search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாஸ்திரி"

    கேரளாவில் பிஷப் பலாத்கார விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தன்னை 13 முறை கற்பழித்தாக கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ் திரியை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருக்கும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

    தன்னை அந்த பி‌ஷப் 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கூறி உள்ளார். இது தொடர்பாக வைக்கம் போலீஸ் டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சங்கனாச்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி 7 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

    அப்போது அது தொடர்பான ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் புகார் கூறப்பட்டுள்ள பி‌ஷப் பிராங்கோ எந்த நேரத்திலும் கேரள போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற நிலை நிலவுகிறது.

    தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று பி‌ஷப்பை கைது செய்வதா? அல்லது நோட்டீசு அனுப்பி அவரை கேரளா வரவழைத்து கைது செய்யலாமா? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. ஆலப்புழாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரின் தந்தை இந்த புகாரை கூறி உள்ளார். அவர் கூறும் போது தனது மகள் ஜலந்தரில் கன்னியாஸ்திரியாக இருப்பதாகவும், பி‌ஷப்மீது பாலியல் புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரிக்கு எதிராக தனது மகளை மிரட்டி அந்த பி‌ஷப் கடிதம் வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கேரள மாநிலம் கோட்டையம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பணியிடமாற்றம் செய்ததால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Kerala
    ×