுவனங்களுக்கும் வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒப்பந்தத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் மதம், அரசியல் விருப்பம், பணி, கல்வி மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள வழி செய்கிறது. 

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தி வந்தது எங்களுக்கு தெரியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் ஆப் சேவைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் நிறுவனங்களுடனான இன்டர்ஃபேஸ் ஏற்பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.


    கோப்பு படம்
    ஹூவாய் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து 2010-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, இவற்றின் காலக்கெடு இந்த வார இறுதியில் நிறைவுறுகிறது. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.

    சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


    கோப்பு படம்

    "ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

    ஏபிஐ அல்லது அப்ளிகேஷன் ப்ரோகிராம் இன்டர்ஃபேஸ் என்பது மென்பொருள்களின் பாகங்கள் எவ்வாறு இயங்கும் என்பதை குறிக்கும். சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மிக கவனமாக கையாளப்பட்டதாக ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சீன அரசுடனான தொடர்பு குறித்து ஹூவாய் பலமுறை மறுத்திருக்கிறது. மேலும், ஹூவாய் உள்கட்டமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டிங் சாதனங்கள் உலகம் முழுக்க 170 நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக ஹூவாய் நீண்ட காலமாக அறிவிக்கத்து வருகிறது.
    லெனோவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசட்5 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    பீஜிங்:

    லெனோவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசட்5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் என டீசர்கள் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 90% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.

    கிளாஸ் பேக் மற்றும் 2.5D வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 6 சீரிஸ் அலுமினியம் மெட்டல் ஃபிரேம், கைரேகை சென்சார் மற்றும் 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ இசட்5 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ZUI 3.9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
    - 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3300 எம்ஏஹெச் பேட்டபி ஃபாஸ்ட் சார்ஜிங்

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் அரோரா புளு, பிளாக் மற்றும் இன்டிகோ புளு நிறங்களில் கிடைக்கிறது. லெனோவோ இசட்5 பிளாக் 64 ஜிபி விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,625), அரோரா மற்றும் இன்டிகோ புளு நிறம் கொண்ட 64 ஜிபி மாடல் 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,670) என்றும் 128 ஜிபி மாடல் 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,870) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் இசட்5 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
    பீஜிங்:

    லெனோவோ நிறுவனத்தின் இசட்5 ஸ்மார்ட்போன் புதிய டீசரை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சாங் செங் வெளியிட்டிருக்கிறார். சீன சமூக வலைத்தளமான வெய்போவில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

    முன்னதாக லெனோவோ பதிவிட்ட போஸ்டரில் இசட்5 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பேட்டரி குறித்த தகவல் இடம்பெற்றிருந்தது. அதன்படி லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் பேட்டரி 45 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என தெரியவந்தது. கடந்த சில நாட்களாக லெனோவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி வருகின்றன.

    பேட்டரி பேக்கப் அம்சத்தை தொடர்ந்து புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் கேமரா சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியின் சமீபத்திய புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, போர்டிரெயிட் மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    லெனோவோ இசட்5 மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஏஐ (AI) டூயல் கேமரா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதன்படி இ:ட்5 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. டூயல் பிரைமரி கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இருப்பதால் புகைப்படங்களை அதிக தெளிவாக படமாக்க முடியும்.

    2018-ம் ஆண்டில் இதுவரை வெளியாகி இருக்கும் பெரும்பாலான மொபைல் போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனிலும் இந்த தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு வித்தியாச அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் 100 சதவிகத ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது.
    பீஜிங்:

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் முதல் டீசரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன துணை தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்திருந்த நிலையில், இசட்5 ஸ்மார்ட்போனின் மற்றொரு அம்சத்தை புதிய டீசரில் தெரிவித்திருக்கிறார்.

    புதிய டீசரில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இன்டெர்னல் மெமரி கொண்டு ஸ்மார்ட்போனில் 10 லட்சம் புகைப்படங்கள், 2000 ஹெச்டி திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்களை சேமிக்க முடியும். இன்டெர்னல் மெமரி தவிர புதிய ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.



    சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 128 ஜிபி அல்லது 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு வரும் நிலையில், லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4000 ஜிபி இன்டெர்னல் மெமரி மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போன் சுமார் 95% அதிகமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் முழுமையான ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெறலாம் என தோன்றினாலும், புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் இருக்காது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்பக்கம் உள்ள பெரிய பெசல்களை அகற்றும் வழிமுறையை லெனோவோ கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.



    ஐபோன் X போன்று இல்லாமல் புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்கம் செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் போன்றவை இடம்பெறவில்லை. அந்த வகையில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமராவும், ஆடியோ வைப்ரேஷன் மூலமாக டிரான்ஸ்மிட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    லெனோவோ நிறுவன துணை தலைவரின் முந்தைய போஸ்ட்களில் புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்த 18 காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பங்களும், நான்கு தொழில்நுட்ப திருப்புமுனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகின் சில முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
    வாஷிங்டன்:

    தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் மோட்டோரோலா வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கவரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மைக்ரோசாஃப்ட் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் அந்நிறுவனம் ஹின்ஜ் பகுதியில் சிறிய டிஸ்ப்ளே உள்பட மூன்று ஸ்கிரீன்களை பயன்படுத்தும் சாதனத்திற்கான காப்புரிமையை கோரியிருப்பது தெரியவந்துள்ளது. 

    டட்சு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்வதேச காப்புரிமை மையம் மோட்டோரோலாவிற்கு மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் அகலமான செவ்வக டிஸ்ப்ளே மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும், மடிக்கப்படாத நிலையில் டேப்லெட் போன்றும் வேலை செய்யும் என தெரியவந்துள்ளது.


    புகைப்படம்: நன்றி FreePatentsOnline

    மேலும் இதன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் ஹின்ஜ் அருகில் சுருட்டி வைக்கக்கூடியதாகவும்ஸ இதன் டிஸ்ப்ளேவை பாதுகாக்கவும், போனின் ஸ்டேன்ட் போன்று வேலை செய்யவும் கவர் ஒன்றும் வழங்கப்படுவது காப்புரிமையில் தெரியவந்துள்ளது. இந்த கவர் புதிய சாதனத்தின் வயர்லெஸ் சார்ஜர் போன்றும் வேலை செய்யலாம் என கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் ட்விட்டரில் வெளியானது. இதில் ஸ்மார்ட்போனினை இரண்டு பக்கமும் மடிக்க முடியும் என்றும் இதில் இரண்டு பிரைமரி டிஸப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவை ஸ்மார்ட்போன் திறந்தால் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் மூன்றாவது டிஸ்ப்ளே ஹின்ஜ் பகுதியில் வழங்கப்படுகிறது. 

    நவம்பர் 9, 2016-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதற்கான காப்புரிமையை பதிவு செய்திருக்கிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் உண்மையில் உருவாக்கப்படுகிறதா அல்லது கான்செப்ட் வடிவில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் அறிவிப்பின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    ×