search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116934"

    கேழ்வரகு மாவில் கூழ், அடை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வேர்க்கடலை - 1/4 கப்,
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
    முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :


    முருங்கைக்கீரை, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இந்த குளிர் காலத்தில் மாலையில் காபி, டீயுடன் சூடாக வாழைப்பூ பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று எளிய முறையில் வாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவா - 2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    அரிசிமாவு - 1/4 கப்
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய்-  4
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
    பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

    அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.

    பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

    சூப்பரான ரவா பக்கோடா ரெடி.

    பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - 2 கப்
    கடலைமாவு - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி .- 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - 1 கொத்து
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.

    அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

    அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவது போல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ரைஸ் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 6,
    இஞ்சி - சிறு துண்டு,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாக கலந்த அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோதுமை கோதுமை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 30
    மிளகாய் வற்றல் - 4
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    அரிசிமாவு - கால் கப்
    கடலை மாவு - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை :


    முந்திரிபருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் கூட்டு, பொரியல், குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - அரை கப்
    மஞ்சள் தூள், மிளகு தூள் - சிறிதளவு
    சீரக தூள், தனியாத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    ரொட்டித்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள் வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெட்டிய வெண்டைக்காய், போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இந்த கலவையை அரைமணி நேரம் ஊற விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த வெண்டைக்காயை ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். இன்று மீன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ
    முட்டை - 3
    சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

    இந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான மீன் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 3 கப்
    கடலை மாவு - 1 ½ கப்
    அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
    இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
    புதினா இலை - 12
    கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
    சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.

    பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

    சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டுகள்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி துண்டு - சிறிய துண்டு
    மிளகாய் - 3
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
    மிளகாய் தூள் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×