search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118381"

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் விமானத்தை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று ரூ. 35 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. #vijaymallya

    பெங்களூர்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெற வில்லை.

    மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையா மீது வரி ஏய்ப்பு புகார்களும் உள்ளன. குறிப்பாக சேவை வரித்துறைக்கு அவர் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அந்த சேவை வரியை வசூலிக்க, விஜய் மல்லையாவின் குட்டி விமானத்தை சேவை வரித்துறை அதிகாரிகள் 2013-ம் ஆண்டு முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் விற்பனை செய்து பணத்தை பெற சேவை வரித்துறையினர் அறிவிப்பு செய்தனர். முதல் தடவை நடந்த ஏலத்தில் யாரும் அதிக பணத்துக்கு ஏலம் கேட்க வில்லை. இரண்டாவது நடந்த ஏலத்திலும் அதிக தொகை கேட்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது முறையாக அந்த குட்டி விமானம் ஏலம் விடப்பட்டது. அப்போது மல்லையாவின் விமானம் ரூ. 35 கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் எடுத்துள்ளது.

    சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மல்லையாவின் விமானம் ஏலம் போய் இருக்கிறது. 650 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பறக்கும் நிலையில் இல்லை. இதனால்தான் அந்த விமானம் மிக, மிக குறைவாக ரூ.35 கோடிக்கு ஏலம் போனதாக தெரிய வந்துள்ளது.

    இந்த சொகுசு விமானத்தில் 25 பேர் பயணம் செய்யலாம். விமான பைலட், பணிப்பெண்கள் 6 பேர் இருந்தனர். இந்த சொகுசு விமானத்துக்குள் படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்த பார் வசதி, கான்பரன்ஸ் ஹால் ஆகிய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ##vijaymallya #tamilnews

    சென்னையில் கேட்பாரற்று ரோடு, தெருக்களில் நிறுத்தப்பட்ட 5 ஆயிரம் வாகனங்களை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. அடுத்த வாரம் இந்த வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரோடுகள் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    சென்னை போக்குவரத்து போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சென்னை சாலைகளில், தெருக்களில் நிறுத்தப்பட்ட 5,300 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    வடக்கு சென்னை பகுதியில் 1-5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சி நிர்வாகம், மெட்டல் டிரேடிங் கார்ப்பரே‌ஷன் இணைந்து பறிமுதல் செய்த வாகனங்களை அடுத்தவாரம் ஏலம்விடுகிறது. முதல்கட்டமாக 300 வாகனங்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.

    இதில் 120 வாகனங்களை ஏலம் விட போலீஸ் துறையில் இருந்து தடையில்லா சான்று (என்.ஓ.சி.) வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை, தெருக்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்ற நிலையில் பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு மற்றும் சுகாதார கேடு, கொசுத்தொல்லைகள் ஏற்படுகின்றன.

    மாநகராட்சி சார்பில் தற்போது 5,300 கேட்பாரற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குள் வாகனங்களின் உரிமையாளர்கள் வந்து உரிய சான்றுகளுடன் வாகனங்களை பெறாததால் அடுத்த வாரம் இந்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

    முதல்கட்டமாக 300 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. மெட்டல் கிராப் டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. வட சென்னை பகுதிகளில் சாலை, தெருக்களில் கேட்பாரற்ற அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    அமெரிக்காவில் மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்று ரூ.13.73 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. #MahatmaGandhi #GandhisignedPostcard

    வாஷிங்டன்:

    இந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது.

    அந்த கடிதத்தில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறேன். அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார். நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது, என எழுதியிருந்தார்.

    இந்த கடிதத்தில் மகாத்மா காந்தி கையொப்பமிட்டிருந்தார். அந்த கடிதத்திற்கான ஏலம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20,233 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 13,73,112) ஏலத்தில் எடுத்துள்ளார்.  #MahatmaGandhi #GandhisignedPostcard
    உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.#freshwater #pearl
    ஆம்ஸ்டர்டாம்:

    உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது. 120 கிராம் எடையும், 7 செ.மீட்டர் நீளமும் கொண்டது. தூங்கும் சிங்கம் போன்ற வடிவிலானது.

    இதுமற்ற முத்துகளை விட 3 மடங்கு பெரியது. 18-ம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள ஆற்றில் விளைந்த முத்து சிப்பியில் உருவானது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.
    புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வீரர் மோனு கோயத் அதிகபட்சமாக ரூ.1½ கோடிக்கு விலை போனார்.#ProKabaddi
    மும்பை:

    2014-ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 6-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் வீரர்களுக்கான ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும் 18 முதல் 25 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஏலத்துக்காக ஒவ்வொரு அணியும் தலா ரூ.4 கோடி வரை செலவிட முடியும். சில அணிகள் ஒரு சில வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துள்ளன. ஏலப்பட்டியலில் 422 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    மும்பையில் நேற்று மாலை நடந்த வீரர்கள் ஏலம் கடும் விறுவிறுப்பாக அரங்கேறியது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த வருடத்தில் 6 வீரர்கள் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் விலைக்கு போய் ஆச்சரியப்படுத்தினார்கள். அதிகபட்சமாக கடந்த சீசனில் பாட்னா பைரட்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1.51 கோடிக்கு ஏலம் போனார். அவரை அரியானா ஸ்டீலர்ஸ் அணி வாங்கியது. மற்றொரு இந்திய வீரர் ராகுல் சவுத்ரியை ரூ.1.29 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி தக்கவைத்தது. இறுதி ஏலத்தொகையை கொடுக்க சம்மதித்து அவரை தன்வசப்படுத்தியது.

    இன்னொரு இந்திய வீரரான தீபக் ஹூடாவை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. நிதின் தோமரை புனேரி பால்டன் அணி ரூ.1.15 கோடிக்கு வாங்கியது. ரிஷாங் தேவாதிகாவை உ.பி.யோத்தா அணி ரூ.1.11 கோடிக்கு ஏலத்தில் தன்வசமாக்கியது. ஈரான் வீரர் பாசெல் அட்ராசாலியை ரூ.1 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

    தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், அமித் ஹூடா, சி. அருண் ஆகிய 3 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துள்ளது. புரோ கபடி வீரர்கள் ஏலம் இன்றும் நடக்கிறது. #ProKabaddi
    6-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் 30-ம் தேதி நடக்கவுள்ளது.#prokabaddi #auction
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் ஈரான், வங்காளதேசம், ஜப்பான், கென்யா, மலேசியா, இலங்கை உள்பட 14 வெளிநாடுகளை சேர்ந்த 58 வீரர்களும் அடங்குவார்கள். 87 பேர் வருங்கால கபடி கதாநாயகர்கள் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்கள். கடந்த சீசனில் ஆடிய 21 வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்து கொண்டு இருக்கின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், அமித் ஹூடா, சி.அருண் ஆகிய 3 வீரர்களை தன்வசம் தக்கவைத்து இருக்கிறது.#prokabaddi #auction
    ×