என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 116576"
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் அமித்ஷா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நடந்த தேர்தல் பிரசார பேரணியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது 1971-ம் ஆண்டில் நமது ராணுவத்தின் வீர தீரத்தால் பாகிஸ்தான் 2 ஆக பிரிந்தது. ஒன்று பாகிஸ்தான் மற்றொன்று வங்காளதேசம் ஆனது. போருக்கு பிறகு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை நமது தலைவர் வாஜ்பாய் பாராட்டினார். அப்போது இந்திரா காந்தி நாடு முழுவதும் பாராட்டப்பட்டார்.
அப்படி இருக்கும்போது பாலகோட் தாக்குதல் நடத்திய பிரதமர் மோடியை ஏன் பாராட்டக்கூடாது. புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 முதல் 42 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கொன்றனர். அந்த நேரத்தில் அவர்களை நமது ராணுவம் தாக்க முழு சுதந்திரம் கொடுத்தவர் பிரதமர் மோடி என குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #RajnathSingh
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், மேற்கு வங்காள பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் எழுப்பினார். அவருக்கு பிஜூ ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:-
கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் செயல்பட்டனர் என்று உடனடியாக முடிவுக்கு வந்து விடுவது தவறு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டது.
ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் சுற்றி வளைத்து, பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசியல் சட்ட சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் நடந்தவை அனைத்தும் முன்எப்போதும் இல்லாதது. அங்குள்ள நிலவரம் அபாயகரமானது. முதல்-மந்திரியே போராட்டம் நடத்துவதால், குழப்பநிலையை நோக்கி நிலைமை சென்றுள்ளது.
மாநில அரசின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அங்குள்ள நிலைமை, அரசியல் சட்ட எந்திர சீர்குலைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இயல்பு நிலையை உண்டாக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.
நாட்டின் விசாரணை அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல், கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, சி.பி.ஐ. தங்கள் கடமையை செய்ய விடுமாறு மம்தா பானர்ஜி அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
இதற்கிடையே, மம்தா பானர்ஜி தர்ணா குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இது, நரேந்திர மோடியின் நெருக்கடி நிலை அல்ல, மம்தா பானர்ஜியின் நெருக்கடி நிலை. சி.பி.ஐ.யிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மம்தா தர்ணா போராட்டம் நடத்துகிறார்.
அங்கு சட்டம்-ஒழுங்கும், அரசியல் சட்ட ஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இருப்பினும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு இப்போதைக்கு கேட்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநில பா.ஜனதா தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நீண்டநாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் மாநில தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை தொடர்ந்து ஸ்ரீதரன்பிள்ளை பா.ஜனதா மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் பதவி ஏற்றபிறகு பா.ஜனதா கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டவும் அவர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி கொச்சியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ., மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை மாறி வருகிறது. முதலில் நமக்கு ஒரு எம்.எல்.ஏ. பதவி ஓ.ராஜகோபால் மூலம் கிடைத்தது. அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிபெற்று மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பதவிகளை கைப்பற்றி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா பெரிய சக்தியாக மாறும். பா.ஜனதா கட்சி ஜாதி, மத வேறுபாடு இன்றி மக்களுக்காக பாடுபடும் கட்சி ஆகும். ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக மதவாத கட்சி என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மக்களுக்கு முன்மாதிரியாக திகழும் பாதிரியார்கள் பா.ஜனதாவில் இணைந்து உள்ளனர். பா.ஜனதாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கட்சியில் இணைந்ததாக கூறி உள்ளனர். கேரளாவில் எதற்கெடுத்தாலும் காங்கிரசும், கம்யூனிஸ்டும் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அந்த நிலை விரைவில் மாறும்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட உதவியை செய்துள்ளது. தொடர்ந்து இந்த மாநில மக்களுக்காக பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #RajnathSingh #BJP
போபால்:
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மத்திய பிரதேச மாநிலம் சாட்னா பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். சிலை திறப்பு விழாவுக்காக அவர் அங்கு சென்றார்.
ராஜ்நாத் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரை இறங்க சாட்னா பகுதியில் உள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் இரண்டு உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்வதால் மாவட்ட நிர்வாகம் மின்சாரத்தை துண்டித்தன.
நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை 3 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் 20 கிராமங்களும் இருளில் தத்தளித்தன.
இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது “மின்சாரம், தண்ணீர் இல்லாமல் கிராமத்தை சேர்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை” என்றார்.
12 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மின்சார அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். #RajnathSingh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்