search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116083"

    டோனியின் மகள் 3 வயதான ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ என்ற பாடலை பாடி ‘அப்பா... உங்களுக்கு வயதாகி வருகிறது’ என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது. #MSDhoni #BirthDay #Ziva
    கார்டிப்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு நேற்று 37-வது பிறந்த நாளாகும். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி நிறைவடைந்ததும் தங்கியிருந்த ஓட்டலில் சக வீரர்களுடன் இணைந்து கேக்வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். கேப்டன் விராட் கோலியுடன் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும் டோனியை நேரில் வாழ்த்தினார்.



    டோனியின் மகள் 3 வயதான ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ என்ற பாடலை பாடி ‘அப்பா... உங்களுக்கு வயதாகி வருகிறது’ என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது. அவரது மனைவி சாக்‌ஷி பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘நீங்கள் எப்படிப்பட்ட மனிதநேயம் மிக்கவர் என்பதை கூற என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை. 10 ஆண்டுகளாக உங்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது தொடரும். எனது வாழ்க்கையை மிகவும் அழகாக்கியதற்கு அளவில்லாத நன்றியும், அன்பும் உங்களுக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார். டோனி காலை அகலமாக விரித்து ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் ஷேவாக் அதை குறிப்பிட்டு ‘உங்களது வாழ்க்கை இதை விட நீண்டதாக இருக்கும். மேலும் உங்களது ஸ்டம்பிங்கை விட வேகமாக எல்லாவற்றிலும் மகிழ்ச்சியை காண்பீர்கள்’ என்று கூறியுள்ளார்.

    2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன டோனி, 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளை வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 
    ஆந்திர மாநிலத்தில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதற்காக பெற்ற மகளையே தந்தை கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. #AndhraPradesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் தொடராவுலப்பாடு பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர் சந்திரிகா. இவர் தனது கல்லூரி நண்பர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரிகா, தனது காதலருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தந்தை ஆத்திரமடைந்து சந்திரிகாவை கோடாரியால் தாக்கியுள்ளார். இதனால் சந்திரிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் சந்திரிகாவின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். காதலருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்து தந்தையே தன் மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh
    கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்ககோரி அவரது பெற்றோர்கள் தேனி நேருசிலை முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி அருகில் உள்ள பண்ணைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). இவரது மனைவி அன்னக்கொடி(40). இவர்களுக்கு பிரியங்கா(17) என்ற மகளும், செல்வராஜ்(16) என்ற மகனும் உள்ளனர். பிரியங்கா பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று ராஜாவும், அவரது மனைவியும் வீரபாண்டியில் நடந்த தங்களது உறவினர் வீட்டு வீசே‌ஷத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மகள் பிரியங்கா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். தங்களது புகாரில் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுமார் என்ற வாலிபர் கடத்திச்சென்றிருக்ககூடும் என தெரிவித்திருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    மகள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் வேதனையில் இருந்த ராஜா, அன்னக்கொடி, மகன் செல்வராஜ் ஆகியோர் இன்று தேனி நேருசிலை அருகே வந்தனர். திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தேனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவர்களிடம் தங்கள் மகளை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



    வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜ் (வயது 48). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி முத்துமாரி (42). இவர்களுக்கு மணிகண்டன் (14) என்ற மகனும், சத்யா (10) என்ற மகளும் உள்ளனர்.

    முத்துமாரி, தனது மகள் சத்யாவுடன் கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கல்லார் எஸ்டேட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சத்யா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று முத்துமாரியும், சத்யாவும் வீட்டின் பின்புறம் இருந்த விறகுகளை எடுத்து வீட்டுக்குள் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது புதருக்குள் இருந்து ஓடி வந்த சிறுத்தை கண்இமைக்கும் நேரத்தில் சத்யாவின் கழுத்தை கடித்து இழுத்து சென்றது. இதனை பார்த்த முத்துமாரி விறகு கட்டையால் தாக்கி விரட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த சத்யா பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனது மகள் சத்யா வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளுக்கு தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நான் என்னுடன் வேலைக்கு அழைத்து சென்று வந்தேன்.

    நேற்று முன்தினம் நான் விறகுகளை அடுக்கி வைத்து கொண்டு இருந்தேன். சத்யா எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள். அப்போது திடீரென புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை எனது மகளின் கழுத்தை பாய்ந்து கடித்து புதருக்குள் இழுத்து சென்றது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் எனது மகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஆக்ரோ‌ஷத்துடனும் கையில் இருந்த விறகு கட்டையால் சிறுத்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். அப்போது சிறுத்தை வலி தாங்காமல் எனது மகளை போட்டு விட்டு புதருக்குள் சென்று மறைந்து விட்டது.

    நல்லவேலையாக சிறுத்தை என்னை தாக்காமல் சென்று விட்டது. எங்கள் குலதெய்வம் மாரியம்மாள் எனது மகளையும் என்னையும் காப்பாற்றி விட்டாள்.

    தற்போது எனது மகள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தையின் நகம் மற்றும் பல் ஆழமாக பதிந்துள்ளதால் 9 தையல் போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×