search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைவு"

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் 20 லட்சத்துக்கும் கூடுதலாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல்லில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினமும் அனுப்பப்படுகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளில் வெகுவாக குறைந்தது. டேம் மற்றும் ஏரி மீன்கள் விற்பனைக்கு வந்தன. கடல் மீன்கள் இல்லாத காரணத்தினால் டேம் மற்றும் ஏரி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த மீன்களை விரும்பாதவர்கள் கறிக்கோழிகள் வாங்கினார்கள்.

    மேலும் கோடை விடுமுறை என்பதால் கறிக்கோழிகள் விற்பனை அதிகமானது. இதனால் அதன் விலை உயர தொடங்கியது. கடந்த மாதம் 1 கிலோ கறிக்கோழி உயிருடன் 180-க்கும், தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனையானது.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் திருவிழா தொடங்கி இருப்பதாலும், முக்கியமாக 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கி இருப்பதாலும் கறிக்கோழியின் விற்பனை குறைந்ததால் விலை குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதுபோல் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-ல் இருந்து ரூ.20 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழியின் விலை குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். #Tamilnews
    4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மாதம் தொடர்ச்சியாக 20 நாட்கள் அதிகரித்தால் பெட்ரோல் லிட்டர் 80 ரூபாயையும், டீசல் 73 ரூபாயையும் தாண்டியது.

    இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன.

    இந்த நிலையில் 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.31 ஆகவும், டீசல் ரூ.73.14 ஆகவும் இருந்தன. அவற்றின் விலை 30-ந்தேதி முதல் இன்று வரை படிப்படியாக குறைந்து வருகிறது.

    4 நாட்களாக விலை குறைந்தாலும் விலை உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன.

    கடந்த 30-ந்தேதி பெட்ரோல் ஒரு பைசாவும் டீசல் ஒரு பைசாவும் குறைந்தன. 31-ந்தேதி பெட்ரோல் 7 பைசா, டீசல் 6 பைசாவும் குறைக்கப்பட்டன.

    பெட்ரோல் நேற்று 6 பைசாவும், இன்று 8 பைசாவும் குறைந்துள்ளன. டீசல் 4 பைசா மற்றும் 8 பைசா வீதம் குறைக்கப்பட்டன. 4 நாட்களில் பெட்ரோல் விலையில் 22 காசும், டீசல் விலையில் 19 காசும் குறைந்துள்ளது.

    ஆனால் விலை உயரும் போது 25 பைசா, 30 பைசா, 35 பைசா என அதிகரித்தது. விலை உயர்த்தப்பட்ட அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,616-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 29-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. மறுநாள் (30-ந் தேதி) பவுனுக்கு அதிரடியாக ரூ.224 குறைந்து ரூ.23 ஆயிரத்து 696-க்கு விற்றது. நேற்று (31-ந் தேதி) பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 752 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,952-க்கு விற்கிறது. பங்கு சந்தை முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.80-க்கு விற்கிறது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,664-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 24-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்த 872-க்கு விற்றது.

    இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 664 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.26 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ2,958-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கிறது. #Tamilnews
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,768-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 10-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்றத்தால் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ரூ.64 குறைந்து பவுன் ரூ.24 ஆயிரமாக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரு.232 குறைந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 768 ஆக உள்ளது.

    கிராமுக்கு ரூ.29 குறைந் துள்ளது. ஒரு கிராம் ரூ.2,971-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரமாக உளளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கப்படுகிறது.
    ×