search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரா"

    மதுராவுக்கும், எனக்கும் தெய்வீக உறவு உள்ளது என்று பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
    பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஹேமமாலினி மும்பையில் வசிப்பதால் அவரை வெளியூர்வாசி என சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் கூறி வருகின்றன.



    இந்நிலையில் ஹேமமாலினி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் மும்பையில் தான் வசிக்கிறேன். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?. எனக்கு மதுராவிலும் வீடு இருக்கிறது. மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது. நான் எம்.பியாக அறிவிக்கப்பட்டபோது கோவிலில் தான் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த போது இங்கு 250 முறை வந்துள்ளேன். இந்த தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதல் 2 ஆண்டுகள் எனக்கும், இந்த தொகுதி மக்களுக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைசி 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதை வரும் தேர்தலில் வெற்றி பெற்றும் தொடருவேன். எனக்கு மந்திரி ஆகும் ஆசை கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
    16 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், உபி மாநிலத்தை சேர்ந்த பக்கர் பாபா சாமியார், தொடர்ந்து 17வது முறையாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #LSpolls #Mathura #FakkarRamayani
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம்.

    பக்கர் பாபா பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 பாராளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வி அடைந்து வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்கவில்லை.

    இந்நிலையில், உ.பி.யின் மதுரா பாராளுமன்ற தொகுதியில் 17வது முறையாக போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பக்கர் பாபா கூறுகையில், இது எனது 9-வது பாராளுமன்ற தேர்தல். மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். #LSpolls #Mathura #FakkarRamayani
    நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். #Hemamalini #BJP
    ஜெய்ப்பூர்:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில்
    ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக விருப்பமா? என்றனர்.

    அதற்கு பதிலளித்த ஹேமமாலினி, எம்.பி ஆவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என தெரிவித்தார்.
     
    மேலும், பிரதமர் மோடி பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். மோடி போன்ற பிரதமரை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவு சிறப்பானவர் அவரது ஆட்சியின் கீழ் அனைவரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். யார் தேசத்திற்காக அதிகம் உழைக்கிறார்கள் என்பதையே முதலில் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hemamalini #BJP
    உ.பி.யின் மதுராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPrice #Congress #Protest
    லக்னோ:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக, உ.பி.யின் மதுரா நகரில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோ, டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #PetrolDieselPrice #Congress #Protest
    ×