search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ்"

    பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் குரூஸ் 220 மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #Avenger220Cruise



    பஜாஜ் நிறுவனம் காலத்துக்கேற்ப மோட்டார்சைக்கிளில் மாற்றங்களை புகுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. தற்போது தனது இரண்டு மாடல் மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதியை புகுத்தி சந்தையில் புதிதாக களமிறக்கியுள்ளது. 

    இந்நிறுவனத்தின் பிரபல மாடலான அவெஞ்சர் ஸ்டிரீட், குரூயிஸ் 220 ஆகிய இரு மாடல்களிலும் இப்போது ஏ.பி.எஸ். (ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) புகுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிதாக தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 ஏ.பி.எஸ். மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.பி.எஸ். தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    பஜாஜ் அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் மாடல் ஸ்டிரீட் 220 என்றும் மற்றொரு மாடல் குரூஸ் 220 என அழைக்கப்படுகிறது. 

    ஆரம்ப நிலை குரூயிஸ் மோட்டார்சைக்கிளில் இது கட்டுபடியாகும் விலையில் உள்ள ஒரே மாடலாகும். 220சிசி திறன் கொண்ட இரு மாடல்களிலும் 220 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன் 19 ஹெச்.பி. திறனை 8,400 ஆர்.பி.எம். வேகத்திலும், 17.5 என்.எம். டார்க் @7,000 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Overdrive
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 பஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. #bajajdominar



    இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் டாமினர் மோட்டார்சைக்கிளை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வந்த டாமினர் மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

    இந்நிலையில், 2019 டாமினர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. புதிய மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்வோர் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். விரைவில் அறிமுகமாக இருக்கும் டாமினர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் தனது புதிய விளம்பர படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

    அதன்படி புதிய மோட்டார்சைக்கிளின் முன்புறம் புதிதாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக 2019 டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்புறம் அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கே.டி.எம். 390 டியூக் போன்று காட்சியளிக்கின்றன.



    மற்றபடி புதிய மோட்டார்சைக்கிளில் ட்வின்-போர்ட் எக்சாஸ்ட் கேனிஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய டாமினரில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு, சிங்கிள் டோன் நிறம் பூசப்பட்டுள்ளன. தற்போதைய மாடலில் டூயல்-டோன் நிறம் பூசப்பட்டிருக்கின்றன. 

    தற்போதைய டாமினர் மோட்டார்சைக்கிளில் 373.5சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 35 பி.எஸ். பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய என்ஜின் 39 பி.எஸ். பவர் மற்றும் 650 ஆர்.பி.எம். வழங்கும் படி டியூன் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அப்டேட்களின் படி மோட்டார்சைக்கிளின் விலை ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் பஜாஜ் டாமினர் ரூ.1.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    பஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா சி.பி.ஆர்.300ஆர். ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் கே.டி.எம். 250 டியூக் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது.
    பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் விற்பனை கடந்த மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்ததாக தெரியவந்துள்ளது. #BajajAuto #BajajAutosales
    மும்பை:

    இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் நிறுவனம் உள்ளது.

    இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 458 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 லட்சத்து 6 ஆயிரத்து 930 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களின் விற்பனையும் 31 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 63 ஆயிரத்து 970-ல் இருந்து அதிகரித்து இந்த நவம்பர் மாதத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது.

    இதர ரக சரக்கு வாகனங்களின் விற்பனை 3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BajajAuto #BajajAutosales  
    ×