search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டு"

    பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க.வின் பணியை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பாராட்டி பேசினார். #AmitShah #BJP
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது, கேரள வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து கருத்து தெரிவித்ததுடன் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிப் பணிகளை பாராட்டியும் பேசினார். குறிப்பாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய தமிழக பா.ஜ.க.வின் பணியை அவர் பாராட்டினார்.

    அதைத் தொடர்ந்து, செயற்குழு தீர்மானங்களை ஆதரித்து பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பேசினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், மதுரை மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘தாமரை சேவகன்’ நிகழ்ச்சியை பாராட்டி பேசிய அவர், தமிழகம் முழுவதும் இப்பணி விரைவில் தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.  #AmitShah #BJP
    கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய பயிற்சி வளாகம் திறப்பு விழா மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அகாடமியின் கவுரவ ஆலோசகர் எம்.பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் அகாடமியின் புதிய பயிற்சி வளாகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களும் வெற்றி பெறுகின்றனர்.

    கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.

    நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்கு பல திட்டங்களை அதிகாரிகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தெளிவான லட்சியம், சரியான தேர்வு, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும்.

    முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனை தரும் என்பதற்கு இலக்கணமாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். முடிவில் அகாடமி இயக்குனர் வெங்கடேஷ் நாராயணன் நன்றி கூறினார்.
    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது.

    தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடி, தேசிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நமது தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.


    உலக அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற்றிருப்பதும், சாதனை நிகழ்த்தியிருப்பதும் தமிழர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமையாக இருக்கிறது.

    மத்திய மாநில அரசுகள் பதக்கங்கள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செய்வதும், ஊக்கத் தொகை கொடுப்பதும், விருதுகள் வழங்குவதும், பாராட்டுவதும் சாலச்சிறந்தது.

    தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு உலக அளவில் மென்மேலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்து விளங்கி தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    ராஜபாளையம் அருகே உள்ள களங்கா பேரிபுதூரில் குடிநீர் குழாயில் சரி செய்ய ஏற்பாடு செய்த எம்எல்ஏவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள களங்கா பேரிபுதூரில் மாதம் நடைபெற்ற நெடுஞ்சாலை பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

    அதனை அடுத்து நேற்று சாலைமறியலில் ஈடுபட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.இது குறித்து தகவல் கிடைத்தவுடன் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் களங்கா பேரிபுதூருக்கு நேரில் சென்று அந்த ஊர் மக்களை சமாதானப்படுத்தி சாலைமறியலை கைவிடச் செய்தார்.

    மேலும் மறுநிமிடமே ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமியை போன்மூலம் தொடர்பு கொண்டு அவரையும் அங்கு வரவழைத்து மக்களுடன் மக்களாக அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். #tamilnews
    ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனை தொடர்பு கொண்டு நடிகை குஷ்பு பாராட்டினார்.
    ஈரோடு:

    ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த மாணவர் முகமது யாசினை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

    இதை பார்த்த நடிகை குஷ்பு தனது மானேஜர் மூலமாக ஈரோட்டுக்கு தொடர்பு கொண்டு மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனுக்கு படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டார்.

    அதற்கு மாணவனின் தந்தை பாட்ஷா ‘‘என் மகனை அரசு பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். அவனது படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படாது. அவனை தொடர்ந்து அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க விரும்புகிறேன். உதவி செய்வதாக கூறிய உங்களுக்கு நன்றி’’ என்று கூறினார்.



    எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காத மாணவனின் பெற்றோருக்கு குஷ்பு மீண்டும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். மேலும் மாணவன் முகமது யாசினுடனும் போனில் பேசி அவனையும் பாராட்டி வாழ்த்து கூறினார்.

    மாணவனின் தந்தை பாட்ஷா சைக்கிளில் துண்டு, லுங்கி போன்ற துணிகளை எடுத்து சென்று விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார்.
    காங்கேயம்:

    காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறுதொழுவு தேவனபாளையம் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி கூடம் முடித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி, மாணவிக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசன்(வயது 60) என்பவர் இதுகுறித்து அந்த ஆசாமியிடம் கேட்டுள்ளார்.

    மேலும், இதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த ஆசாமி பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜிஜந்தர்(25) என்பதும், இவர் பிஸ்கெட் வாங்கி கொடுத்து மாணவியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவியாக இருந்த முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார். 
    கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாராட்டியுள்ளார்.

    கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் நேற்று மாலை தடாகம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வேலாண்டிப் பாளையத்தை சேர்ந்த ஆனந்த்(35) என்பவர் பாக்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 4 இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர துணை கமி‌ஷனர்(தலைமையிடம்) தர்மராஜன் நேரடி மேற்பார்வையில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் சோமசேகர், சோமசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வேலாண்டிப்பாளையம் மருதப்பகோனார் வீதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தினர்.

    அங்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 5904 இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரமாகும். அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மிஷின், ஹார்டுடிஸ்க், கம்ப்யூட்டர் மானிட்டர், கீபோர்டு, கட்டிங் மெஷின், ஒரு செல்போன், இரு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கடையை மாதம் ரூ.2,700-க்கு வாடகைக்கு எடுத்து இங்கு கள்ளநோட்டு அச்சடித்து கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலமாகவும், தெரிந்த நபர்கள் மூலமாகவும் கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது.

    பண மதிப்பு இழப்புக்கு பின் வந்த புதிய கரன்சிநோட்டில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா பாராட்டினார். #tamilnews
    நேரு பற்றிய ஆங்கில புத்தகம் எழுதிய தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணாவுக்கு இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.#Congress #RahulGandhi
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய ‘ஜவஹர்லால் நேரு அரிய புகைப்பட வரலாறு’ என்ற ஆங்கில புத்தகம் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அதை பெற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில், புத்தகத்தை எழுதிய கோபண்ணாவுக்கு பாராட்டு தெரிவித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தங்களது புதிய வெளியீடான ‘ஜவஹர்லால் நேரு அரிய புகைப்பட வரலாறு’ என்ற புத்தகத்தை காணும் வாய்ப்பினை நான் பெற்றேன். நம்முடைய நாட்டின் முதல் பிரதமரின் வாழ்க்கை சரிதத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு ஒரு புதுமையான, வசீகரமான வழிபடங்களைப் பயன்படுத்துவதாகும். படங்களை மிக அழகாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதனை பொதுமக்கள் கண்டு அனுபவிக்கும் விதத்தில் நூலாகக் கொண்டு வந்திருப்பதற்காக நான் உங்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேரு என்கிற உன்னதமான மனிதரைப் பற்றி வெளிவந்துள்ள எழுத்துக்களின் தொகுப்பில், ஒரு மதிப்புமிக்க சேர்க்கையாக இந்த நூல் திகழும் என்பது எனக்குத் தெரியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
    தலாக் முறையை ஒழித்ததற்கு பிரதமர் மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளதாக மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Modi
    மதுரை:

    மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது. இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    பிரதமராக மோடி பதவியேற்ற போது இந்தியாவின் கடைக்கோடி சாமானிய மக்களின் வளர்ச்சி, பெண் கல்வியை மேம்படுத்துவேன் என உறுதி கூறினார்.

    4 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

    மோடி அரசின் சாதனை குறித்து பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து விளக்கி வருகிறார்கள். அதன்படி இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாட்டில் ஏழைகள் அனைவருக்கும் இலவச கியாஸ் இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டில் ஒரு கோடியே 25 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். நானும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளேன்.

    தூய்மை திட்டத்தின் கீழ் இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.


    பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பு 22 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தலாக் முறையை ஒழித்ததற்கு மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    தினமும் 30 கி.மீ. தூரம் என்ற நோக்கத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 56 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 93 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ரூ. 28 ஆயிரம் கோடி மதிப்பில் இணையம் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Modi
    ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. #RPFConstable #Train
    புதுடெல்லி:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 23ம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அந்த பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அந்த பெண்ணின் அலறல் கேட்டு அதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்  சிவாஜி அங்கு சென்றார். ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது துணிச்சல் மிக்க செயலுக்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓடும் ரெயிலில் இளம் பெண்ணை காப்பாற்றிய சிவாஜியின் துணிவை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சர் பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, ரெயில்வே ஐ ஜி பொன் மாணிக்கவேல் சிவாஜியின் துணிவை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RPFConstable #Train
    ×