search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.கே.நகர்"

    சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆர்.கே.நகர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார் #RKNagar #Vaibhav
    பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    சில தவிர்க்க முடியாத காரணங்கள், செய்யாத தவறுக்காக, நாங்கள் நிறைய பிரச்சனையை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தான் படம் ரிலீசாகும் என்று என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட யாரையும் குறிப்பிட விரும்பவில்லை, படம் ரிலீசாகும் போது உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். பிரச்சனை விரைவில் சரியாகும்.. இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை உருவாக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம், எனவே தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு, வாழவிடு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும், விதேஷ் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #RKNagar #Vaibhav

    தொகுதிக்கு வர விடாமல் தன்னை அ.தி.மு.க.வினர் தடுப்பதாக ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran #RKNagar
    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் எம்எல்ஏ டிடிவி தினகரன் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் போலீசார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொகுதிக்கு வந்த என்னை அதிமுகவினர் தடுக்கிறார்கள். இப்படி செய்தால் தொகுதிக்கு வரமாட்டேன் என நினைத்து போராட்டம் நடத்துகிறார்கள். 

    எங்களுக்கு எதிராக 20 ரூபாய் நோட்டைக்காட்டி போராட்டம் நடத்தியவர்கள் பொதுமக்கள் இல்லை. என் பெயரைச் சொல்லி டோக்கன் வழங்கியவர்கள் அ.தி.மு.க.வினர்தான். அவர்கள்தான் இப்போது போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுகப்போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #RKNagar
    ×