search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லையா"

    மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். #NiravModi #VijayMallya
    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் அவரது ஜாமீன் மனு 2-வது முறையாக நேற்று முன்தினமும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இந்தியா சார்பில் ஆஜரான கிரவுண் சட்டப்பணிகள் குழு வக்கீல்களிடம் பேசிய நீதிபதி எம்மா அர்பத்னோட், நிரவ் மோடியை நாடு கடத்தினால் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த வக்கீல், ‘ஏற்கனவே விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார்’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்?’ என இளகிய மனதுடன் கேட்டார்.

    முன்னதாக, நிரவ்மோடிக்கு வயதான பெற்றோர் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மகன் இருப்பதாகவும், அத்துடன் அவர் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருவதாகவும் கோர்ட்டில் கூறிய அவரது வக்கீல் கிளேர் மோண்ட்கோமெரி, எனவே அவர்களை பராமரிப்பதற்காக நிரவ் மோடியை ஜாமீனில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் நீதிபதி அவரது வாதத்தை ஏற்கவில்லை.

    இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே அதை முன்வைத்து இந்த வாதத்தை நிரவ் மோடி தரப்பு எடுத்து வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NiravModi #VijayMallya
    கிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    ஜெய்ப்பூர்:

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.



    இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    சொத்துகளை முடக்கம் செய்வது குறித்து இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். #VijayMallya #UKCourt
    லண்டன்:

    இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, லண்டன் அருகே உள்ள ஹெர்ட்போர்டுஷைர் என்ற இடத்தில் வசிக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

    இது தொடர்பாக இந்திய அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த லண்டனில் உள்ள இங்கிலாந்து ஐகோர்ட்டு, அந்த நாட்டில் உள்ள மல்லையாவின் சொத்துகளை முடக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க கோரி இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.  #VijayMallya  #Tamilnews
    ×