search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118052"

    • மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
    • இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி- – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். சில மாதமாக மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

    இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளில் ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, மேம்படு த்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஐ.ஆர்.20, ஏ.டி.டி.38, கோ– 51, பி.பி.டி.5204, ஆர்.என்.ஆர்.15048 ஆகிய நெல் ரகங்களில் விதை பண்ணைகள் அமைத்துள்ள னர்.

    விதை பண்ணையில் அதிக நீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வும், அதிக தழைச்சத்து அளிக்கக்கூடி உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தால் மஞ்சள் கரிப்பூட்டை நோய் பரவ சாதகமாக உள்ளது. இந்நோயால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து நெற்பழம் உருண்டைகளாக மாறிவிடும். இதனால் விதை உற்பத்தி பாதிக்கும். தானிய விற்பனையின்போது விலை இழப்பு ஏற்படும்.

    எனவே இந்நோயை கட்டுப்படுத்த நெல் பஞ்சுபுடை பருவத்தில் காப்பர் ைஹட்ராக்ைஸடு மருந்து ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் தெளிப்பதுடன் மகரந்த சேர்க்கை முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தெளித்து தரமான விதை உற்பத்தி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, உதவி விதைச்சான்று அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.
    • தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.

    பிஜீங்:

    சீனாவில் சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே அதிக வெப்பம் பதிவாகி வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில் வெப்ப அளவு உள்ளது.

    ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை வரை கடுமையான வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதே போல் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை மிக அதிக வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. சுமார் 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகானங்களான ஜெஜி யாங், புஜியனில் 105.8 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

    கடும் வெயிலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் ஜன்னல்களை மூடிவைக்கு மாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் பல நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.

    1873-ம் ஆண்டில் இருந்து சீனாவில் கடந்த மாதம் தொடக்கத்தில் 105.62 டிகிரி வெயில் அடித்தது. தற்போது உச்சப்பட்ச அளவான 105.8 டிகிரி பதிவாகி இருக்கிறது. இது சீனா வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெயில் அளவாகும்.

    கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    • ராமநாதபுரம் நகா் பகுதியில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.
    • கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் சாரல் மழை அவ்வப்போது மழை பெய்து வந்து, வெப்பம் தணிந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் நகா் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.

    இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதே போல் பனைக்குளம், வழுதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் நீண்டநேரம் மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டும் இயல்பை காட்டிலும் குறைவான மழையே பதிவானது. இதனால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் தொடக்கம் முதலே மழை இல்லை. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற்பகலுக்கு மேல் அனல் காற்று வீசுவதை உணர முடிகிறது. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் குடை பிடித்து செல்வதை பார்க்க முடிகிறது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது.

    குறிப்பாக தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை என அனைத்து சாலைகளிலும் தர்பூசணி பழங்கள் சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவதை காண முடிகிறது.

    திண்டிவனம் பகுதியில் இருந்து வாங்கி வரப்படும் இந்த தர்பூசணி பழங்கள் அவற்றின் எடை மற்றும் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த பழங்கள் தாகத்தை தணிப்பதாக உள்ளதால், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
    ×