search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஞ்ச்"

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். #JammuKashmir #PakistanCeasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.  

    இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. நள்ளிரவு வரை இந்த சண்டை தொடர்ந்தது. பாகிஸ்தான் படைகள் சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கிகளை கொண்டு இந்திய முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தின.

    பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர்  படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை உடனே ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரி வகார் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JammuKashmir #PakistanCeasefire
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று ரோந்து பணியின் போது கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். #JammuKashmir #LandmineBlast
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மெண்டார் செக்டாரில் ராணுவ வீரர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பாலாகோட்டில் உள்ள தர்கண்டி கிராமத்தில் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடி திடீரென வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #JammuKashmir #LandmineBlast
    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ரஜோரியின் சுந்தர்பானியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. துப்பாக்கியால் சுட்டும், சிறிய கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்றும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #PoonchLoC #IndianArmy
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
     
    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று மதியம் 2,15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்கினர். 

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி தந்தனர்.

    தற்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையிலும், பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து ஏழாவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.  #Pakistanfires #RajouriLoC #IndianArmy 
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #CeasefireViolation
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் மற்றும் காதி கர்மா பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அவர்கள் துப்பாக்கிகளால் சுமார் 30 முதல் 40 ரவுண்டுகள் வரை சுட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் 
    ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது  
    குறிப்பிடத்தக்கது. #CeasefireViolation
    ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய படையினர் விரட்டியடித்தனர். #PakistanTroopsViolate
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு ஊடுருவ முயற்சித்தனர்.

    இதைக்கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது.

    இதேபோல், நேற்று முன்தினம் இரவு குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து, எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #PakistanTroopsViolate
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை அழித்த ராணுவத்தினர், அங்கிருந்து வெடிபொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.#KashmirMilitants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் சாப்ரியன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும், அங்கிருந்து வெடிபொருள்கள் மற்றும் ஏகே 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #KashmirMilitants
    ×