search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான்"

    ஜப்பானில் ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளனாது. விமானத்தில் சென்ற விமானியின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. #Japan #F35FighterJet
    டோக்கியோ:

    ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை ‘எப்-35’ ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர வேறுயாரும் இல்லை.

    விமானம் புறப்பட்டு சென்ற ½ மணி நேரத்துக்கு பிறகு திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

    இந்த நிலையில், ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. நேற்று அதிகாலையில் அந்த விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. அதே சமயம் விமானத்தில் சென்ற விமானியின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த விமானம் விமானப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது. 
    ஜப்பானில் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #BonsaiTree #Japan #Stolen #400yearoldtree
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே பூங்கா அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள். போன்சாய் மரங்கள் என்பது இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி தொட்டிகளில் வளர்ப்பது ஆகும். இந்த நிலையில், அந்த தம்பதியின் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63 லட்சத்து 52 ஆயிரம்) ஆகும்.

    அந்த மரங்களை தாங்கள் குழந்தைகளை போல் வளர்த்து வந்ததாகவும், அவை காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என கூறும் அந்த தம்பதி, மரங்களை திருடி சென்றவர்கள் அவற்றுக்கு முறையாக நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். #BonsaiTree #Japan #Stolen #400yearoldtree
    ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. #JapanEarthquake
    டோக்கியோ:

    உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.



    இந்நிலையில் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவின் ராவுசு பகுதியில் இருந்து 60 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    முன்னதாக கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜாகின்தோஸ் தீவில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இயோனியன் கடற்பகுதியில் உள்ள இந்த தீவின் தென்மேற்கில் பூமிக்கடியில் 35.9 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.  #JapanEarthquake

    ×