search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புருவம்"

    பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவது புருவங்கள். புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறையில் புருவங்களை நீக்ககூடாது சிலர் பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் உண்டு.

    இந்த முறை மிகவும் ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும்.  எனவே இவ்வாறு செய்யகூடாது. புருவங்கள் நரைத் திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.

    கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.
    பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. உங்கள் முகத்திற்கு ஏற்ப எப்படி புருவத்தை சீர் செய்வது என்று பார்க்கலாம்.
    பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.

    அடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும். அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.

    சதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் முகம் வட்டமாகக் காட்சி தரும். நீளமான முகம் கொண்டவர்கள் திரெட்டிங் செய்துகொள்ளும்போது, புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு வட்டமாக, அழகாகத் தெரியும்.

    நீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து திரெட்டிங் செய்ய வேண்டும். இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள். அழகாகத்  திகழுங்கள்.
    நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். புருவம் அழகாக, நேர்த்தியாக வளர உங்களுக்கான சில இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்... வேறு சிலருக்கு திடீரென்று அவற்றில் இருக்கும் முடி உதிர ஆரம்பித்து வயிற்றில் புளியைக் கரைக்கும்.. புருவத்தை காக்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    * விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    * இதைத் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பைத் தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம் (Lauric acid) புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.

    * இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதைச் செய்துவந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ஏ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெயை (Sebum) அதிகரிக்கும்.



    * தூங்குவதற்கு முன்னர் இதைத் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ முடி வளர உதவும்.

    * கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது விரைவில் முடி வளர உதவும்.

    * ஒரு வெங்காயத்தைச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து தேய்த்துவந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் சல்ஃபர் முடி உதிர்வைத் தடுக்கும்.

    * இதைப் புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின் முடி வளர உதவும்.

    * பாலைப் பஞ்சால் தொட்டுத் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்துவர புருவ முடி சீராக வளரும்.

    * செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்துவர புருவ முடி வளரும்.
    ×