search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116343"

    • வாரம்தோறும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.
    • இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக ஐதீகம்.

    சிவபெருமானுக்கு ஈசானம், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் என்ற ஐந்து முகங்கள் உள்ளன. இந்த முகங்களில் ஒன்றான அகோர முகம் தாங்கியிருப்பவர் அகோர மூர்த்தி. இவர் மயிலாடுதுறை மாவட்டடம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் கடும் தவம் புரிந்தான்.

    அவனுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டார். அப்போது அந்த அசுரன், சிவபெருமானின் சூலாயுதத்தை கேட்டான். அதைக்கேட்டதும் சிவபெருமான், கொஞ்சம் கூட தாமதிக்கமல் உடனடியாக அந்த சூலாயுதத்தை அசுரனிடம் தந்து அருளுகிறார். சூலாயுதத்தை பெற்ற அசுரன் தேவர்களையும், பொதுமக்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.

    அசுரனுடைய துன்பத்தை பொறுக்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிடுகின்றனர். இதனையடுத்து சிவபெருமான், நந்திதேவரை அழைத்து இது சம்பந்தமாக விசாரித்து வருமாறு அனுப்பினார். அசுரனிடம் சென்ற நந்தி தேவர், தேவர்களையும் பொதுமக்களையும் துன்புறுத்துவது குறித்து கேட்டார். அதற்கு அந்த அசுரன் கோபம் கொண்டு தனது சூலாயுதத்தால் நந்திதேவரின் ஒருபக்க கொம்பை முறித்ததுடன், உடலில் பல்வேறு இடங்களிலும் குத்திகாயப்படுத்தினான். அந்த காயத்தோடு சிவபெருமானிடம் நந்திதேவர் செல்கிறார். ரத்தத்தோடு தன் முன் நின்ற நந்திதேவரை பார்த்த சிவபெருமான் சினம் கொண்டு தனது ஐந்தாவது முகத்தில் இருந்து தீப் பிழம்பாக வெடித்து அகோர மூர்த்தியாக தோன்றுகிறார்.

    சிவபெருமானுடைய கோபத்தைக் கண்ட அசுரன், ஈசனிடம் சரணாகதி அடைகிறான். சினம் குறைந்த அகோரமூர்த்தி, அசுரனை மன்னித்து அருளுகிறார். அப்போது அசுரன் அவரிடம், தங்களை வந்து வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான். இதனை ஏற்ற அவர் அழகிய முகம் கொண்ட அகோரமூர்த்தி சுவாமியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். அவருடைய திருவுருவத்தில் கபாலம், மண்டை ஓடு மாலை, ஈட்டி, எண்ணிலடங்கா விஷ ஜந்துக்கள் உள்ளன. அதோடு இங்கே அஷ்ட(எட்டு) பைரவர்கள் இருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இவர்களை வணங்கினால் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்பது நம்பிக்கை யாகும்.

    கோவில் அமைவிடம்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவெண்காட்டில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அசுரனால் குத்துப்பட்ட நந்திதேவர், சுவேதாரண்யேஸ்வரர் சன்னிதி முன்பு எழுந்தருளியிருக்கிறார். மிகவும் விசேஷ சக்தி கொண்ட இவரை பிரதோஷ தினங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என சுவேதாரண்யேஸ்வரர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அசுரனால் குத்துப்பட்ட நந்திக்கு, சிவபெருமான் அனுக்கிரகம் செய்ததால், அகோரமூர்த்தி சன்னிதியில் காயம் இல்லாத நந்தி பகவான் அவரது காலடியில் இருப்பதை காணலாம். அதேபோல் அசுரனும் சரணாகதி ஆகி காலடியில் இருப்பதையும் காணலாம். அகோர மூர்த்தி சுவாமி மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இரவு தோன்றியதால், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஐந்தாம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    வாரம்தோறும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக ஐதீகம். மேலும் சிவனுக்கு உரிய மாதமான கார்த்திகை மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

    • ஏகபாத மூர்த்தி சிலைகள், பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன.
    • சிவபெருமானின் 64 சிவ வடிவங்களில் ஒன்றே ஏகபாத மூர்த்தி வடிவம்.

    சிவபெருமானுக்கு 64 சிவ வடிவங்கள் இருப்பதாக சைவ நெறி தத்துவம் சொல்கிறது. அதில் ஒன்றே, 'ஏகபாத மூர்த்தி.' ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி, ஒரே உருவத்தில் காட்சியளிப்பதே இந்த மூர்த்தி. ஊழிக்காலம் எனப்படும் பிரளய காலத்தில், இந்த உலகமே நீரில் மூழ்கி அழியும். அப்போது உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையவளாகிய சக்திதேவியும் கூட இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கிவிடுவார்கள்.

    ஊழிக்காலத்தில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என்று வேதங்கள் சொல்கின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாவும், அனைத்து உயிர்களும் தஞ்சமடையும் இடமாகவும் இந்த ஏகபாத மூர்த்தி இருக்கிறார். இவரது சிலைகள், பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன. நான்கு கரங்களுடன், மூன்று கண்கள் கொண்டவராய், ஒரு பாதத்தில் நின்ற கோலத்தில் அருளும் வடிவம் இவருடையது.

    ஒற்றைக் காலில் நிற்கும் சிவபெருமானுடைய இடுப்பின் வலது பக்கம் பிரம்மதேவனும், இடதுபக்கம் மகாவிஷ்ணுவும் காட்சி தருகின்றனர். சிவபெருமானின் ஒற்றைக் கால், இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் தூணாகக் கருதப்படுகிறது. வலது கை அபய முத்திரை காட்டியபடி இருக்க, இடது கை வரத முத்திரை காட்டுகிறது. பின் இரு கரங்களிலும் மான் மற்றும் மழு தாங்கி அருளும் இந்த மூர்த்தியே, 'ஏகபாதர்.'

    • இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்த ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.
    • சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார்.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம்.

    இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான். இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர். ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார் என்று பாருங்கள்....

    பாடல் எண் : 1

    முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே

    பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே

    வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்

    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 2

    நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்

    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு

    அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 3

    வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்

    சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்

    சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

    ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 4

    குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

    பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

    வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

    அணங்கன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 5

    நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

    பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்

    கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து

    அலமர்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 6

    விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்

    தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்

    எம்மான் ஈசன் எந்தையென் அப்பன் என்பார்கட்கு

    அம்மான்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 7

    செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்

    மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்

    இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 8

    முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல

    வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்

    பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ

    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 9

    துன்பநும்மைத் தொழாதநாள்கள் என்பாரும்

    இன்பநும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

    நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்

    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 10

    பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்

    சீரூர்பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்து

    ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்

    ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.

    அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை:

    சோமாவார விரதம்-திங்கள்,

    உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி,

    திருவாதிரை விரதம்-மார்கழி,

    சிவராத்திரி விரதம்- மாசி,

    கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,

    பாசுபத விரதம்-தைப்பூசம்,

    அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

    கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.

    • சுருட்டப்பள்ளியில், சயன கோலத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க முடியும்.
    • வித்தியாசமான அரிய வடிவங்களில் சிவபெருமான் அருள்புரிவதை பார்க்கலாம்.

    பூலோகத்தில் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆலயங்கள் மிகவும் குறைவு. காக்கும் கடவுளான மகாவிஷ்ணுக்கும், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் எண்ணற்ற ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மகாவிஷ்ணு, பெரும்பாலான ஆலயங்களில் உருவ தோற்றத்துடன்தான் காட்சி அளிப்பார்.

    சிவபெருமானோ ஓரிரு ஆலயங்களைத் தவிர, பெரும்பாலான ஆலயங்களில் சிவலிங்கத் தோற்றத்தில்தான் அருள்பாலிப்பதைக் காண முடியும். அப்படி இருந்தாலும், அதிலும் எண்ணற்ற வித்தியாசமான அரிய வடிவங்களில் சிவபெருமான் அருள்புரிவதை நாம் பார்க்கலாம்.

    அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    * தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது, திருநல்லூர் திருத்தலம். இங்கு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. பிருங்கி முனிவர், வண்டு வடிவம் எடுத்து சிவ பெருமானை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் மீது வண்டு துளைத்த அடையாளம் இருப்பதைக் காண முடியும்.

    * மயிலாடுதுறையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நீடூர். இங்கு அருட்சோம நாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது.

    * நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது, தலைச்சங்காடு என்ற ஊர். இங்கு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மகாவிஷ்ணு, சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கை பெற்ற காரணத்தால், இங்கு மூலவரான ஈசன், சங்கு வடிவில் காட்சி தருகிறார்.

    * கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் நெய் மலை போல் காட்சியளிப்பதை தரிசிக்க கண்கள் கோடி வேண்டும்.

    * பொதுவாகப் பெருமாள் கோவிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோவில்களில் மட்டும் சடாரி வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது. அவை, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், காளஹஸ்தி சிவன் கோவில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோவில் ஆகியவை ஆகும்.

    * திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவம் என்றும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறது.

    * ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை, காசியில் உள்ள 'அனுமன் காட்' காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம்.

    * ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில், சயன கோலத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க முடியும்.

    * பெங்களூரூவுக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில், சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

    * தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில் ராஜகம்பீர மண்டபத்தில், மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

    • சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
    • சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள்.

    உயரமான மூலவர் விமானம்

    * தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

    * கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

    * தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

    * திருபுவனம் கம்பேஸ்வரர் கோவில்

    சிவன் விசேஷ தலங்கள்

    * திருவேள்விக்குடி - கவுதுகாபந்தன ஷேத்ரம்

    * திருமங்கலகுடி - பஞ்சமங்கள ஷேத்ரம்

    * திருவையாறு - பஞ்ச நந்தி ஷேத்ரம்

    * திருவிடைமருதூர் - பஞ்சலிங்க ஷேத்ரம்

    * திருநீலக்குடி - பஞ்சவில்வாரண்ய ஷேத்ரம்

    * திருவிற்கோலம் - நைமிசாரண்ய ஷேத்ரம்

    * திருநெல்லிக்கா - பஞ்சாட்சரபுரம்

    * காஞ்சி - சத்தியவிரத ஷேத்ரம்

    * திருவல்லம் - வில்வாரண்யம்

    * திருகண்டியூர் - ஆதிவில்வாரண்யம்

    பன்னிரு ஜோதிர்லிங்க தலங்கள்

    * கேதாரம் - கேதாரேஸ்வரர் (இமயம்)

    * சோமநாதம் - சோமநாதேஸ்வரர் (குஜராத்)

    * மகாகாளேசம் - மகா காளேஸ்வரர் (உஜ்ஜையினி)

    * விஸ்வநாதம் - விஸ்வநாதேஸ்வரர் (காசி)

    * வைத்தியநாதம் - வைத்தியனாதர் (மகாராஷ்டிரம்)

    * பீமநாதம் - பீமநாதேஸ்வர் (மகாராஷ்டிரம்)

    * நாகேஸ்வரம் - நாகேஸ்வர் (மகாராஷ்டிரம்)

    * ஓங்காரேஸ்வரம் - ஓங்காரேஸ்வரர் (மத்தியப்பிரதேசம்)

    * த்ரயம்பகம் - திரயம்பகேஸ்வரர் (மகாராஷ்டிரம்)

    * குசுமேசம் - குஸ்ருணேஸ்வர் (மகாராஷ்டிரம்)

    * மல்லிகார்ஜுனம் - மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம், ஆந்திரா)

    * ராமநாதம் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)

    முக்தி தலங்கள்

    * காசி

    * காஞ்சி

    * மதுராபுரி

    * ஹரித்துவார்

    * உஜ்ஜையினி

    * அயோத்தி

    * துவாரகை

    பித்ரு கடன் தலங்கள்

    * காசி

    * கயா

    * திருவெண்காடு

    * பத்ரிநாத்

    * திருக்கோகர்ணம்

    * பவானி

    * திலதர்ப்பணபுரி

    * செதிலப்பதி,

    * ராமேஸ்வரம்

    * துவாரகாபுரி

    * பூம்புகார்

    * இடும்பாவனம்

    * சங்குமுகேஸ்வரர்

    காசிக்கு சமமான தலங்கள்

    * திருவெண்காடு

    * திருவையாறு

    * மயிலாடுதறை

    * திருவிடைமருதூர்

    * திருச்சாய்காடு

    * ஸ்ரீவாஞ்சியம்

    * விருத்தாசலம்

    * மதுரை

    * திருப்புவனம்

    சிவ பூஜையில் சிறந்த தலங்கள்

    * திருக்குற்றாலம் - திருவனந்தல் பூஜை

    * ராமேஸ்வரம் - காலை சந்தி பூஜை

    * திருவானைக்கா - உச்சிகால பூஜை

    * திருவாரூர் - சாயரட்சை பூஜை

    * மதுரை - இராக்கால பூஜை

    * சிதம்பரம் - அர்த்தஜாம பூஜை

    • மனித உடலை இயக்கும் ஆதாரங்களாக, ஆறு சக்கரங்கள் சொல்லப்படுகின்றன.
    • ஆறு ஆதாரங்களுக்கும் உரிய கோவில்களாக 6 சிவாலயங்கள் போற்றப்படுகின்றன.

    மனித உடலை இயக்கும் ஆதாரங்களாக, ஆறு சக்கரங்கள் சொல்லப்படுகின்றன. அவை, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவையாகும். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் உரிய கோவில்களாக 6 சிவாலயங்கள் போற்றப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.

    மூலாதாரம்- முதுகெலும்பு முடியும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆதாரத்திற்கான தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது.

    சுவாதிஷ்டானம் - தொப்புளின் கீழே அமைந்திருக்கிறது. இந்த ஆதாரத்திற்கான ஆலயமாக, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் போற்றப்படுகிறது.

    மணிப்பூரகம்- தொப்புளில் அமைந்துள்ளது. இந்த ஆதாரத்திற்கான கோவிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திகழ்கின்றது.

    அநாகதம் - நெஞ்சுப்பகுதியில் அமைந்த சக்கரம் இது. இந்த ஆதாரத்திற்கான ஆலயமாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சொல்லப்படுகிறது.

    விசுக்தி- தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சக்கரத்திற்கான ஆலயமாக திருக்காளத்தி காளத்தியப்பர் கோவில் உள்ளது.

    ஆக்ஞை- புருவ மையத்தில் இருக்கிறது. இந்த ஆதாரத்திற்கான கோவிலாக சிதம்பரம் நடராஜர் கோவில் இருக்கிறது.

    • தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.
    • சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல், விரதம் இருக்கிறார்களோ இல்லையோ... அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள் பக்தர்கள்.

    மாத சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் சிவபெருமான்.

    மாத சிவராத்திரி நாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது.

    • சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
    • சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    * திருவேள்விக்குடி - கவுதுகாபந்தன ஷேத்ரம்

    * திருமங்கலகுடி - பஞ்சமங்கள ஷேத்ரம்

    * திருவையாறு - பஞ்ச நந்தி ஷேத்ரம்

    * திருவிடைமருதூர் - பஞ்சலிங்க ஷேத்ரம்

    * திருநீலக்குடி - பஞ்சவில்வாரண்ய ஷேத்ரம்

    * திருவிற்கோலம் - நைமிசாரண்ய ஷேத்ரம்

    * திருநெல்லிக்கா - பஞ்சாட்சரபுரம்

    * காஞ்சி - சத்தியவிரத ஷேத்ரம்

    * திருவல்லம் - வில்வாரண்யம்

    * திருகண்டியூர் - ஆதிவில்வாரண்யம்

    • சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி.
    • அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    1. இறைவன் வீற்றிருக்கும் கருவறை (மூலஸ்தானம்)

    2. சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம் (அர்த்த மண்டபம்)

    3. பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம் (மகா மண்டபம்)

    4. சண்டிகேஸ்வரர் சன்னிதி

    5. அம்பாள் மூலஸ்தானம்

    6. கலை நிகழ்ச்சி நடத்தும் இடம் (நிருத்த மண்டபம்)

    7. பள்ளியறை

    8. நடராஜர் சன்னிதி

    9. கொடிமரம் இருக்கும் இடம் (துவஸதம்ப மண்டபம்)

    10. இறைவனுக்கான நைவேத்தியம் தயாரிக்கும் இடம் (மடப்பள்ளி)

    11. நால்வர் சன்னிதி (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)

    12.பசு பராமரிக்கும் இடம் (கோசாலை)

    13. அம்பாள் சன்னிதி

    14. சந்தான குரவர் சன்னிதி

    15. விழாக்கால சப்பரம் வைக்கும் இடம் (வாகன சாலை)

    16. விநாயகர் சன்னிதி

    17. முருகன் சன்னிதி

    18. வசந்த மண்டபம்

    19. பைரவர் சன்னிதி

    20. சூரியன் சன்னிதி

    21. சந்திரன் சன்னிதி

    22. ராஜகோபுரம் அல்லது நுழைவு வாசல்

    23. அபிஷேகத் தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக் குளம்

    24. நைவேத்தியத்திற்காக நீர் எடுக்கும் இடம்

    (மடப்பள்ளிக் கிணறு)

    25. தட்சிணாமூர்த்தி சன்னிதி

    இவைத் தவிர பெரிய ஆலயங்களில், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாக சாலை, ஆகம நூலகம் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.

    ×