search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்கேநகர்"

    ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டதை போன்று நாகர்கோவிலிலும் பா.ஜனதாவினர் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #Congress
    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தற்போது கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் பணப்பட்டுவாடா செய்து வருகிறது. இச்செயல்களை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்வதில்லை. மோடிக்கு எதிரானவர்கள், இந்தியாவிற்கும் எதிரானவர்கள் என்று உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் கூறியிருப்பது மக்கள் மனதை காயப்படுத்தி உள்ளது.

    நாகர்கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா பிரசார காரில் பணம் மற்றும் பணம் வினியோகம் செய்வதற்கான டோக்கன்களை கொண்டு சென்றனர். இதனை நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் காரில் டோக்கன்கள் மட்டும் இருந்ததாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் பொய்யானது.

    பல லட்ச ரூபாய் காரில் இருந்ததாகவும், பணப்பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் மேலிட தலைவர்கள் அழுத்தம் காரணமாக காரில் பணம் இருந்த வி‌ஷயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டதை போன்று நாகர்கோவிலிலும் பா.ஜனதாவினர் செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கியாஸ் விலையும் பலமுறை உயர்ந்துள்ளது. இது பற்றியெல்லாம் பேசாத மோடி, நாட்டிற்கு தேவையில்லா கருத்துக்களை பதிவிடுகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த ஒரு உள்கட்டமைப்பும் பொன். ராதாகிருஷ்ணன் கொண்டு வரவில்லை. இந்த 5 வருடத்தில், பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு வாக்களித்தால் இன்னும் பல நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு வாக்களிப்பதற்கு சமம். இதனால் நமது நாட்டின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விடும்.

    இவ்வாறு சஞ்சய்தத் கூறினார். #Congress
    ×