search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரி"

    எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கத்தில் ஆரி - ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் அலேகா படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. #Aleka #Aari #AishwaryaDutta
    தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

    இதில் அலேகா படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ஆரி நடிக்கிறார். போர்வைக்குள் காதலர்களின் கால்கள் மட்டும் தெரியும்படி உள்ள படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது காம படம் இல்லை, காதல் படமாக உருவாகிறது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.



    இந்த நிலையில், படப்பிடிப்பில் தற்போது இயக்குனருக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வந்தார். அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் காத்திருக்க வேண்டி இருந்தது. சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரும்படி ஐஸ்வர்யா தத்தாவிடம் வற்புறுத்தியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் இயக்குனர் பொறுமை இழந்து அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது” என்று கூறினர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Aleka #Aari #AishwaryaDutta

    கவிராஜ் இயக்கத்தில் ஆரி - சாஷ்வி பாலா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala
    புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம்  ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

    இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரி ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 



    இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு பணிகளையும், கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 

    இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala

    அலேகா படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஆரி, தன்னுடைய பிறந்த நாளை வித்தியாசமாக புதுமையான முறையில் கொண்டாடி இருக்கிறார். #Aari
    சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். 

    ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி  படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.



    இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை - சத்யா, ஒளிப்பதிவு - தில் ராஜ், படத்தொகுப்பு - கார்த்திக் ராம், பாடல்கள் - யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
    காதலை மையப்படுத்தி ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்போது பெயர் வைத்திருக்கிறார்கள். #Aari #AishwaryaDutta #HappyPongal2019
    ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கி வருகிறார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    பெயரிடப்படாமல் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது, ‘அலேகா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். #Aari #AishwaryaDutta
    புதிய படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்து வரும் ஆரி, படப்பிடிப்பில் கிறிஸ்துமஸ் விழாவை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார். #Aari
    உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஆரி கிறிஸ்துமஸ் விழாவை ஆசிரமக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

    ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரம குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சான்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி உள்ளனர்.
    எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ஆரி ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தமாகியுள்ளார். #Aari #AishwaryaDutta
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஐஸ்வர்யா தத்தா, ஆரி ஜோடியாக காதல் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

    60-களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது, 80-களில் ஜாதி தடையாக இருந்தது, 2000-த்தில் அந்தஸ்து தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக அனைத்து தரப்பினரையும் கவரும் கதைக்களத்துடன் இந்த படத்தை உருவாக்குவதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக அய்யனார் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி படம் உருவாகிறது.

    ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். #Aari #AishwaryaDutta

    அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று தோணி கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆரி தெரிவித்தார். #DhoniKabadiKulu #Aari
    கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது:-

    நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கு எங்கு இருந்தோ நிவாரண உதவிகள் குவிகின்றன.

    ஆனால் சென்னையைத் தாண்டி மற்ற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.



    அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது.

    சினிமாவை வாழவைக்க வேண்டும். திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DhoniKabadiKulu #Aari

    தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரும் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடுவதில்லை, இது அதிர்ச்சியான உண்மை என்று நடிகர் ஆரி கூறினார். #Aari #MaaruvomMaatruvom
    நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் ஆரி. இவர் தனது 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை மூலம் இயற்கை விவசாயம், தமிழ் வளர்ச்சி என பல்வேறு சமூக நலன் சார்ந்த வி‌ஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    சினிமா ஆசையில் சென்னை வந்த எனக்கு, எல்லோருக்கும் போல ஆரம்பத்தில் ஏமாற்றம் தான் கிடைத்தது. நம்முடைய கனவுகளுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது சாப்பாடு, தங்குமிடம் இரண்டும் தான். எனவே, பாடி ஸ்கல்ப்டிங் பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கிடைத்த படம் தான் ஆட்டோகிராப். படங்களில் பணியாற்றும்போது தான் நடிப்பு என்பது கஷ்டமான வி‌ஷயம் என்பது புரிந்தது. நடிப்பை கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அது முடிந்ததும், நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆறேழு வருடங்கள் இப்படியே சென்றதும், இனிமேல் சினிமாவில் நடிக்கலாம் என்று தைரியம் வந்தது. வாய்ப்பு தேடத் தொடங்கினேன். என்னுடைய முதல் படம் ஆடும் கூத்து. தேசிய விருது வாங்கிய அந்தப் படத்தில் சேரன், நான் இருவரும் கதாநாயகர்கள். எனக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் திரைக்கு வரவே இல்லை. பிறகு, ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஆகிய படங்களில் நடித்தேன். பின்னர் நெடுஞ்சாலை, மாயா படங்கள் அடையாளங்களாக அமைந்தன.



    தாய்மொழி கையெழுத்தை கையில் எடுத்தது ஏன்?

    என் தாய் மொழியில் கையெழுத்து போடுவதில் பெருமைப்படுகிறேன். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரும் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடுவதில்லை. இது அதிர்ச்சியான உண்மை. நானும் இந்த விழாவுக்காக பலரை நான் அழைத்த போது இந்த உண்மை தெரிய வந்தது. தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு விழாவுக்கு வருவதாக அவர்கள் கூறினர். தமிழில் கையெழுத்து உலக மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் பெட்னா விழாவில் நடைபெற்றது. அதனை ஒருங்கிணைத்தேன்.

    நடிப்பை விட்டு விட்டு உனக்கேன் இந்த வேண்டாத வேலை என சிலர் எனக்கு அறிவுரை கூறினர். இருப்பினும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதில் ஈடுபட்டுள்ளேன். அடுத்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வரை இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்.

    நடிப்பு என் தொழில். அது ஒரு பக்கம் போயிட்டு தான் இருக்கு. எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்னு ஒரு படம் பண்றேன். வி.இசட்.துரை இயக்கத்தில் ஒரு படம் என மொத்தம் நான்கு படங்கள் பண்ணிட்டு தான் இருக்கேன். அதுலயும் நிச்சயம் சாதிப்பேன். #Aari #MaaruvomMaatruvom

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததற்கு நடிகர் ஆரி நன்றி தெரிவித்திருக்கிறார். #Aari #TNGovt
    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார். குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருக்கிறார். மற்றும் பல கல்லூரிகளில் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்.

    எனவே தனது ஆசையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி.
    ×