search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளியந்தோப்பு"

    புளியந்தோப்பில் வீடு இடிந்து தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பூர்:

    புளியந்தோப்பு கன்னிகாபுரம் நியூ காலனியில் காசியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வெங்கடேசன் (வயது 32). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது மனைவி சஞ்சிதா (28), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (3) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சஞ்சிதா, யுவஸ்ரீ ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.

    புளியந்தோப்பில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்தவர் துக்காராம் (வயது 42). செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தாராபாய் (32). இவர் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

    மனைவி தாராபாய் நடத்தையில் துக்காராம் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    நேற்று இரவு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நள்ளிரவில் துக்காராம் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போதும் மனைவியின் மீது அவருக்கு ஆத்திரம் தீர வில்லை. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    திடீரென்று அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பின்னர் துக்காராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னை புளியந்தோப்பு அருகே சிறுவனை கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு போகிப் பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தேவி தம்பதியின் மகன் அஜய் (3).அதேபகுதியில் உள்ள மாநகராட்சி உருது படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு சென்றான்.

    அப்போது பள்ளிக்கு வந்த ஒரு பெண் தான் சிறுவனின் அத்தை தேவி என்று கூறி மாணவனை அழைத்தார். இதை உறுதி செய்வதற்காக தன்னிடம் இருந்த போனில் சிறுவனின் தாய் பேசுவதாக ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதில் பேசிய பெண், தன் மகன் அஜய்யை அத்தையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை நம்பிய ஆசிரியை மாணவன் அஜய்யை அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார்.

    மாலையில் மகன் அஜய் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளில் தாயும், தந்தையும் தேடினார்கள். பள்ளிக்கு சென்று கேட்ட போது பையனின் அத்தை தேவி என்று கூறி அழைத்து சென்றதை தெரிவித்தனர். 2 பெண்கள் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது பள்ளிக்கு வந்த பெண் ஏற்கனவே பிரகாஷ் வீட்டில் கூலிவேலை செய்த குட்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 1 மணி அளவில் அந்த பெண் வசிக்கும் வியாசர்பாடி கணேசபுரத்துக்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குட்டியம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் சிறுவன் அஜய் தூங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே சிறுவனை மீட்டனர்.

    அவனை கடத்தி வந்த குட்டியம்மாள் (38), அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் விற்பதற்காக சிறுவன் அஜய்யை குட்டியம்மாளும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் கடத்தியது தெரிய வந்தது.மீட்கப்பட்ட சிறுவன் அஜய்யை பெற்றோரிடம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி ஒப்படைத்தார்.

    சென்னை புளியந்தோப்பில் நேற்று காலை முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றம் அவரது கூட்டாளிகளான 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    சென்னை புளியந்தோப்பு நரசிம்மர் தெருவை சேர்ந்த முதியவர் ராதா நேற்று அதிகாலையில் படுகொலை செய்யப்பட்டார். வீட்டு அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்ற அவரை காரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பிச் சென்றது.

    புளியந்தோப்பு போலீஸ் துணை கமி‌ஷனர் சாய் சரண் தேஜெஸ்வி, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கினார். போலீஸ் விசாரணையில் புளியந்தோப்பு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முதியவர் ராதாவை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் இன்று காலை கொலையாளிகளை சுற்றி வளைத்து பிடித்தனர். ஆற்காடு சுரேசும், அவரது கூட்டாளிகளான குபேந்திரன், சத்யா, ராஜேஷ், ரவி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    பிரபல ரவுடியான சின்னா என்ற சின்ன கேசவன் மற்றும் வக்கீல் பகத்சிங் ஆகியோர் கடந்த 2010-ம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆற்காடு சுரேசும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

    இதன்பின்னர், சின்னா கோஷ்டியை சேர்ந்தவர்கள் புளியந்தோப்பு பகுதியில் இருக்கக் கூடாது என்று ஆற்காடு சுரேஷ், மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் ரவுடி சின்னாவின் கூட்டாளிகள் பலர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அதே நேரத்தில் சின்னாவிடம் பல ஆண்டுகளாக கணக்கு பிள்ளையாக பணியாற்றிய முதியவர் ராதா தனது குடும்பத்தினருடன் புளியந்தோப்பு பகுதியிலேயே வசித்து வந்தார். இவர் ஆற்காடு சுரேசின் நடவடிக்கைகளை கண்காணித்து அவ்வப்போது சின்னாவின் கூட்டாளிகளுக்கு தகவல் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஆற்காடு சுரேஷ் ஆத்திரம் அடைந்து ராதாவை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையுண்ட ராதாவின் மனைவி பெயர் கற்பகம். சம்பத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சம்பத் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். #Tamilnews

    புளியந்தோப்பில் இன்று காலை வக்கீலின் தந்தையை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெரம்பூர்:

    புளியந்தோப்பு நரசிம்மன் நகரைச் சேர்ந்தவர் சம்பத். வக்கீல். இவரது தந்தை ராதா (வயது60).

    இன்று அதிகாலை 5 மணிக்கு ராதா சாஸ்திரி நகர்- திரு.வி.க.நகர் சந்திப்பில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம மனிதர்கள் அரிவாளுடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென்று ராதாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்த ராதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    உடனே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதிகாலையில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கொலையை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதாவின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    வக்கீலின் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராதாவுக்கும், வேறு யாருக்காவது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வக்கீல் சம்பத்துடன் ஏற்பட்ட தகராறில் அவரை பழிவாங்க தந்தை ராதாவை கொலை செய்தார்களா? என்று விசாரிக்கிறார்கள்.

    இது தொடர்பாக வக்கீல் சம்பத்திடம், அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    வக்கீல் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×