search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்மோகன்சிங்"

    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் என 40 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
    மன்மோகன்சிங் ‘ஆக்சிடென்டலாக’ வந்தவர் அல்ல என்றும், ‘வெற்றிகரமான பிரதமர்’ என்றும் சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.#ShivSena #ManmohanSingh
    மும்பை:

    தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் ‘தி ஆக்சிடென்டல் பிரதம மந்திரி’ என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் பா.ஜனதா ஆதரவாளரான அனுபம்கெர் மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

    ‘‘ஆக்சிடென்டல் பிரதமர்’ படத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆனாலும் வருகிற 11-ந் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

    இதுகுறித்து அந்த கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். எனவே அவர் தற்செயலாக திடீரென பொறுப்புக்கு வந்த பிரதமர் அல்ல என்று நான் கருதுகிறேன்.

    நரசிம்மராவுக்கு பின்னர் நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்று இருக்கிறது என்றால் அவர் மன்மோகன்சிங் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நரசிம்மராவுக்கு பின்னர் மன்மோகன்சிங் தான் வெற்றிகரமான பிரதமர் என்று தெரிவித்ததன் மூலம் மோடியை சிவசேனா சீண்டி பார்த்துள்ளது. #ShivSena #ManmohanSingh

    ராகுல்காந்திக்கு அனுபவம் போதாது தேர்தலில் மோடியை எதிர்கொள்ள மன்மோகன்சிங் தான் பொருத்தமானவர் என்று பிரகாஷ் அம்பேத்கார் கூறியுள்ளார். #Parliamentelection #PMModi #ManmohanSingh

    மும்பை:

    அம்பேத்காரின் பேரனும், தலித் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கார் மராட்டிய மாநிலம் பந்தர்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மோடியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சரியான தலைவர் வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது மோடியை எதிர்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தான் பொருத்தமான தலைவராக இருக்கிறார்.

    மன்மோகன்சிங் ஏற்கனவே பிரதமராக இருந்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியவர். மோடியின் பொய் பிரசாரத்தை மன்மோகன்சிங் தான் எதிர்கொண்டு அவரை வீழ்த்த முடியும்.


    அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு இன்னும் அரசியல் அனுபவம் போதாது. அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது.

    பாரதிய ஜனதாவை பொருத்த வரை ஆட்சியை கைப்பற்ற எந்த நிலைபாடு வேண்டுமானாலும் எடுக்கலாம். இதற்கு மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் நீடித்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

    அரசியலமைப்பு சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க பாரதிய ஜனதா முயல்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

    தலித் மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பல கட்சிகளும் தடுத்து வருகின்றன. இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #PMModi #ManmohanSingh

    ×