என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 118578"
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது இந்திய அணி கேப்டன் வீராட்கோலியை விமர்சனம் செய்து இருந்தார்.
அவர் கூறும்போது, கோலி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வில்லை. ஆனால் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் காம்பீர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீராட்கோலி அளித்த பேட்டி வருமாறு:-
ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன்.
ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.
எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.
நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.
நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம் என்றார். #kohli #Gambhircomment
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
இந்திய அணியைப் பொருத்தவரை எஞ்சிய இரு போட்டிகளும் சம்பிரதாய போட்டிகள்தான். எனவே, பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் விக்கெட்டை இழந்தனர். தேனீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.
விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து நிகோலஸ்-கேன் வில்லியம்சன் ஜோடி விளையாடியது. #NZvIND #TeamIndia
தொடர்நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில், 4-வது பேட்டிங் வரிசையில் நான் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். நாம் எந்த வரிசையில் பேட்டிங் செய்கிறோம் என்பதை விட அணியின் சமச்சீர் தன்மை மாறக்கூடாது. அது தான் முக்கியம். பேட்டிங்கில் நான் எந்த வரிசையிலும் களம் காண தயாராக இருக்கிறேன். மீண்டும் 5 அல்லது 6-வது வரிசை என்றாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.
14 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்ட நிலையில், இப்போது 6-வது வரிசையில் இறங்க மாட்டேன் என்றோ, 4 அல்லது 5-வது வரிசை தான் தேவை என்றோ கூற முடியாது. அணிக்கு எந்த வரிசையில் நான் தேவைப்படுகிறனோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவேன்’ என்றார். #AUSvIND #ViratKohli #Dhoni
சிட்னி:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:-
இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தை பார்த்து அசராமல் அவருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.
கோலி ரன் வேட்டையில் ஈடுபடுவார் என நினைக்க தேவையில்லை. அவர் ரன்களை குவிக்க முயல்வார். ஆனால் அவரை கண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பயப்பட தேவையில்லை. அவருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
மிச்சேல் ஜான்சன் சில முறை கோலிக்கு ஆக்ரோஷமான பந்துவீச்ச, உடல் செய்கை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.
உள்ளூரில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பாடு வலிமையாக இருக்க வேண்டும். தற்போதைய அணி ஆக்ரோஷமான மனபான்மையுடன் ஆடாவிட்டால் அது குப்பைக்கு ஈடாகும். வார்த்தைகள், செயல்கள் ஒன்றாக அமைய வேண்டும்.
2014-15 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. கோலி 86.26 சராசரியுடன் 692 ரன்களை குவித்தார்.
நான் அணியின் கேப்டனாக இருந்தால் கோலிக்கு நல்ல தொடக்கம் அமையவிட மாட்டேன். ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் கோலியை அதிகமுறை சிரமத்துக்கு உள்ளாக்கினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #rickyponting #ViratKohli
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.
புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.
ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 106 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. ரோகித் சர்மா (ஆட்டம் இழக்காமல் 152 ரன்கள்), கேப்டன் விராட்கோலி (140 ரன்கள்) ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினார்கள். அவர்கள் எதிரணியினருக்கு வாய்ப்பு எதுவும் அளிக்காத வகையில் விளையாடினார்கள். அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் ஷாட்களை அடிக்கவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தபடி நல்ல உத்வேகத்துடன் விளையாடினார்கள். அவர்கள் இருவரும் நிலைத்து நின்று விட்டால் அவர்களுக்கு பந்து வீசுவதும், விக்கெட்டை வீழ்த்துவதும் மிகவும் கடினமானதாகும். மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டியடித்தனர்.
நாங்கள் பந்து வீசுகையிலும் பிட்ச்சில் பந்து சுழலவில்லை. ஸ்டம்பை குறிவைத்து பந்து வீசி ரன் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்த முயற்சித்தேன். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக இல்லை. 2-வது பேட்டிங் செய்கையில் ஆடுகளத்தின் தன்மை எப்படி? இருக்கும் என்பது முதலில் தெரியவில்லை. ஆனால் கடைசி வரை ஒரே தன்மையுடன் தான் ஆடுகளம் இருந்தது. ஷிகர் தவான் விரைவில் ஆட்டம் இழந்தாலும், விராட்கோலி, ரோகித் சர்மா இணை ஆட்டம் எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. வேகப்பந்து வீச்சிலும், சுழற்பந்து வீச்சிலும் பந்து சுழலவில்லை என்பதால் ரன் இலக்கை சேசிங் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார். நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும், அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார் ரத்தோர்.
இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி பஞ்சபூத தத்துவத்தை விளக்கும் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்