search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியின் கூட்டாளி தீபக் குல்கரினியை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். #MehulChoksi #DeepakKulkarni #ED
    கொல்கத்தா:

    பஞ்சாப் நேசனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்மோசடி விவகாரம் தொடர்பாக வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல்சோக்சி உள்ளிட்டோரை, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

    அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய, மெகுல்சோக்சியின் கூட்டாளியான தீபக் குல்கர்னியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.



    பஞ்சாப் நேசனல் வங்கி கடன்மோசடி வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த இவர், ஹாங்காங்கில் உள்ள மெகுல்சோக்சியின் போலி நிறுவனத்தின் இயக்குநராக செயல்படுகிறார்.

    முன்னதாக இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தீபக் குல்கர்னியிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #MehulChoksi #DeepakKulkarni #ED
    கொல்கத்தாவில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய புரளியால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Kolkata #Bomb
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் சீல்டா என்கிற பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சீல்டா மற்றும் பூங்கா சர்க்கஸ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதை ரெயில்வே ஊழியர் கண்டார்.

    உடனே இது குறித்து அவர் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் தண்டவாளத்தில் கிடப்பது வெடிகுண்டு என வேகமாக தகவல்கள் பரவின. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை ஆய்வு செய்தபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும், யாரோ வேண்டுமென்றே புரளி கிளப்பியதும் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை அப்புறப்படுத்தியதும், ரெயில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் கோமல் தடால் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    முதல் பாதியின் முடிவில் பெங்களூரு அணியின் மிக்கு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எரிக் பர்தாலு 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற பெங்களூரு அணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் ஆட்டம் முடியும்வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணி பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #BengaluruFC #ATK
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. #ISL2018 #Jamshedpur #ATK
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

    ஜாம்ஷெட்பூர் அணியில் செர்ஜியோ சிடோன்சாவும் (35-வது நிமிடம்), கொல்கத்தா அணியில் மானுல் லான்ஜரோட்டும் (45-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த சீசனில் ‘டிரா’வில் முடிந்த 6-வது ஆட்டம் இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி, பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ISL2018 #DelhiDynamos #AtleticoDeKolkata
    புதுடெல்லி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய கால்பந்து அணி சீனாவுடன் சர்வதேச நட்புறவு போட்டியில் ஆடியதால் அதற்கு ஏற்றவாறு ஐ.எஸ்.எல். தொடரில் 10 நாட்கள் இடைவெளி விடப்பட்டு இருந்தது.



    இந்த நிலையில் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் போட்டி தொடங்குகிறது. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (கேரளா, கவுகாத்திக்கு எதிராக) தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் புனே சிட்டி அணியுடன் டிரா கண்டது. இரு அணிகளும் இந்த சீசனில் தங்களது முதலாவது வெற்றிக்கு வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 1 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப்.சி அணி வெற்றி பெற்றது. #ISL2018 #NorthEastFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் எப்.சி அணிகள் நேற்று மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்பாக ஆடின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியை சேர்ந்த ரவ்லின் போர்க்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

    இறுதியில், கொல்கத்தா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப் சி அணி வெற்றி பெற்றது. #ISL2018 #NorthEastFC #ATK
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரள அணி கொல்கத்தாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கியஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

    நாளை பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. #ISL2018 #ATKvKBFC
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரளாவும், கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் தற்போது ஆட்டம் துவங்கி இருக்கும் நிலையில், இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். #ISL2018 #ATKvKBFC
    10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., எப்.சி.கோவா, மும்பை சிட்டி எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் 18 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கவுகாத்தி, டெல்லி, கொச்சி, சென்னை, ஜாம்ஷெட்பூர், புனே, கோவா ஆகிய 10 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. லீக் சுற்றில் மொத்தம் 90 ஆட்டங்கள் இடம்பெறுகிறது. இதுவரை 59 லீக் ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும். மார்ச் மாதத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொடரில் அக்டோபர் 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும், நவம்பர் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், டிசம்பர் 17-ந் தேதி முதலும் இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தயாராவதற்கு வழிவிடும் நோக்கில் இந்த இடைவெளி விடப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் மானுல் லான்ஜரோட் தலைமையிலான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சந்தேஷ் ஜின்கான் தலைமையிலான கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது.

    கொல்கத்தா 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. அந்த 2 முறையும் இறுதிப்போட்டியில் அந்த அணி கேரளாவை வீழ்த்தி தான் பட்டத்தை தனதாக்கியது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி 5 முறையும், கேரளா அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 4 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. கடந்த சீசனில் மோசமாக விளையாடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட கொல்கத்தா அணி இந்த தடவை பல புதிய வீரர்களுடன் எழுச்சி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகியுள்ளது.

    போட்டி குறித்து கொல்கத்தா அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கோப்பெல் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போதுமான அளவில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் தங்களது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். எங்கள் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் கேரளா-கொல்கத்தா அணிகள் இடையிலான மோதல் பெரியதாகும். இரு அணிகளும் 2 முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரு ஆட்டத்திலும் போட்டி மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தினாலும், இந்த ஆட்டம் ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்க்கும் என்று கருதுகிறேன். கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த அணியை வீழ்த்துவது மட்டுமே இந்த சீசனில் முன்னேற போதுமானது கிடையாது’ என்றார்.

    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனக்குரிய பங்குகளை விற்று விட்டதால் இந்த முறை அணியுடன் அவரது பயணம் இருக்காது. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் காணும் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. மலேசியா மற்றும் கோவாவில் பயிற்சி முடித்து திரும்பி இருக்கும் சென்னை அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

    சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணி ரூ.4 கோடியும், அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகள் தலா ரூ.1½ கோடியும் பரிசாக பெறும்.  #ISL2018 #ATKvKBFC

    கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற பக்ரி மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். #KolkataFireAccident #bagriMarketFire
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா. இங்கு உள்ள பிரசித்தி பெற்ற பக்ரி சந்தையில் நள்ளிரவு இரண்டரை மணியளவில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ அடுத்த சில நிமிடங்களில் அனைத்து கடைகளுக்கும் பரவி மிகப்பெரிய தீ விபத்தாக மாறியது.

    இந்த தீ விபத்து குறித்து நேரில் பார்த்த சிலர் கூறுகையில், நடைபாதையில் ஏற்பட்ட சிறு தீ, கடைகளில் பரவியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர்.



    இதையடுத்து, தீ விபத்து குறித்து நள்ளிரவே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் மிக கடுமையாக போராடி வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

    தீவிபத்தை அடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KolkataFireAccident #bagriMarketFire
    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில் 7 மேம்பாலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kolkata
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 4-ம் தேதி மேஜெர்ஹட் என்ற மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இதர மேம்பாலங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள 20 மேம்பாலங்களில் 7 மேம்பாலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாலங்களில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    பொதுப்பணித்துறை குறிப்பிட்ட 7 மேம்பாலங்களில் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்தனர். இருப்பினும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலங்களில் சரக்கு வாகனங்கள் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், இந்த மேம்பாலங்களை சீர்செய்வதற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும், அதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஏலம் விடப்பட்டு மிக விரைவில் அனைத்து மேம்பாலங்களும் சீர் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Kolkata
    கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக பேசிய ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி, மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்துக்கு கீழே சென்ற வாகனங்கள் மற்றும் ஆட்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் மேற்குவங்காள மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி பொதுப்பணித்துறை மற்றும் ரெயில்வே நிர்வாகம் தான் இந்த மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
    ×