search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூக்கு"

    சில பெண்களுக்கு மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுக்கும். இன்று எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் கிரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

    இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.

    இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.

    இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.

    உடல் அழகில் அக்கறையை காட்டும் பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.
    உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும்.

    மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம்.



    மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

    ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும்.

    முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம். 
    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிந்து கொள்வோம்.
    மூக்கு, முக அழகுக்கு மட்டுமல்ல சுவாசத்திற்கும் முக்கியமானது. உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி அனுப்புவது மூக்குதான். வாசனை அறியவும் மூக்கு பயன்படுகிறது. முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிவோம்...!

    * மூக்கு, வாசனைகளை நுகர்வதற்கான பிரத்தியேக செல்களைக் கொண்டுள்ளன. இவையே நறுமணத்தையும், நாற்றத்தையும் உணர காரணமாக உள்ளன.

    * காற்றில் ஆபத்தான ரசாயனங்கள் இருந்தால் மூக்கினால் உணர முடியும்.

    * மனிதனின் மூக்கு 2 நாசித் துவாரங்களைக் கொண்டது. இந்த துவாரங்களை பிரிக்கும் தடுப்பு, ‘நாசல் செப்டம்’ எனப்படுகிறது.

    * ‘நாசல் செப்டம்’ தடுப்பானது ஒரு குருத்தெலும்பு அமைப்பாகும். இது தசைகளைவிட வலிமையானது, ஆனால் எலும்பைவிட நெகிழ்வுத்தன்மை கொண்டது.

    * மூக்கின் உச்சியானது ‘நாசிக்குழி’ எனப்படுகிறது. இங்குள்ள எத்மாய்டு எலும்பு நாசிக்குழியையும், மூளையையும் பிரிக்கிறது.

    * இந்த எத்மாய்டு எலும்பின் மீதுதான் கண்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. எனவே இதை கண்ணின் சுழல் அச்சு என்கிறார்கள்.

    * தலையின் உட்பகுதியில் அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது நாசிக்குழி. வெளிப்புறத்தில் மூக்கு அமைந்திருக்கும் பகுதிக்கு உட்புறத்தில் கண்ணின் பின்னால் அமைந்திருக்கிறது நாசிக்குழி.

    * நாசிக்குழியில்தான் நாம் உள் இழுக்கும் காற்றானது உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. அதாவது அதிக வெப்பமான காற்று உடலுக்கு ஏற்ப குளிர்விக்கப்படுகிறது அல்லது குளிரான காற்று உடல் வெப்பத்திற்கேற்ப சூடாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    * நாசிக்குழி பகுதியில் காணப்படும் நுண் மயிரிழைகள் போன்ற அமைப்பு காற்றில் கலந்து வரும் தூசுகளையும், நுண்துகள்களையும் வடிகட்டுகிறது.

    * மூக்கின் உச்சிப்பகுதியாக கருதப்படும் நாசிக்குழியே, வாயின் உச்சிப் பகுதியாகவும் அமைந்துள்ளது.

    * வாசனையை நுகர முடியாத நிலை ‘அனோஸ்மியா’ எனப்படுகிறது.

    * லேசான வாசனையையும் உணர்ந்து கொள்ளும் அதிகப்படியான நுகர்ச்சி திறன் ‘ஹைபரரோஸ்மியா’ எனப்படுகிறது.

    * வாசனை நுகர்வதில் ஏற்படும் திடீர் மாற்றம் ‘டைசோஸ்மியா’ எனப்படுகிறது.

    * ஆண்களின் மூக்கு, பெண்களின் மூக்கைவிட பெரியது.

    * மூக்கு சம்பந்தமான அறுவைச் சிகிச்சை ‘ரினோபிளாஸ்டி’ எனப்படுகிறது.

    மூக்கு பராமரிப்பு

    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூக்கில் விரல்கள், குச்சிக ளைவிட்டு விளையாடக்கூடாது. தண்ணீர் மற்றும் மருந்து போன்ற திரவங்களை மூக்கில் ஊற்றிக் கொள்ளக்கூடாது.

    மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்தை மட்டுமே மூக்கிற்கு பயன்படுத்த வேண்டும். மூக்கில் தேவையற்ற தூசு துரும்புகள் நுழைந்தால் இயற்கையாகவே தும்மல் ஏற்பட்டு வெளியேறிவிடும். ஒருவேளை அதில் அசுத்தங்கள் மிகுந்துவிட்டால் அதை சுத்தம் செய்ய பருத்தி துணிகளையே பயன்படுத்த வேண்டும். தெரியாத மருந்துகள், பூக்களை மூக்கினால் நுகர்ந்து பார்க்கக்கூடாது.

    அசுத்தங்கள் நிறைந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால் மூக்கினை கைக்குட்டை அல்லது மருந்து துணியால் மூடிக் கொள்ள வேண்டும். நோய் ஏற்படும்போதும் இவற்றைப் பயன்படுத்தி சுகாதாரம் பேண வேண்டும். மூக்கில் ரத்தக் காயம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாட வேண்டும். 
    ×