search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமீன்"

    தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசிய வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட்டு கோர்ட் ஜாமீன் வழங்கியது. #ThirumuruganGandhi
    தூத்துக்குடி:

    மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் மீது சென்னையில் தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்று திருமுருகன்காந்தி சென்னை புழல் சிறையில் இருந்து பாளை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் திருமுருகன் காந்தி வந்த வேன் பாளை சிறையை வந்தடைந்தது.

    பின்பு பாளை சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.

    தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசியபோது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த‌து. இந்த வழக்கில் திருமுருகன் காந்தி நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவருக்கு நீதிபதி தமிழ் செல்வி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே மற்ற வழக்குகளில் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டார். திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி தூத்துக்குடி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டிருந்தது. #Sterlite #ThirumuruganGandhi
    அமெரிக்காவில் குறிப்பிட்ட வழக்கில் 5 பேருக்கு சர்ச்சைக்குரிய வகையில் ஜாமீன் வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WomenJudge #Threats #Bail
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நியூமிக்சிகோ மாகாணத்தில் டாவோஸ் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்துக்கொண்டு, பட்டினி போடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 11 குழந்தைகள் இப்படி பட்டினி போடப்பட்டிருந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பின்னர் அங்கு ஒரு குழந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 5 பேர் மீது சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பயிற்சி அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள், 3 பெண்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் சர்ச்சைக்கு உரிய அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கேட்டு டாவோஸ் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் சிறுவர்களை தவறாக பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரத்தை போலீசார் தாக்கல் செய்வதற்கு தவறி விட்டதாக கருதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சாரா பாக்கஸ் என்ற பெண் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

    இதையடுத்து அந்த பெண் நீதிபதியை ஒருவர் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து, “உங்களை கழுத்தை அறுத்து கொலை செய்வோம்” என மிரட்டல் விடுத்து உள்ளார். இன்னொருவர், “ உங்கள் தலையை நசுக்கி விடுவோம்” என மிரட்டி இருக்கிறார். அவருக்கு இப்படி எண்ணற்ற மிரட்டல்கள் தொலைபேசி, இ மெயில் வழியாக வந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கோர்ட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   #WomenJudge #Threats #Bail 
    கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது.
    கோவை:

    மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, மாவோயிஸ்டுகள் அனூப், வீரமணி, கண்ணன் ஆகிய 5 பேர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை கருமத்தம்பட்டி அருகே கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது கேரளாவில் வழக்குகள் இருந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி சிம்கார்டுகள் பெற்று மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளுக்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் ஷைனாவை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை அவரது தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.

    ஷைனா கைது செய்யப்பட்ட போது அவர் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் கேரளாவில் 1 வழக்கு என இரண்டு வழக்குகள் மட்டுமே இருந்தது. அதன்பின்னர் வரிசையாக வழக்குகள் பதியப்பட்டன.

    தற்போது ஷைனா மீது தமிழகத்தில் 11 வழக்குகள், கேரளாவில் 6 வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது. இவை அனைத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. எனினும் கேரளாவில் ஜாமீன் கிடைத்ததற்கான நகல் கோவைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எனவே ஷைனாவை கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றினர். எனவே ஷைனா இன்னும் ஓரிரு நாளில் ஜாமீனில் வெளியே வருவார் என தெரிகிறது.
    வங்காளதேசத்தில் பஸ் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐகோர்ட் அளித்த ஜாமினை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதிப்படுத்தியது. #KhaledaZia #Bangladesh #KhaledaZiabail
    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான தேசியவாத கட்சி மற்றும் தேசியவாத ஜமாத் கூட்டணி அழைப்பு விடுத்தது.

    நாடு தழுவிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின் போது 3-2-2015 அன்று கொமில்லா மாவட்டம், சிட்டாகாங் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் வன்முறையை தூண்டியதாகவும், கொலை மற்றும் வெடிப்பொருட்கள் தடை சட்டத்தின்கீழ்  முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்டோர் மீது இரு வழக்குகள் செய்யப்பட்டன.

    கொமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை பின்னர் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் பயங்கரவாத வழக்காக மாற்றப்பட்டது. 

    இதற்கிடையில், தனது கணவரின் பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயரால் வெளிநாடுகளில் இருந்து சுமார் இரண்டரை லட்சம் டாலர்கள் நிதி பெற்றதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    அவர் தற்போது டாக்கா நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான சிறையில் கைதியாக அடைத்து  வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பஸ் தாக்குதல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமின் கோரி சமீபத்தில் டாக்கா ஐகோர்ட்டில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டனர். 

    இந்த உத்தரவை எதிர்த்தும் அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தியும் கடந்த 7-ம் தேதி அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சையத் மஹ்முத் ஹொசைன் தலைமையிலான 4 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், டாக்கா ஐகோர்ட் முன்னர் அளித்த ஜாமினை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாத அளவில் கலிதா ஜியா(72) மீது மேலும் சில வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #Bangladesh #KhaledaZiabail
    ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
    மும்பை :

    பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேரும் ஜெயிலில் தான் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கைதி மஞ்சுளா கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு காரணமாகவும் ஜெயிலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
    கல்பாக்கம் அருகே கணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரமதி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சந்திரமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் செல்வம், மனைவி சந்திரமதியை கண்டித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி கூவத்தூர் அருகே செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சந்திரமதியும், கள்ளக்காதலன் ஆனந்தும் சேர்ந்து செல்வத்தை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இந்த வழக்கில் சந்திரமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 மாதத்துக்கு முன்பு சந்திரமதி ஜாமீனில் வெளியே வந்தார்.

    குழந்தைகளை பார்க்க அடிக்கடி கணவர் வீட்டுக்கு வந்தார். இதற்கு அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலை சந்திரமதி மீண்டும் குழந்தைகளை பார்க்க ஆயப்பாக்கத்துக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து நகை மற்றும் உடமைகளை கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் சந்திரமதிக்கும், உறவினர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் உருட்டுக்கட்டையால் சந்திரமதியை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    போலீசார் விரைந்துவந்து உயிருக்கு போராடிய சந்திரமதியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இறந்தார்.

    கொலை தொடர்பாக சந்திரமதியின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலையுண்ட சந்திரமதி கணவரை வெறுத்தாலும் குழந்தைகள் மீது பாசத்தில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த பின் ஆதனூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கணவர் வீட்டாரிடம் அடிக்கடி கேட்டு இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சமாதானம் பேசி அவரை அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் சந்திரமதி குழந்தைகளை பார்க்க சென்ற போது கணவரின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தங்கச் சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
    சென்னை:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு  தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை (52) கைது செய்தனர்.

    இதையடுத்து ஜாமீன் கேட்டு கவிதா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி கவிதாவுக்கு எதிரான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையடுத்து இன்று உத்தரவு பிறப்பித்த  உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
    தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு ஏதுவாக கைதி ஒருவரின் ஜாமீன் வழக்கை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கியுள்ளார். #HighCourtJudge #bail
    சென்னை:

    சென்னை ராயுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கடந்த 23-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக டேவிட்சனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டேவிட்சனின் உறவினர்கள் வக்கீல் ஏ.கே.கோபாலை அணுகினர்.

    ஐகோர்ட்டு விடுமுறை நாட்களில் அவசர மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வக்கீல், பதிவாளரை அணுகி அவசர நிலையை எடுத்துக்கூற வேண்டும். வக்கீலின் கோரிக்கை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டியதுதானா? என்பதை பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறுவார். அதன்பின்பு, தலைமை நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று ஏதாவது ஒரு நீதிபதி மூலம் விசாரணை நடத்த பதிவாளர் ஏற்பாடு செய்வார்.

    இளம் வக்கீலான ஏ.கே.கோபாலுக்கு இந்த விவரம் தெரியாததால் ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி ஜெகதீஷ்சந்திராவின் வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி வீட்டில் இல்லை என்றும், குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் வக்கீல், நீதிபதியின் வீட்டு முன்பு காத்திருந்தார். இதற்கிடையே இரவு 10 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு, இளம் வக்கீல் ஒருவர் நிற்பதை பார்த்து விவரம் கேட்டார். அப்போது வக்கீல் கோபால், தனது கட்சிக்காரரான டேவிட்சன் என்பவரது தந்தை இறந்து போனதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, பதிவாளர் மூலம் தான் இந்த மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த விவரம் தனக்கு தெரியாது என்று நீதிபதியிடம், வக்கீல் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ்சந்திரா மனிதாபிமான அடிப்படையில் தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அரசு வக்கீலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் அறிவுறுத்தலின் பேரில் அரசு வக்கீல் முகமது ரியாஸ், டேவிட்சன் மீதான வழக்கு விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு நீதிபதி வீட்டுக்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு நீதிபதி அந்த மனுவை விசாரித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விசாரணை முடிந்தது. இறுதியில், டேவிட்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவு நகல் தட்டச்சு செய்து வழங்கப்படும். நள்ளிரவு நேரம் என்பதால் ஜாமீன் உத்தரவு நகலை தட்டச்சு செய்வதற்கு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் நீதிபதி தனது கைப்படவே ஜாமீன் உத்தரவை எழுதி அதை ஐகோர்ட்டு பணியாளர் மூலம் புழல் சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க வாலிபர் ஜாமினுக்கு மனு தாக்கல் செய்த நிலையில், நள்ளிரவில் தட்டச்சு செய்ய ஆளில்லாததால் நீதிபதி கைப்பட தீர்ப்பு எழுதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    ராயபுரத்தை சேர்ந்தவர் டேவிட்சன். அதேபகுதியை சேர்ந்த பெண்ணை வாய் தகராறில் தாக்கிய வழக்கில் இவர் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று மரணம் அடைந்தார்.

    இவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக டேவிட்சன் தனது வக்கீல் ஏ.கே. கோபால் மூலமாக மனு தாக்கல் செய்தார்.

    ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா வீட்டில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கோபால் மனு அளித்தார். இதனையடுத்த நீதிபதி ஜெகதீஷ்சந்த்ரா, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் அனுமதி பெற்று ஜாமீன் மனுவை விசாரித்தார்.

    இதுபற்றி தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராவதற்காக வக்கீல் முகமது ரியாஸ் நியமிக்கப்பட்டார்.

    இதனையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா, தனது வீட்டிலேயே ஜாமீன் மனுவை விசாரித்தார். ராயபுரம் போலீசாருக்கும் அரசு வக்கீலும் வீட்டுக்கே சென்றனர்.

    வாலிபர் டேவிட்சன், தந்தை விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு வசதியாக அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    ஜாமீன் உத்தரவு கோர்ட்டில் தட்டச்சு செய்து வழங்கப்படுவது வழக்கம். நள்ளிரவில் தட்டச்சு செய்ய யாரும் இல்லாததால் நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா தனது கைப்பட ஜாமீன் உத்தரவை எழுதினார். இன்று முறைப்படி தட்டச்சு செய்து கொடுக்கப்படுகிறது. புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுதலை செய்யப்படுகிறார். #tamilnews

    கோவை அருகே சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் பீர் முகமது என்ற பச்சை மிளகாய் பீர்(வயது 35).

    இவர் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, கோவை குனியமுத்தூரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன், முடிந்தால் கண்டுபிடியுங்கள் என மிரட்டினார்.

    மிரட்டல் வந்த எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி பீர் முகமதுவை கைது செய்தனர். அவர் குடிபோதையில் செல்போனில் பேசி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் பீர்முகமது நேற்று மாலை மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகாத வார்த்தைகள் பேசியதோடு, குனியமுத்தூரில் பல இடங்களில் குண்டு வைத்துள்ளேன் என மிரட்டி உள்ளார்.

    செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி பீர்முகமதுவை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி-தகாத வார்த்தைகளால் திட்டுதல், 506(1)- கொலை மிரட்டல் விடுத்தல், 507- மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் ஏற்கனவே கடந்த 1 வருடத்துக்கு முன்பும் இதே போல போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews
    சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பெண்கள் தனியாக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களுக்கு எளிதில் ஜாமின் கிடைப்பதால் தொடர்ந்து கைவரிசை காட்டுகின்றனர். #ChennaiChainSnatching
    சென்னை:

    பரந்து விரிந்த தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விட்டபடியே செயின்பறிப்பு கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

    இதற்கு முன்னர் செயின் பறிப்பு, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யார்-யார்? என்பதை போலீசார் எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிது புதிதாக புற்றீசல்களை போல வழிப்பறி கொள்ளையர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

    குறிப்பாக கல்லூரி- பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே தங்களது கை செலவுக்காக செயின்பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் வலம் வரும் கொள்ளையர்கள் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். நடந்து செல்லும் பெண்களிடமும், மோட்டார் சைக்கிள்களில் சிட்டாய் பறக்கும் பெண்களிடமும் இளைஞர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பரபரப்பான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருக்கும்போதே செயின் பறிப்பு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கிறதே? அது எப்படி என்று போலீசாரிடம் கேட்டால், எல்லாம் ‘‘போதை செய்யும் வேலை’’ என்கிறார்கள்.

    மதுபோதையிலோ, அல்லது கஞ்சா போதையிலோ சுற்றிவரும் இளைஞர்கள் தான் துணிச்சலாக செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும், போதை அவர்களது பயத்தை போக்கி விடுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையர்களை விரட்டிச் சென்ற பெண் ஒருவர் பட்டினப்பாக்கம் கடற்கரையில் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபகாலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், செயின் பறிப்பில் ஈடுபடும் போதை வாலிபர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. செயினை கையில் பிடித்துக் கொண்டு போராடிய பெண்களை தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகளும் பதைபதைப்பை ஏற்படுத்தின.



    இதன் பின்னரே, கொள்ளையர்கள் மீதான பிடி இறுகத் தொடங்கியது. உயிருக்கு உலை வைக்கும் விதத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் போது, இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்றே எண்ண தோன்றுகிறது.

    செயின் பறிப்பு இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு சென்னையில் தினமும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 10 பெண்களாவது தங்களது செயினை பறி கொடுக்கிறார்கள்.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையிலும், 4 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளாக போலீசார் பணிபுரிந்தும் பெரிய அளவில் அதற்கு பலன் கிடைக்கவில்லை. செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.



    கோயம்பேடு மேம்பாலத்தில் நடந்த செயின் பறிப்பில் பாலம்மாள் (70) என்ற பெண் படுகாயம் அடைந்தார். தனது மருமகள் இந்திராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் செயினை கொள்ளையர்கள் பறித்தனர். அப்போதுதான் பாலம்மாள் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

    இந்த சம்பவத்தின் போது இந்திராவின் மகன் நித்தியும் முன்னால் அமர்ந்திருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் கீழே விழவில்லை.

    இப்படி நீண்டு கொண்டே செல்லும் செயின் பறிப்பு சம்பவத்தை கட்டுப்படுத்த, போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ‘‘3-வது கண்’’ என்று பெயரிட்டு, கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் போலீசார் அதன் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். இதனால் குற்றங்கள் குறையும் என்று போலீசார் நம்புகிறார்கள்.

    செயின் பறிப்பில் ஈடுபடும் வாலிபர்கள் கைதாகி சிறை சென்றாலும் உடனடியாக ஜாமினில் வந்து விடுகிறார்கள். வழக்கு செலவுக்காக மீண்டும் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதுவும் செயின் பறிப்பு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ‘‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. #ChennaiChainSnatching
    பல்வேறு குற்றவழக்குகளில் சரணடைந்த ரவுடி பினு, ஜாமீனில் வெளிவந்த பின்னர் தலைமறைவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

    இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஜாமீனில் வெளியான நாள்முதல் ரவுடி பினு கையெழுத்திட வரவில்லை எனவும், பினு தலைமறைவாகி விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    ×