என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 115320
நீங்கள் தேடியது "வருவாய்த்துறை"
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. #ElectionCommission #ITRaids
புது டெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் ஆகியோர் தேர்தல் பிரசாரம், வேட்பு மனு தாக்கல் போன்ற பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதேப்போல் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கென தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் குறித்து , தேர்தல் நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, அமலாக்கத்துறையினை தவறாக பயன்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 281 கோடி பணம் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறையினர் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ElectionCommission #ITRaids

இதையடுத்து வருவாய் செயலாளர் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஆகியோர், இந்த சோதனை குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வருவாய் செயலாளர் ஏபி பாண்டே மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோர் இந்த சோதனைகளின் முழு விவரங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 281 கோடி பணம் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறையினர் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ElectionCommission #ITRaids
சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினரின் அதிரடி சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChennaiAirport #GoldSmuggling #DRI
சென்னை:
பண்டிகை காலங்களில் தங்கத்துக்கான மதிப்பு அதிகரிப்பதை மையமாக கொண்டு தங்க கடத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, 6.995 கிலோ எடைகொண்ட தங்கத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அதன் மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து, 82 ஆயிரத்து 715 ரூபாய் என தெரிவித்துள்ளனர். #ChennaiAirport #GoldSmuggling #DRI

அதன்படி, இன்று சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் கடத்தல் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 6.995 கிலோ எடைகொண்ட தங்கத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அதன் மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து, 82 ஆயிரத்து 715 ரூபாய் என தெரிவித்துள்ளனர். #ChennaiAirport #GoldSmuggling #DRI
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 48 மணி நேரத்துக்குள் 100 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #DRI #GoldSmuggling
புதுடெல்லி:
இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து தங்கம் போன்றவற்றை கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டன. மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியில் காரின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 55 கிலோ எடை கொண்ட தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தியவர்களை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்கமானது எல்லைப்பகுதியில் ஊடுருவி சட்டவிரோதமாக கடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், டெல்லி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், 34 கிலோ எடைகொண்ட தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தலில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை, பெங்களூரு, மதுரை ஆகிய விமான நிலையங்களில் நடைபெற்ற சோதனையில், 13 கிலோ அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 32 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DRI #GoldSmuggling

×

X