search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎஸ்பி"

    சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #SenthilBalaji
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகனிடம் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய பகல் 11 மணியில் இருந்து 12 மணி வரையும், காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய 12 மணியில் இருந்து 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. கூட்டணி கட்சியினர் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தனர்.

    இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதில் சற்று காலதாமதம் ஆனது. இதற்கிடையே தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் கலெக்டர் அறைக்கு செல்லும் வழியில் இருந்த முதல் கதவை திறக்கும்படி கூறினர்.

    உள்ளே அ.தி.மு.க.வினர் இருப்பதால் அவர்கள் வெளியே வந்த பின்தான் கதவை திறப்போம் என்று அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் தி.மு.க., கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் டி.எஸ்.பி., செந்தில் பாலாஜியை கையால் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரி அன்பழகனிடம், போலீசாரின் அடக்குமுறை குறித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர், புகார் தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் வேட்புமனுதாக்கலின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாகவும், தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ், தான் தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SenthilBalaji
    தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். #SenthilBalaji
    சென்னை:

    கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கலின்போது, 100 மீட்டருக்கு வெளியே இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வாயில் முன்பாகவே 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுடன் மைக்கில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகின்றபோது வேண்டுமென்றே அ.தி.மு.க. தொண்டர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து பிரச்சினையை ஏற்படுத்தினார். இது சம்பந்தமாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவிடம் தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக நான் நேரடியாக முறையீடு செய்தேன்.

    அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் தம்பி துரையின் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு துணையாகவே செயல்பட்டார். இவர் கரூர் மாவட்டத்திலேயே உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களுடனும் தொடர்பு உள்ளது.

    இவர் கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்தால் நியாயமான தேர்தலை நடத்த இயலாது. எனவே விதி மீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவை பாராளுமன்றம் தேர்தல் முடியும் வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் நகல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. #SenthilBalaji
    ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
     
    இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி என்பவர் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரியாவார்.

    இன்னொரு தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

    தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அலுவலக நடைமுறைகளின்படி தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது. #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #CBIDSP #DevenderKumar #CBIcustody
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி என்பவர் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரியாவார்.

    இன்னொரு தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.



    இந்நிலையில், தேவேந்திர குமாரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர்.

    இதைதொடர்ந்து, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். #CBIDSP #DevenderKumar #CBIcustody
    திருப்பூரில் கோர்ட்டை அவமதித்த டி.எஸ்.பி. பரமசாமியை கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    விசாரணை அதிகாரியான அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி கோர்ட்டில் கடந்த 11-ந் தேதி ஆஜரானார். விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்.

    அவரிடம் அரசு சிறப்பு வக்கீல் தொடர்ந்து சந்தேகங்களை கேட்டபோது ஆவேசப்பட்ட டி.எஸ்.பி. சத்தமாக பேசி உள்ளார்.

    அவரது செயல் மாவட்ட நீதிபதியிடம் உரிய விளக்கம் அளிக்காமல் சாட்சி கூண்டில் நின்று கண்ணிய குறைவாகவும், கோர்ட்டை அவமதிக்கும் வகையிலும் இருந்தது.

    இதனையடுத்து அவினாசி டி.எஸ்.பி. நடந்து கொண்ட விதம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு மண்டல ஐ.ஜி. மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் கோர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு டி.எஸ்.பி.க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இதனை தொடர்ந்து திருப்பூர் கோர்ட்டில் விளக்கம் அளிப்பதற்காக டி.எஸ்.பி. பரமசாமி வந்து இருந்தார். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி அல்லியிடம் அளித்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கருதிய அவர் டி.எஸ்.பி. பரமசாமியை கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி மாலை கோர்ட்டு நேரம் முடிந்த பின் டி.எஸ்.பி. பரமசாமி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.  




    தமிழ்நாடு முழுவதும் 22 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். #TNPolice
    சென்னை:

    சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. விசுவநாத் ஜெயன் தரமணி சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தரமணி சரக உதவி கமி‌ஷனர் சுப்பராயன் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து குற்ற புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தலைமையிடத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் பரங்கிமலை சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்ட பெண்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. மகேந்திரன் மதுராந்தகம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுப்பையா சத்தியமங்கலம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கண்ணன் ராயபுரம் சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் நாங்குநேரி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். #TNPolice
    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவை நேரில் அமர வைத்து டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #GutkhaScam
    குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளையும் அடுத்தடுத்து கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

    முதல்கட்டமாக மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் வருகிற 14-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அதற்குள் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டி.எஸ். பி.க்கும், இன்ஸ்பெக்டருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இதனை ஏற்று இருவரும் இன்று காலை 10 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான பத்திரிகையாளர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ஆனால் எதிர்பார்த்தப்படி டி.எஸ்.பி. மன்னர்மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் வரவில்லை. இதன் பிறகே மாதவராவை சி.பி.ஐ. அதிகாரிகள் குடோனுக்கு அழைத்து சென்றனர்.

    மாதவராவின் சி.பி.ஐ. காவல் இன்னும் 2 நாளில் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்னர் போலீஸ் அதிகாரிகள் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

    இதற்காக பல்வேறு கேள்விகளுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை டி.எஸ்.பி. மன்னர் மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குட்கா ஊழல் குறித்து அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    டி.எஸ்.பி. மன்னர்மன்னர், இன்ஸ்பெக்டர் சம்பத் இருவரும் விசாரணைக்கு ஆஜராகும் போது கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    குட்கா ஊழல் பற்றி இருவரிடமும் விசாரணை நடத்தும்போது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. #GutkhaScam

    பெண்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நவேதிதா என்பவர் தனது நண்பர்கள் ஹரினி, சுமதி, ஷீலா உள்ளிட்டோர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

    அவர்கள் அங்குள்ள ரீசார்ட்டில் இரண்டு அறைகள் எடுத்து தங்கி இருந்தனர். அப்போது டி.எஸ்.பி. மோகன்குமார், கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அறைகளில் இருந்த நிவேதிதா உள்பட பெண்களை ஓட்டலில் நடனம் ஆட வந்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதுகுறித்து நிவேதிதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில், நான், எனது தோழிகளுடன் கொடைகானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி. மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் எங்களை ஆபாச நடனம் ஆடவந்ததாக கூறி வெளியே இழுத்து வந்து தாக்கினர். நாங்கள் சுற்றுலாவுக்கு வந்து இருக்கிறோம் என்று கூறியும் கேட்கவில்லை. எங்களை டி.எஸ்.பி. அலுவலகம் வெளியே இரவு முழுவதும் அமர வைத்தனர்.

    விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.

    ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
    ×