என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 117052
நீங்கள் தேடியது "நியமனம்"
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Congress
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதேபோல், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள்.
அதன்படி, திருவள்ளூர்-பி.தாமோதரன், வடசென்னை- டி.எல். சதாசிவலிங்கம், வி.எஸ்.ஜே.தினகரன், தென் சென்னை-ஆர். தாமோதரன், இல.பாஸ்கரன், தியாயராயநகர் ஸ்ரீராம், மத்திய சென்னை -ஜி.கே. தாஸ், எம்.எம்.டி.ஏ. கோபி, ஸ்ரீபெரும்புதூர்-நாசே ஆர்.ராஜேஷ், காஞ்சிபுரம்-கேசவபெருமாள் உள்பட 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Congress

இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். #KarambirSingh #IndianNavy #SunilLanba
புதுடெல்லி:
உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது.
38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம் விஷிட் சேவா உள்ளிட்ட சிறப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarambirSingh #IndianNavy #SunilLanba

இந்நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் கிழக்குப்பகுதி தளபதியாக பொறுப்புவகிக்கும் கரம்பிர் சிங் முன்னர் ஐ.எம்.எஸ்.டெல்லி, ஐ.எம்.எஸ்.ரானா கடற்படை தளங்களின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
சுனில் லான்பாவுடன் கரம்பிர் சிங் (கோப்புப் படம்)
38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம் விஷிட் சேவா உள்ளிட்ட சிறப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarambirSingh #IndianNavy #SunilLanba
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MariazeenaJohnson #SathyabamaUniversity
சென்னை:
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.
கல்வி மற்றும் சமூக சேவைகளில் முழு ஈடுபாடு கொண்டவர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் . மத்திய பெண்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஜனாதிபதி விருந்து அளித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யபாமா பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தர சான்றிதழ் அமைப்பின் (என்.ஏ.ஏ.சி.) சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஏ கிரேடு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வேந்தராக பதவி ஏற்ற டாக்டர் மரியஜீனா ஜான்சனுக்கு பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன் வாழ்த்து தெரிவித்தார். #MariazeenaJohnson #SathyabamaUniversity

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #BCCI #Ombudsman #DKJain
புதுடெல்லி:
டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இதற்கிடையில் இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என்று விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நிர்வாக கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வினோத்ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக பேசி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இதுபோல் மீண்டும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் நிர்வாக கமிட்டியின் 3-வது உறுப்பினராக ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ரவி தோட்ஜ் நியமிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவராக நீரஜ் குந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை இன்றிரவு அறிவித்துள்ளது. #NeerajKundan #NSUIPresident
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்கங்களின் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
கேரளா மாநில மாணவர் சங்கம் மற்றும் மேற்கு வங்காளம் மாநில மாணவர் சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கடந்த 9-4-1971 அன்று இந்திய தேசிய மாணவர் சங்கத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கி இருந்தார்.
இதேபோல், பா.ஜ.க.தரப்பில் ஏ.பி.வி.பி. (ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பு) இயங்கி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராக நீரஜ் குந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை இன்றிரவு அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் காந்தி பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NeerajKundan #NSUIPresident
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அக்கட்சியின் தேசிய தலைமை இன்று அறிவித்துள்ளது. #Congress #ParlimentElection
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு குழுக்களை இன்று நியமனம் செய்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சார குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்தக் குழுவில் ஜே.எம்.ஹாரூன், விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்பட 35 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்
மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செயல் தலைவராக மோகன் குமாரமங்கலத்தை நியமனம் செய்துள்ளது. #Congress #ParlimentElection
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
சென்னை:
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #DMK #SenthilBalaji
சென்னை:
கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.
அப்போது பேசிய அவர், கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்றார்.
இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் திமுக நெசவாளர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார். #DMK #SenthilBalaji
காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாய தலைவர்-உறுப்பினர் பதவிக்கு மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். #CommonwealthTribunal #JusticeAKSikri
புதுடெல்லி:
லண்டனை தலைமையிடமாக கொண்டு காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்-உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. கடந்த மாதம் அவரின் சம்மதத்தை கேட்ட பின்பு மத்திய அரசு இந்த சிபாரிசை மேற்கொண்டது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு அளித்த சம்மதத்தை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த மாதம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் நீதிபதி சிக்ரி தனது ஒப்புதலை தெரிவித்தார். ஆனால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இந்த தீர்ப்பாயத்தில் பங்கேற்கவேண்டி இருக்கும் என்பதால் தற்போது நீதிபதி தனது விருப்பத்தை திரும்ப பெறுகிறார்” என்றும் தெரிவித்தன.
நீதிபதி ஏ.கே.சிக்ரி, சுப்ரீம் கோர்ட்டின் 2-வது மூத்த நீதிபதி என்பதும், வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #CommonwealthTribunal #JusticeAKSikri

தைவானில் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நியமித்தார். #TaiwanPM
தைபே:
தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவை சந்தித்தது. தைவானை பொறுத்தமட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் போது, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நேற்று நியமித்தார்.
இதற்கு முன் சூ தசெங்-சாங் கடந்த 2006-ம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 2007-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். #TaiwanPM

பாகிஸ்தானுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #DeanElgar #SouthAfrica #Pakistan
ஜோகன்னஸ்பர்க்:
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது தென்ஆப்பிரிக்க அணி மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தார்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கடைசி டெஸ்டுக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலது கால் தொடையில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் அவதிப்படுவதால், அதை கருத்தில் கொண்டு புதுமுக பேட்ஸ்மேன் பீட்டர் மாலன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். #DeanElgar #SouthAfrica #Pakistan

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy
புதுடெல்லி:
சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy
×

X