search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ப்பூர்"

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.#Customsseized #foreigncurrency
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பணத்தை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில் ஒருவரிடமிருந்து இன்று ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Customsseized #foreigncurrency
    ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா தனது தாயுடன் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். #RobertVadra
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிறுவனம் கடந்த 2015ல் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியுள்ளது. அதன்பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
    இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வதேரா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் வதேராவும், அவரது தாய் மவ்ரீனும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. 



    இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை முன் வதேரா ஆஜராவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra
    ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. #IPLAuction #Jaipur #IPL2019
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும். வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #IPLAuction #Jaipur #IPL2019
    ராஜஸ்தானில் உள்ள பழைய பேப்பர் கடையில் வந்த செய்தித் தாள்களுடன் 2 ஆயிரம் ஆதார் அட்டைகள் கிடைத்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #Jaipur #ScrapDealer #Aadhaar cards
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜலோபுரா பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் இம்ரான். 

    இந்நிலையில், இன்று காலை அவரது கடைகு பழைய பேப்பர்களை சிலர் போட்டுச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுக்கி வைக்க எடுத்தார்.

    அந்த பழைய பேப்பர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் இருப்பதை கண்டு இம்ரான் அதிர்ந்தார்.  
    உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆதார் அட்டைகளை கைப்பற்றினர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு விநியோகம் செய்யவே ஆதார் அட்டைகள் வந்திருக்கும். இவை தபால் அலுவலகத்தில் இருந்து மாயமானவை போல் தெரிகிறது. எனினும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

    பழைய பேப்பர்களுடன் ஆதார் அட்டைகள் கிடந்தது அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. #Jaipur #ScrapDealer #Aadhaar cards
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார். RamNathKovind #prayatbrahmatemple
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் வந்தடைந்தார். இதையடுத்து, இன்று ஹெலிகாப்டர் மூலம், அஜ்மீர் நகரில் உள்ள புஷ்கர் பகுதிக்கு சென்ற குடியரசுத்தலைவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற பிரம்மா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து, இன்று அஜ்மீர் நகரில் உள்ள தர்காவுக்கும் அவர் சென்று வழிபாடு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathKovind #prayatbrahmatemple
    ×