search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஹல்"

    சோயிப் மாலிக், சர்பிராஸ் அகமது சிறப்பான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் பகர் சமான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஆனால் 31 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    மறுமுனையில் விளையாடிய பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 58 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார்.



    6-வது வீரராக களம் இறங்கிய ஆசிப் அலி 21 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் ரன்வேகத்தில் தடை ஏற்பட்டது. 50 ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. பகர் சமான் 12 ரன்னுடனும், பாபர் ஆசம் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    வெளிநாட்டு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என சாஹல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் இருந்தார்கள். மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சாஹல் இடம்பிடித்தார்கள்.

    இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். வாய்ப்பு கிடைத்தபோது அதில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பிளாட் பிட்ச்-யில் கூட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு தொடரில் லெக் ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பான விஷயம். இது உலகளவில் பிரபலமாகி வருகிறது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது கீழே விழுந்த சாஹலை, நெய்மருடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெல் ட்ரோல் செய்துள்ளனார். #ENGvIND
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அணி காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக நட்சத்திர வீரரான நெய்மர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    போதுமான பயிற்சி ஆட்டத்தில் விளையாட நேரம் கிடைக்கவில்லை. நேரடியாக உலகக்கோப்பையில் களம் இறங்கினார். எதிரணி வீரர்கள் அவரது காலை தட்டினாலே கீழே விழுந்து உருண்டு விடுவார். ஒரு போட்டியில் அல்ல. எல்லாப் போட்டிகளிலும் இப்படி நடந்ததால் நெய்மர் விமர்சனத்திற்கு உள்ளானார். அவர் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது என்று கணக்குப்போடும் அளவிற்கு உள்ளானார்.

    அத்துடன் மட்டுமல்லாம் நெய்மர் சேலஞ்ச் என்று உருவாக்கி, நெய்மர் என்றதும் கீழே விழுந்து உருளுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு ட்ரோல் செய்து வந்தனர்.



    இந்நிலையில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்தானர். விழுந்ததும் கால் மூட்டை பிடித்துக்கொண்டு உருண்டார்.

    இந்த காட்சியை வைத்து ‘கிரிக்கெட்டின் நெய்மர்’ என்று மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் ரசிகர்களும் சாஹலை ட்ரோல் செய்து வருகின்றனர்.
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவருக்கும் இது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. #ENGvIND

    இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

    அப்போது, தோல்விக்கு கூறப்பட்ட முக்கிய காரணம் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் (மணிக்கட்டை சுழற்றி பந்து போடும் சுழற்பந்து வீச்சாளர்கள்) இல்லை என்பதே. அப்போது, அணியில் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது பார்மில் இல்லாததால் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.

    அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரையும்தான் கோலி மலைபோல நம்பியுள்ளார். இடைநிலை ஓவர்களில் நிச்சயமாக சுழற்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும் என விராட் கோலி இங்கிலாந்து டூருக்கு கிளம்பும் முன்னர் கூறியிருந்தார். 

    இருந்தாலும், இங்கிலாந்து அணி தற்போதுதான் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் அடித்து துவைத்தது. அதிலும், 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனையும் படைத்தது. இந்த வெற்றி இந்திய அணியை சற்றே கலங்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால், எந்த இடத்திலும் சறுக்கிவிடக்கூடாது என்பதில் கோலி திட்டவட்டமாக உள்ளார். இந்த தொடர் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இருக்கும். தட்ப வெப்ப நிலை, ஆடுகளத்தின் தண்மை என அனைத்தையும் வீரர்கள் புரிந்து கொள்ளலாம்.

    இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளையும், சாஹல் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

    கடந்தாண்டு இந்திய அணியில் அறிமுகமான குல்தீப் யாதவ் விளையாடிய 20 ஒருநாள் போட்டியில் 15 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல, சாஹல் விளையாடிய 23 போட்டிகளில் இந்தியா 19 போட்டிகளில் வென்றுள்ளது. 

    இங்கிலாந்து அணியில் உள்ள பட்லர், ஜேசன் ராய், பைர்ஸ்டோ ஆகிய அதிரடி வீரர்களை குல்தீய், சாஹல் இணை வீழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டியுள்ளது என்று அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் தெரிவித்துள்ளார். #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (97), தவான் (74) ரன்கள் ஆகியோரின் அதிரடியால் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய அயர்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்களில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் 8 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பறினார்கள்.

    இந்நிலையில் இந்த இருவரையும் எப்படி சமாளிப்பது என்பதுதான் எங்களுக்கு முக்கிய வேலை என்று அயர்லாந்து கேப்டன் கூறியுள்ளார்.



    மேலும் இதுகுறித்து அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் கூறுகையில் ‘‘நாங்கள் வீரர்கள் அறையில் உட்கார்ந்து குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை 2-வது ஆட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பது குறித்து யோசிப்பது தேவையானது.

    இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி. இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்தார்கள். சுழற்பந்து வீச்சு 2-வது இன்னிங்சில் இந்த அளவிற்கு வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் சுழற்பந்து வீச்சை அதிக அளவில் பயன்படுத்திருக்க வேண்டும்’’ என்றார்.
    ×