search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாராபுரம்"

    தாராபுரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பதி சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). இவரது மனைவி சுலோச்சனா (35).இளையராஜா தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

    தாராபுரம்- பழனி ரோட்டில் 4 வழிச்சாலை நடைபெறுகிறது. இந்த பணியில் இளையராஜா ஈடுபட்டார். விடுமுறையில் மனைவியை பார்க்க செல்வார். இந்நிலையில் நேற்று நிர்வாகம் ஒதுக்கிய தங்கும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மணி(32). இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி சரண்யா(29). இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சரண்யா உப்புத்துறைபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    ரெட்டவலசு பிரிவில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் அருகே குளம் வெட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம் பாளையம் ஊராட்சியில் செட்டிகளம் கிராமம் உள்ளது.

    இப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை தேக்கி வைக்க குளம் வெட்டி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

    இதற்காக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 4.96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் குளம் வெட்டப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தேக்கலூர் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் செட்டிகளம் கிராமத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ 4.96 லட்சம் செலவில் தண்ணீரை தேக்கி வைக்க குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர்.

    இதனை கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் கிராமத்தில் குளம் எதுவும் வெட்டப்படாத நிலையில் அரசிடமிருந்து குளம் வெட்டியதாக நிதியை பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் செட்டி களம் கிராமத்திற்கு சென்ற தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சிறைபிடித்த பொது மக்கள் வெட்டிய குளத்தை காண்பிக்குமாறு கேட்டனர்.

    இதனால் பரபரப்பு உருவானது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அங்கு வந்து பொது மக்களை சமாதானம் செய்து அதிகாரிகளை விடுவித்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேங்கட லட்சுமி மற்றும் போலீசார் செட்டிகளம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உதவி பொறியாளர் பொறியாளர் ஜெயந்தி ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது குளம் வெட்டியதாக முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். #tamilnews

    தாராபுரம் அருகே சினிமா படபாணியில் குளத்தை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் தாளக்கரை செல்லும் ரோட்டில் செட்டிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை வெட்டி தூர்வாரி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் குளம் வெட்டப்படவில்லை.

    கடந்த 18-ந் தேதி தெக்கலூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செட்டிகுளத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் செலவில் குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர். வெட்டாத குளத்துக்கு அதிகாரிகள் அறிக்கை வாசித்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நஞ்சியம்பாளையம் ஊராட்சி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது குளம் வெட்டியதாக அரசு பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று கிராம மக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் கிராமத்தில் இருந்த குளத்தை காணவில்லை. எனவே அதனை கண்டுபிடித்து தரும்படி புகார் மனு அளித்தனர்.

    வடிவேலு பட பாணியில் கிராமக்கள் குளத்தை காணவில்லை என புகார் மனு அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி பொது மக்களுக்கு பதில் அளிப்பதற்காக தாராபுரம் ஊராட்சி ஒன்றிய மதிப்பீட்டாளர் சக்திவேல், உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயல் அலுவலர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், நாகேந்திரன் ஆகியோர் கிராமத்துக்கு வந்தனர்.

    அப்போது அங்கு இருந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை சிறை பிடித்தனர். தங்கள் ஊரில் வெட்டிய குளத்தை காட்டினால் தான் விடுவிப்போம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் பொதுமக்கள் இடையே 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சிறைபிடித்த அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். #Tamilnews

    பணம் வசூலாகாததால் மன உளைச்சல் அடைந்த நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்பேட்டை அத்திக்கோம்பை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 27). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி 3 நண்பர்களுடன் தினசரி வசூல் வட்டி, மாத வசூல் மற்றும் ஆட்டோ பைனான்ஸ் செய்து வந்தார்.

    பிரவீன்குமாருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.8 லட்சம் வசூலாகவில்லை. இதனால் நண்பர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் பிரவீன்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×