search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்"

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    சிறப்பு முகாம்

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள், கிராம அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்களும் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்தனர்.

    எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு

    சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன், முன்னாள் வார்டு செயலாளர் நீதிவர்மன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    இதேபோல கிச்சிப்பாளை யம் நாராயணநகர் பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை யும் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேவையான விண்ணப் பங்கள் இருப்பு உள்ளதா, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, மாநகர துணை செயலாளர் கணேசன், 42-வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்
    • புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. அமைப்பு செய லாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுபடி 1-1-2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவ டைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து இது வரை வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்காத வர்கள் 17 வயது பூர்த்தி யடைந்த இளம் வாக்கா ளர்கள் வாக்காளர் பட்டி யலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் இன்று 9-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடக்க உள்ளது.

    அதன்படி இம்மாதம் (நவம்பர்) 12-ந்தேதி சனிக்கிழமை, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 26-ந்தேதி சனிக்கிழமை, 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வாக்க ளிக்க கூடிய வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ வழங்கியும், ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வேறு தொகுதிக்கு மாற விரும்பினால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணெய் வாக்காளர் பட்டியல் என இணைத்திட படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க லாம்.

    4 நாட்கள் நடக்கும் இச்சிறப்பு முகாம்களில் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள 18 வயது நிரம்பிய வர்களையும், வாக்கா ளர் பட்டி யலில் இதுவரை பெயர் சேர்க்காத வரையும் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதில் புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

    • தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் ,மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இசக்கி முத்து உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், நாகராஜன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் ,மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இசக்கி முத்து உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான ஆய்வுப் பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டு உள்ளது. அதன் அடிப்படை யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதி களிலும் 7 லட்சத்து 73 ஆயிரத்து 533 ஆண் வாக்காளர்கள், 7,77,037 பெண் வாக்காளர்கள், 186 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 50,776 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டி லும் பெண் வாக்கா ளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,132 பேர். இதர வாக்காளர்கள் 114 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    குறைந்தபட்சமாக பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 99 வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,302 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும் 26 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 817 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 440 பெண் வாக்காளர்கள், 11 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 268 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 914 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 236 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 164 பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 25,164 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 683 பேர் உள்ள னர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 888 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 22,294 பெண் வாக்காளர்களும் 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,200 வாக்காளர்கள் உள்ளனர்.

    2022-ம் ஆண்டு மறு சீரமைப்பின் படி விளவங்கோடு தொகுதி யில் கூடுதலாக ஒரு வாக்கு ச்சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்ப டையில் தற்போது குமரி மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி யில் 272 வாக்குச்சா வடிகளும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது உடன் இருந்தனர்.

    • புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதைத்தொடர்ந்து நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

    இந்த பணியை பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. பண்ணாரி மற்றும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும் என தெரிவித்தனர். 

    • 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 295 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    உடுமலை :

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இந்த பணிகள் கடந்த 1 ந்தேதி தொடங்கியது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    மொத்தம் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு முகாம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை ஆடியோ ஆர் .ஜஸ்வந்த் கண்ணன் தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், தேர்தல் துணை தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் 50 பேருடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 32 மாணவ மாணவிகளின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் இதுவரை 20 சதவீத வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவம் வினியோகிக்கப்பட்டது.
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவம் வினியோகிக்கப்பட்டது. இவற்றை பரமத்தி வேலூர் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகாந்த் ,வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராஜா ஆகியோர் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    எனவே, வாக்காளர்கள் தாமாகமுன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமு கப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகத்திலும் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் இணைத்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

    வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் லட்சுமி. கிராம நிர்வாக அதிகாரி செல்வி .ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஆதார் எண்ணுடன் இணைக்க மதுரையில் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

    வாக்காளர்கள் www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை நேரடியாக இணைத்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடி பணியாளர்கள், பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று படிவம் 6B அல்லது கருடா கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம், நாளை (21-ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    பொதுமக்கள் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை விபரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பயன்பெறலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ண–னுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:-

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியானது 1.8.2022 முதல் தொடங்கி 31.3.2023-க்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலினை 100 சதவிகித தூய்மை–யாக்குவத ற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.

    வாக்காளரிடமிருந்து ஆதார் எண்ணை பெறும் வழிமுறைகள். வாக்கா–ளர்கள் தங்களது வாக்குச்சா–வடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்ப–டையில் படிவம் 6பி-ன் மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்க–லாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ன் மூலமாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்ப–திவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியினை மேற்கொள்வர். வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Portal மற்றும் Voter Helpline App மூலமாக இணைக்கலாம்.

    வாக்காளர்கள் இசேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி-ன் மூலம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலாளர் அறிவுறுத்த–லின்படி முதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 04.09.2022 அன்று நடைபெற இருக்கிறது. வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை என்ற நேர்வில், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்க–லாம்.

    அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி. அஞ்சலகம் மூலம் வழங்க–ப்பட்ட புகைப்படத்துடள் கூடிய கணக்கு புத்தகம், தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்க ப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பி–னர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன் மேம்பாடு துறையால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை உள்ளி–ட்டவை மூலமாக வாக்கா–ளர்கள் சமர்ப்பிக்கலாம்.

    எனவே வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதி–களின் வாக்காளர் பட்டிய–லின் 100 சதவிகித பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், எதிர்வரும் 1.4.2023-க்குள் அனைத்து வாக்காளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) குமரன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 8 பெயர்கள் விடுபட்டுள்ளதாக அப்பகுதி வாக்காளர்கள் அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணம் இருந்தும் இப்போது மட்டும் எங்களை வாக்களிக்க அனுமதிக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது.

    இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    • ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
    • 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு தேர்தல் கமிஷன் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும். வருகிற 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் வாக்காளரின் ஆதார் விபரங்களை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. சிறப்பு முகாம் நடத்தியும் விபரம் இணைக்கப்படும்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீடு, வீடாக சென்று விபரம் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முதற்கட்டமாக கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்பவாக்காளரின் ஆதார் விவரங்களை

    இணைக்கும் திட்டம்

    விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நடைபெற உள்ள தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான அழைப்பிதழ் தயார் நிலையில் உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவையாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,86,397 வாக்காளர்கள் வாக்களிக்க 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,60,294 வாக்காளர்கள் வாக்களிக்க 320 வாக்குச்சாவடி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கடும் வெயிலிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் போன்று அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அது வாக்காளர்களிடம் வழங்குவதற்கு தயார் நிலையிலும் உள்ளன. அந்த அழைப்பிதழில் கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்கிற தலைப்பில் அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை 5-ந் தேதி 18-04-2019 வியாழக்கிழமை சதுர்த்தி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது குடும்பத்தின் 100 சதவீதம் வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம் என்றும், அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல்விவரங்களுக்கு எண் 1950-ஐ தொடர்பு கொள்ளவும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் வாக்காளர்களின் பெயர் எழுதி, அவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    ×