search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா"

    கழுகு படம் மூலம் மிகவும் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் பிரபல நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். #Krishna #HighPriestess
    கழுகு படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கிருஷ்ணா. இப்படத்தை தொடர்ந்து, யாமிருக்க பயமே, வன்மம், யாக்கை, பண்டிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும் இந்த கட்டத்தில் தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.

    இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது, ‘நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது’ என்றார். 



    ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான கிருஷ்ணா, அடுத்ததாக மலையாள சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். #Krishna #PICCASSO
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கிருஷ்ணா. இவர் கடைசியாக தனுஷ் உடன் இணைந்து `மாரி 2' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

    அவரது நடிப்பில் அடுத்ததாக `கழுகு 2' படம் ரிலீசாக இருக்கிறது. இதில் கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவியும், முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடித்துள்ளனர்.


    இந்த நிலையில், கிருஷ்ணா அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சுனில் கரியட்டுகரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியதாக கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். `பிக்காசோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஷேக் அஃப்சல் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. #Krishna #PICCASSO

    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். #Kazhugu2 #Krishna
    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

    கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.



    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திலிருந்து சகலகலா வள்ளி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார்.

    ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi #YashikaAannand

    சகலகலா வள்ளி பாடல் வீடியோ:

    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna
    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

    கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
    மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

    தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.



    போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

    மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

    இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.



    கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

    மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.



    தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

    முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi

    கிரைம் திரில்லர் கதையுடன் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் பி.கிருஷ்ணா என்பவர் புதிய படம் ஒன்றை உருவாக்க இருக்கிறார். #Manjakadu
    ரீமேக் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நிஷ்யப்டா 2’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

    ‘நிஷ்யப்டா 2’ படம் தமிழில் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார். இப்படத்தின் ரீமேக் உரிமையை ரவிபாபு என்பவரிடம் முறைப்படி பெற்று, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார். அலைன்ஸ் பிக்சர்ஸ் சார்பில் உருவாக இருக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி வருகிறது.


    இயக்குனர் பி.கிருஷ்ணா

    இப்படத்தின் கதாநாயகன், நாயகி, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் படப்பிடிப்பு, டீசர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.
    கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா - வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `களரி' படத்தின் விமர்சனம். #KalariReview #Krishna #VidyaPradeep
    கிருஷ்ணா கேரளவில் தமிழர் வாழும் பகுதியான வாத்துருதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகிவிடுகிறார். இதனாலேயே சண்டை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார். தன்னை அடிக்க வருபவர்களை பார்த்து நடுங்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரது தங்கை சம்யுக்தாவோ தன் அண்ணணுக்கு நேர் எதிராக பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அதை நிற்க கூடியவர். 

    அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு சண்டை போட்டுவிடுவார். கிருஷ்ணா சென்று பேசி அதனை தீர்த்து வைத்துவிட்டு வருவார். கிருஷ்ணாவுக்கு தன் தங்கை சம்யுக்தாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது லட்சியம். 



    ஆனால் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கரால், வரும் வரன் எல்லாம் விட்டுப்போகிறது. இந்த நிலையில் விஷ்ணுவை காதலிக்கிறார் சம்யுக்தா. பெண் கேட்டு வரும் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

    உள்ளூர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷிடம் வேலை பார்ப்பவருக்கு சம்யுக்தா மீது காதல் ஏற்பட, எம்.எஸ்.பாஸ்கருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து, சம்யுக்தாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, அவளது காதலன் விஷ்ணுவுடன் சேர்ந்து சுற்றுவதை கிருஷ்ணா பார்த்து விடுகிறார். மேலும் தனது தங்கை கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது.



    கடைசியில் சம்யுக்தாவின் வாழ்க்கை என்ன ஆனது? கிருஷ்ணா தனது கோழைத்தனத்தில் இருந்து விடுபட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கிருஷ்ணாவுக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடம். தங்கை மீது பாசம், அப்பா மீது வெறுப்பு, பழி வாங்கும்போது ஆக்ரோ‌ஷம் என்று நிறைவாகவே செய்திருக்கிறார். அவரது காதலி வித்யா பிரதீப்புக்கு அதிகம் வேலை இல்லை. வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஷ்ணு தனது நடிப்பின் மூலம் அனைரையும் கவர்கிறார்.



    தங்கையாக வரும் சம்யுக்தா பாசத்தை பொழிகிறார். ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கச்சி அறிமுகம். எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், பாண்டி, சென்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

    கோழையாக இருக்கும் ஒருவன் தங்கைக்காக பழி வாங்க எடுக்கும் அவதாரமாக படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் சந்த். திரைக்கதையில் எந்த வித திருப்பமும் இல்லாமல் செல்கிறது படம். கிருஷ்ணாவின் கோழைத்தனம் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்து போன கதை என்பதால் அடுத்தடுத்த காட்சியை எளிதில் யூகிக்க முடிகிறது. படம் கேரளாவில் உருவாகி இருந்தாலும் ரொம்பவும் மலையாள வாசனை இல்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் களரி மனம் கவர்ந்து இருக்கும்.

    வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். குருதேவின் ஒளிப்பதிவில் கேரளாவின் தமிழர் வாழும் பகுதி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. 

    மொத்தத்தில் `களரி' நன்றாக கிளறியிருக்கலாம். #KalariReview #Krishna #VidyaPradeep

    கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம். #Kalari #Krishna #VidyaPradeep
    நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரிப்பில் உருவவாகியிருக்கும் படம் ‘களரி’.

    கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.

    படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, 

    ‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.



    கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.

    உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது என்றார். படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kalari #Krishna #VidyaPradeep

    களரி படத்தின் டிரைலர்:

    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் `கழுகு-2' படத்தின் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna
    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது.

    கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.



    மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. செந்நாய் வேட்டை பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் `கழுகு-2' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிபரல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Kazhugu2 #Krishna
    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது.

    கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் கைப்பற்றியிருக்கிறது.

    இந்தப படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி வருகிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi

    கழுகு 2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்க இருக்கும் ‘திரு.குரல்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் நடிக்க இருக்கிறார். #Krishna #Thirukural
    நடிகர் கிருஷ்ணா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கழுகு 2’. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து ‘கழுகு 2’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

    இப்படத்தை அடுத்து கிருஷ்ணா ‘திரு.குரல்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இவருடன் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் பிரபு இயக்கும் இப்படத்தை என்.எச்.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் எச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் துவங்குகிறது. இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தை  விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.
    கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் `கழுகு-2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர். #Kazhugu2 #Krishna
    சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் துவங்கியது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.  

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் `கழுகு-2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. 



    ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர், துப்பாக்கி முனையில் நடிகர் கிரிஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர். 

    அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது. இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறை, அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர். 

    அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி வருகிறது.  #Kazhugu2 #Krishna

    ×