search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாங்காக்"

    தாய்லாந்து நாட்டின் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #BangkokFire
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காங். இந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பாங்காங் சென்ட்ரல் வேர்ல்டு ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங் மாலில் இன்று மாலை திடீரென தீ ஏற்பட்டது. மாலின் 8வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்  தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #BangkokFire
    பாங்காக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #BangkokToxicAir
    பாங்காக்:

    தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது.  இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது.  இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின் போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகளை வெளியிட்டு, தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் படியும், இதுபோன்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  

    இதனையடுத்து அடுத்த சில வாரங்களுக்கு பள்ளிகள் மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தாய்லாந்து அரசின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பின்னரும் காற்றில் எந்த மாறுபாடும் இல்லாமல் நச்சுத்தன்மையின் வீரியம் அதிகரித்து வருகிறது. மேலும்  ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BangkokToxicAir
    அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பேங்காக் நகருக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #AhmedabadAirport #SpiceJet

    அகமதாபாத்:

    அகமதாமாத் நகரில் இருந்து பேங்காக் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ரன்வேயில் புறப்பட தயாரானது. 188 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில், விமான டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால், விமான நிலைய வளாகம் பதற்றமாகியது.

    தீ விபத்து எதுவும் ஏற்படும் முன்னரே, மீட்புக்குழுவினர் அங்கு பயணிகளை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக மற்ற சில விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. #AhmedabadAirport #SpiceJet #TamilNews
    ×