search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நொய்டா"

    நொய்டாவில் இன்று காலை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். #NoidaAccident
    புது டெல்லி:

    ஆக்ராவில் இருந்து பயணிகள் டபுள் டக்கர் பேருந்து நொய்டாவிற்கு இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றபோது, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நடந்துள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #NoidaAccident 
    அமெரிக்கர்களிடம் பேசி மோசடியில் ஈடுபட்டதாக, போலி கால்சென்டரில் பணியாற்றிய 126 பேர் கைது செய்யப்பட்டனர். #Noida #FakeCallCentre #USCitizen
    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 63-வது செக்டார் பகுதியில் இயங்கிவந்த ஒரு கால்சென்டரில் சில மோசடி செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

    அங்கு பணிபுரிந்த தொலைபேசி ஆபரேட்டர்கள் உள்பட 126 ஊழியர்களையும் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், அமெரிக்காவில் உள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். அவர்களுக்கு அங்கு 9 இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த எண்ணில் பிரச்சினை இருப்பதாக அவர்களிடம் தெரிவித்து, அதனை சரிசெய்வதாக கூறி பணம் பெற்றுவந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 126 பேரையும் கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர்.

    நொய்டாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு டஜன் போலி கால்சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏராளமான ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கர்கள், கனடா நாட்டினர் உள்பட பல வெளிநாட்டு மக்களை இதேபோல ஏமாற்றி மோசடி செய்துவந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Noida #FakeCallCentre #USCitizen 
    உ.பி. மாநிலம் நொய்டா மாவட்டத்தில் இன்று பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. #SchoolWallCollapse #NoidaSchool
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சாலாப்பூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SchoolWallCollapse #NoidaSchool
    ×