search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    கொல்கத்தாவில் மேஜெர்ஹர் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் என்ற மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் பேசிய மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம், இந்த மேம்பாலம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து பகுதியில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதேவேளையில், டார்ஜிலிங்கில் இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளை கண்காணித்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இந்த மேம்பால விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KolkataBridgeCollapse
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது பாலம் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ##KolkataBridgeCollapse
    கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #KolkataInfantsBodies
    கொல்கத்தா:
     
    தெற்கு கொல்கத்தா நகரின் ஹரிதேப்பூர் பகுதியில் ஒரு ரியல் எஸ்ட்ட நிறுவனம் அண்மையில் வாங்கிய காலி மனை பகுதியில் தூய்மை பணி நடந்தது.

    அப்போது அங்கிருந்த புல்வெளிக்குள் ஆங்காங்கே 14 பிளாஸ்டிக் பைகள் சிதறிக் கிடந்தன. அவற்றை பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. அந்த பைகளுக்குள் 14 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று குழந்தைகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தா புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது. மனித உடல்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அவை வெறும் மருத்துவ கழிவுகள் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். #KolkataInfantsBodies
    கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AmitShah
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது. #BJP #AmitShah

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே,  நேற்று முன்தினம் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான அறிக்கை வெளியானது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அறிக்கையால் உள்நாட்டு போர் வெடிக்கும் எனக்கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடினார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் 11-ம் தேதி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க செல்லவுள்ளேன். மாநில அரசு அனுமதி தராவிட்டாலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். #AmitShah
    முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி மூளையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பால் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #FormerLSSpeaker #SomnathChatterjee
    கொல்கத்தா:

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் மக்களவை  சபாநாயகராக பதவி வகித்தவர் சோமநாத் சட்டர்ஜி (89) . கடந்த 25-ம் தேதி இவருக்கு மூளையில் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வசித்து வரும் அவருக்கு நேற்று இரவு மீண்டும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #FormerLSSpeaker #SomnathChatterjee 
    மேற்கு வங்காளத்தில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறான ரத்த வகையை செலுத்தி சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #ColumbiaAsiaHospital #InfusingWrongBlood #PoliceFilesCase
    கொல்கத்தா

    கொல்கத்தாவை சேர்ந்தவர் பைசாகி சஹா (31). இவர் வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரது கணவர் கொலம்பியா மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடந்த ஆபரேஷனின்போது ரத்த வகையை மாற்றி செலுத்தி உள்ளதால், அவரது நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அவர் தற்போது எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.



    இதுதொடர்பாக, அவரது கணவர் அபிஜித் சஹா கூறுகையில், கடந்த 5-ம் தேதி எனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்தேன். அவருக்கு ரத்த வகையை மாற்றி ஆபரேஷன் செய்துள்ளனர். அதனால் எனது மனைவி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளார். இதுவரை நான் 2.5 லட்சம் பணம் கட்டியுள்ளேன். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் பில் கட்டினால் தான் சிகிச்சை அளிப்போம் என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    இதையடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் பிதான் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாக அதிகாரி தீர்த்தங்கர் பாகி  கூறுகையில், பைசாகி சஹாவுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். அவரது கணவர் கூறியவாறு, அவரிடம் யாரும் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதில்லை. அப்படி யாராவது செய்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.  #ColumbiaAsiaHospital #InfusingWrongBlood #PoliceFilesCase
    மேற்குவங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை 190 ரூபாய்க்கு விற்பனை செய்த உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலத்தின் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பேர் உணவு சாப்பிட சென்றனர். அவர்கள் நான்கு பேரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

    சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் ஆர்டருக்கான பில்லை கொடுத்துள்ளனர். அதில் ஒரு பிளேட் பிரியாணியின் விலை 190 ரூபாய் என போடப்பட்டிருந்து. இதையடுத்து அவர்கள் நால்வரும் உணவக உரிமையாளர் சஞ்சய் மொண்டால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சஞ்சயை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இந்த கொலைக்கு பிரியாணியின் விலை காரணமாக இருக்காது என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    கொல்கத்தா ஆடுகளத்தில் சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும் என கொல்கத்தா அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார். #KKR #KuldeepYadav
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலாவது தகுதி சுற்றில் மும்பையில் விளையாடிய ஐதராபாத் அணியினர் அங்கிருந்து இங்கு வந்து (கொல்கத்தா) இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும். மும்பை ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது.

    ஆனால் கொல்கத்தா ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். இது எங்களது சொந்த ஊர் மைதானம் என்பதால், இங்கு விளையாடுவது எங்களுக்கு சாதகமான ஒன்று. அவர்கள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறார்கள் அல்லது நாங்கள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறுவதே முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.  #IPL2018 #KKR #KuldeepYadav
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. #KKR #RR #IPL2018 #Playoff
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

    தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கைதேர்ந்தவராக திகழும் தினேஷ் கார்த்திக் (438 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் சுனில் நரின் (327 ரன் மற்றும் 16 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (264 ரன் மற்றும் 13 விக்கெட்), அதிரடியில் மிரட்டும் கிறிஸ் லின் (425 ரன்) ஆகியோர் தான் அந்த அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.



    ஏற்கனவே லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால் அதே ஆதிக்கத்தை தொடருவதில் கொல்கத்தா அணி மும்முரமாக இருக்கிறது.

    தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி ஒரு வழியாக போராடி அதிர்ஷ்டத்தின் துணையுடன் ‘பிளே-ஆப்’ சுற்றை (14 புள்ளி) எட்டியது. முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் (548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் இல்லாத நிலையிலும் கடைசி லீக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்ததால் ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறார்கள். முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

    இந்த மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 7 லீக் ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியே 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-

    கொல்கத்தா: கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், நிதிஷ் ராணா, சுப்மான் கில், பியூஸ் சாவ்லா, ஜாவோன் சியர்லெஸ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

    ராஜஸ்தான்: ராகுல் திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர், ரஹானே (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், சோதி, உனட்கட், லாக்லின்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #KKR #RR #IPL2018 #Playoff
    ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்களை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்த கொல்கத்தா அணியின் பவுலர்களை ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் வெகுவாக பாராட்டினார்.#IPL2018 #KaneWilliamson
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து 8-வது வெற்றியுடன் (16 புள்ளி) 6-வது முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

    இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டுவது போல் சென்ற ஐதராபாத் அணியின் ரன்வேகம், கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் தளர்ந்து போனது. இந்த இலக்கை கொல்கத்தா அணி கிறிஸ் லின் (55 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராபின் உத்தப்பா (45 ரன்), சுனில் நரின் (29 ரன்) ஆகியோரின் அதிரடியின் துணையுடன் 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 6-வது முறையாக ‘சேசிங்’கில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றிக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘டாப்-4 அணிகளில் ஒன்றாக போராடி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்’என்றார்.

    ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாகவே இருந்தது. 200 ரன்களோ அதற்கு சற்று அதிகமாகவே எட்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அந்த ஸ்கோரை நாங்கள் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா பவுலர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். எல்லா பெருமையும் அவர்களையே சாரும். இதுவரை நடந்தது பற்றி கவலையில்லை. ‘பிளே-ஆப்’ சுற்றில் வீரர்கள் சுதந்திரமாக, எங்களது பலத்துக்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமாகும். அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் அடுத்த சுற்றை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார். #IPL2018 #KaneWilliamson
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது யார்? என்பதை நிர்ணயிக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.#IPL2018 #RR #KKR
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் பின் வரிசையில் உள்ள அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

    ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தனது கடந்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை சுவைத்து கம்பீரம் கண்டுள்ளது. அந்த அணி வீரர் ஜோஸ்பட்லர் அடுத்தடுத்து 5 அரை சதம் அடித்து பேட்டிங்கில் அசத்தி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் அபாரமாக விளங்குகிறார். அவர் 7 ஆட்டங்களில் ஆடி 13 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். ரஹானே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அந்த அணிக்கு அவசியமானதாகும்.

    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி அடுத்தடுத்து சந்தித்த 2 தோல்வியில் இருந்து மீண்டு வந்து கடைசி லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி நம்பிக்கை பெற்றுள்ளது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்தது. கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். சுனில் நரின் இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

    இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வி காணும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்து இருக்க நேரிடும். வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IPL2018 #RR #KKR
    ×